தமிழோவியம்
மனம் போன போக்கில் மனிதன் போகலாமா? : தகைவை சமாளிக்கும் வழிமுறைகள் - 1
- பத்மா அர்விந்த்

தகைவு வரும் போது அதன் அளவை பொறுத்து மனிதன் ஒடவோ அல்லது சண்டையிடவோ ஆரம்பிக்கிறான். இது உயிருக்கு பயந்து மட்டும் அல்ல அன்றாட நிகழ்ச்சிகளில் நாம் அனைவரும் எதிர்வினை ஆற்றும் போது இதில் ஒன்றை தேர்ந்தெடுக்கிறோம். வினை சிறியதாக இருப்பின் நமது எதிர்வினையும் சிறியதாக இருக்கும். துரதிருஷ்டவசமாக, நமது உடல் பல வித மாற்றங்களுக்கு உள்ளாகிறது. மனிதன் சிடுசிடுவெனவும், கோபமுடையவனாகவும், அதிக நிலையின்மை தன்மையுடனும் மாறும் போது இது உடல் நலத்தை பாதிக்கிறது. வாகனங்கள் ஓட்டும் போது விபத்துக்குள்ளாவதும், வேலையில் தவறுகள் ஏற்படவும், நெருங்கிய உறவினருடன் மனத்தாங்கல் வரவும் காரணமாகிறது. தகைவை சமாளிக்க பல வழிகள் உண்டு. இவை 3 குழுக்களில் (groups)அடங்கும்.

1. செயலை ஒட்டி தகைவை அடக்கும் திறன்: இங்கே நம் தகைவின் காரணிகளை எதிர்கொள்ள தேவையான திறமை, சூழ்நிலையை அல்லது நிலைமையில் மாற்றம் விரும்புபவை.

2. உணர்ச்சி பூர்வமாக கட்டுபடுத்தும் திறன்:இங்கே நமக்கு சூழ்நிலையை கட்டுபடுத்தும் சக்தி இல்லை ஆனால் அதை எப்படி உணர்வது என்று மன திடம் பெறுகிறோம்.

3. ஒப்புக்கொள்ளும் மனநிலை அடைதல்: இங்கே நமது கட்டுப்பாட்டுக்குள் அடங்காத ஒரு நிகழ்வு நடந்து விட்டது. நாம் அதை மாற்ற முடியாது என்கிற போது அதற்காக வருந்துவதோ சினம் கொள்ளுவதோ கூடாது என்பதும், மன அமைதி பெறுவதும் வலியுறுத்தப்படுகிறது.

இனி தகைவின் இரு பகுதிகளையும் பல நிலைப்பாடுகளையும் கவனிக்கலாம்.

பலநாள்/காலம் நிலைக்கும் தகைவு: இங்கே நாம் ஒப்புக்கொள்ளும் நிலையில் இருப்பினும், மனம் உடல் சோர்ந்து போக இது காரணம் அழுத்தமும் நம்முடைய காரியத்தை முடிக்கும் திறனும்: பலர் அதிக வேலை பளு இருப்பின் அதுவும் குறைந்த காலத்தில் செய்து முடிக்க வேண்டிய கட்டாயம் இருப்பின் அது செவ்வனே செய்யப்படும் என்ற கணிப்பு குறைந்த காலத்திற்கு நீடிக்கும் தகைவு:இது சாலை விபத்து போன்றது. குறைந்த காலமே இருக்கும் எனினும் காலத்தை பொறுத்து வீரியம் அதிகம்.

தகைவை குறிக்கும் பதிவேடு(diary): இது நமது அன்றாட வாழிவில் தகைவின் காரணிகளை அடையாளம் காட்டும் ஒரு கண்ணாடி. மேலும் ஒவ்வொரு தகைவின் போதும் நாம் எப்படி எதிர்வினை ஆற்றுகின்றோம் என்பதை நமக்கு உணர்த்தும் சிறந்த வழிகாட்டியுமாகும்.

நாம் நாள் தோறும் சில காலத்திற்கு தினமும் அன்று நடந்த நிகழ்வுகளில் அதிகம் நமக்கு தகைவை தந்தது எது என்பதியும் அதற்கு எப்படி எதிர்வினை புரிந்தோம் என்பதையும் எழுத வேண்டும். இப்படி செய்வதால் நமக்கு நமது வாழ்வில் அடிக்கடி தகைவை தரும் நிகழ்வுகள் எதனால் எப்படி வருகின்றது என்பது தெரியும்.

* தகைவை நல்லபடி ஆராய இது உதவும்

*  தகைவின் அளவும் நம்முடைய செயல்பாட்டின் திறத்தையும் ஒப்பிடவும் எந்த அளவு தகவில் நாம்      நன்றாக பணியாற்றுகின்றோம் என்பதையும் கண்டுபிடிக்க முடியும்

* நம்முடைய வினைகள் பயன் தந்தனவா, எப்படி மாற்றி எதிர்வினை புரிந்திருக்கலாம் என்று யோசிக்கவும் வாய்ப்பாக அமையும்.

பயன்படுத்தும் முறை:
 தகைவு பதிவேடு ஒரு முறையுடன் தகவல்களை பதிப்பிப்பதால் நல்ல பயனுள்ளதாகும். இது சில அடிக்கடி வரும் தகைவுகளையும் சில அபூர்வ தகைவுகளையும் பிரித்து பார்க்க உதவுகிறது. தகைவை பதிகும் போது ஒரு முறை வைத்திருப்பது நன்மை பயக்கும். மாலையில் அல்லது இரவில் பதிவு செய்தால் அதை முறையாக செய்யவேண்டும்.

 * எழுதும் போது நம்முடைய மனநிலை எப்படி இருந்தது என்பதையும் எழுதவும்.

 * எழுதும் போது எவ்வளவு செயல் திறன் உங்களுக்கு உள்ளது என்பதை 1-10 வரையிலான அளாவுகோலில் குறிக்க வேண்டும்

* எழுதும் நேரத்தில் தகைவு குறைந்ததா, ஆம் எனில் எது தகைவை குறைத்தது என்பதையும் எழுத வேண்டும்

* நீங்கள் எப்படி அதை கையாண்டீர்கள் என்பதையும் உங்களின் மனநிலலயையும் எழுத வேண்டும்.

ஒரு குறிப்பிட்ட குழுவில் இந்த முறையில் ஒரு வாரம் எழுதி பிறகு அதை ஆராய்ந்து பார்த்ததில் எழுத துவங்கியபின் பங்குகொண்டோர்கள் தகைவை சரியாக எதிர்கொள்ள கற்று கொண்டதாகவும், மகிழ்ச்சியான செயலி பட்டியலிடும் போது அதை மீண்டும் நினைத்து பார்ப்பதால் மனம் உறசாகமடைவதாகவும் தெரிந்தது.


பதிவேடை ஆராயும் முறைகள்:

1. முதலில் பலவிதமான தகைவுகளையும் அதன் காரணிகளையும் இனம் பிரிக்க முடியும். அதிலிருந்து அடிக்கடி நிகழ்வதையும் எப்போதாவது நிகழ்வதையும் இனம் பிரித்து எழுதுங்கள். அதிலிருந்து அதிகம் மன வருத்தத்தை தந்த தகைவுகளை அடையாளம் காட்டுங்கள்.இவற்றை பட்டியலின் அடியில் குறிப்பிடுங்கள்.

2. பட்டியலின் மேலே உள்ள தகைவுகளை நீங்கள் அடக்கவும் எதிர்கொள்ளவும் கற்று கொண்டீர்களே அனால் மற்றதும் எளிதாக கைகூடும்.

3. அதன் பின், மகிழ்ச்சி தந்த செயல்கள், செயல் திறன் அதிகமான நிகழ்வுகள் இவற்றைதகைவின் காரணிகளுக்கு எதிராக பட்டியலிடுங்கள்.இதிலிருந்து உதாரணமாக நீங்கள் ஒரு குறிப்பிட்ட அளவு தகைவு கொள்ளுமிடம் அதிக செயல் திறன் காட்டி இருப்பதாக வைத்துக்கொண்டால், அந்த தகவின் அளவை நிர்மாணிக்க முடியும்.

4. தகைவின் காரணிகளை எப்படி களைய முடியும் அல்லது தடுக்க முடியுமா என்று யோசிக்கவும்

5. கடைசியாக தகைவின் போது எப்படி உணர்ந்தீர்கள் என்பதையும் ஒத்து நோக்குங்கள்.
இப்படி ஒரு வாரம் செய்தால் உங்களுக்கு அதிக தகைவை தருவது என்பதையும், அதை எப்படி சமாளிப்பது என்பதியும் திட்டமிட முடியும். அதே போல எந்த அளவு தகைவு உங்களின் செயல் திறனின் மிக அதிக சக்தி தருகிறது என்பதையும் தீர்மானிக்க முடியும். அது மட்டுமின்றி இதே போல எதிர்காலத்தில் ஒரு சூழ்நிலை வருமானால் எப்படி சமாளிக்க முடியும் என்பது தெரிய வரும்.

அலுவலகத்தில் வரும் எதிர்பாராத தகைவுகளை சமாளிக்கும் விதம் வரும் வாரம்.

Copyright © 2005 Tamiloviam.com - Authors