தமிழோவியம்
கவிதை : மரியாதை?
- கவிஞர். இமாம் கவுஸ் மொய்தீன்

Gandhi Stamp

நாட்டின் விடுதலைக்குப்
போராடியவர்கள்!
தியாகிகள்! தலைவர்கள்!
அறிஞர்கள்! அமைச்சர்கள்! 
இவர்களின் சேவையைப்
பாராட்டியும் போற்றியும்
மரியாதை செய்வது
உயர் எண்ணம் தான்!

நாம்
பொதுவிடங்களில்
சிலைகள் வைக்கின்றோம்!
பறவைகள்
எச்சமிட்டுச் செல்கின்றன!

நாம்
அஞ்சல் தலைகள்
வெளியிடுகின்றோம்!
அஞ்சல் ஊழியர்கள்
அவர்கள் முகத்தில்
முத்திரை குத்துகின்றனர்!

நாம்
அவர்கள் படங்களை
ரூபாய் தாள்களில்
அச்சிடுகிறோம்!
அப்பணம் இலஞ்சமாய்
விநியோகிக்கப் படுகிறது!

நாம்
அவர்களின்
உருவப் படங்களை
அலுவலகங்களில்
வைக்கின்றோம்!
அவ்விடங்கள்
ஊழல்வாதிகளின்
புகலிடமாகின்றன!

எதிவரும்
சந்ததியினருக்கு
வழிகாட்டிகள் நாம்!
அறிவுப் பூர்வமாய்
நாம் செய்வது
மரியாதை தானா ?

Copyright © 2005 Tamiloviam.com - Authors