தமிழோவியம்
திரைவிமர்சனம் : தசாவதாரம்
- மீனா

Dasavatharamசைவ வைஷ்ணவ போட்டி அதிகம் இருந்த 12 ஆம் நூற்றாண்டில் தீவிர சைவனான குலோத்துங்க சோழன்(நெப்போலியன்) சிதம்பரத்தில் உள்ள கோவிந்தராஜ சுவாமியின் சிலையைக் கடலில் வீச உத்திரவிடுகிறார். அதைத் தடுக்க முயலும் தீவிர வைஷ்ணவரான நம்பியை (கமல்), ரங்கநாதர் சிலையுடன் கடலில் தூக்கி விசப்படுகிறார்.

உடனே 21 ஆம் நூற்றாண்டுக்கு பயணிக்கும் கதை - அமெரிக்காவில் உள்ள ஒரு ஆராய்சி மையத்தில் உலகையே உலுக்கக்கூடிய ஒரு பயங்கர விஷக்கிருமியை உருவாக்கும் ஆராய்சியில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானி கமல் கோவிந்த் - அந்த

விஷக்கிருமியின் வெளிப்பாட்டால் உலகில் ஏற்பட உள்ள பயங்கரங்களை ஒரு குரங்கின் மூலமாக அறிந்து கொள்கிறார். அதைக் கிருமியை அழிக்க அவர் முற்படும்போது கமலின்  உயரதிகாரி அக்கிருமியை விற்க முயலுகிறார். இந்தச் சதியை முறியடிக்க முயல்கிறார் கோவிந்த். ஆனால் எதிர்பாராத விதமாக வெள்ளைக்கார வில்லன் பிளட்சர்யும் (கமல்)  அந்தக் கிருமி அடங்கிய சிறிய பெட்டியை தேடுகிறான்.

விஷக்கிருமி விமான பார்சல் மூலமாக இந்தியாவில் உள்ள மூதாட்டி கிருஷ்ணவேணி (கமல்) கைக்கு கிடைக்கிறது.  ஹீரோ, வில்லன் இருவரும் அதை தேடி இந்தியா வர கதை சூடு பிடிக்கிறது. நடுவே கமல் பல வேடங்களில் வந்து போகிறார். பாடகர் அவ்தார் சிங்க், போலீஸ் ஆபீசர் பல்ராம் நாயுடு, நெட்டை கான் என பல வேடங்கள். இறுதியில் அக்கிருமி எப்படி அழிக்கப்பட்டுது என்பதை சுவாரஸ்யமாக முடித்திருக்கிறார்.

Asinபடம் முழுக்க வியாபித்து நிற்கிறார் கமல். பத்து அவதாரங்களில் நம்பியாக வரும் கமல் அருமையிலும் அருமை. வைஷ்ணவ பெரியோர்கள் செய்து கொள்ளும் சமாராஷனையை கைகளில் காண்பிப்பது - பிரமிப்பு. உடம்பெல்லாம் அலகு

குத்தி அந்தரத்தில் தொங்கவிடும்போது பரிதாபம், சிலிர்ப்பு, தைரியம் மூன்றையும் உணரவைப்பது அவரது உழைப்பிற்கு சான்று. தலித் தலைவராக வரும் பூவராகன் கமல் குரல் ஏற்ற இறக்கம், விழி அசைவுகள், உடல்மொழி அனைத்திலும்

வித்தியாசப்படுகிறார். இந்திய உளவுத்துறை அதிகாரியாக வரும் பல்ராம் நாயுடு கமல் படத்தில் காமெடி சீன்கள் இல்லையே என்ற குறையை நிவர்த்தி செய்கிறார். வயதான கிழவியாக வரும் கமல் - மேக்கப்பில் கொஞ்சம் பயமுறுத்தினாலும்

ஓக்கே ரகம். புஷ்ஷாக வரும் கமல் புஷ்ஷின் பாடி லேங்குவேஜ், அபத்தப் பேச்சு ஸ்டைல் அனைத்தையும் மிகத் தத்ரூபமாகக் கொண்டுவந்திருக்கிறார். ஒரு காட்சியில் அந்த உயிர்க்கொல்லி ஆயுதம் பரவினால் அது தாக்காதிருக்க எ

வ்வளவு NaCl வேண்டியிருக்கும் என்பது பற்றிப் பேச்சுவர, புஷ் உடனே பேசாமல் அணுகுண்டு போட்டு அழித்துவிடலாமா? என்று கேட்பது சூப்பர். வில்லன் பிளட்சராக வரும் கமலும் குங்பூ மாஸ்டரும் தங்கள் சண்டைத் திறமைகளால் வி

யக்க வைக்கிறார்கள். உயர மனிதராக வரும் கலிபுல்லாக்கான் மற்றும் பாப் பாடகர் அவதார் கேரக்டர்களில் சுவாரசியமாக குறிப்பிட ஒன்றும் இல்லை.

12 ஆம் நூற்றாண்டுக் கமலின் மனைவியாக 10 நிமிடம் வந்தாலும் அசர அடிப்பதிலாகட்டும் - 21 ஆம் நூற்றாண்டு அக்ர†¡ரத்துப் பெண்ணாகட்டும் அஸின் அம்சமாய் இருக்கிறார். பயந்த சுபாவமும், துடுக்குத்தனமுமாய் தமிழ் திரையுலகில் நடிக்கத் தெரிந்த நடிகைகளில் தானும் ஒருத்தி என்பதை மிக அழகாக - ஆழமாக தெரிவித்துள்ளார் அசின்.

படத்தில் ஜெயப்பிரதா, நாகேஷ், கே.ஆர் விஜயா, ரமேஷ் கண்ணா, எம்.எஸ் பாஸ்கர், சந்தானபாரதி, டைரக்டர் பி.வாசு போன்ற பிரபலங்களும் இருக்கிறார்கள். முக்கியமாக நெப்போலியன் - பத்து நிமிடங்களே வந்தாலும், வளவளவென்று வசனம் பேசாமல் வெறும் பார்வைகளால் அசர வைத்திருக்கிறார். கிட்டத்தட்ட வில்லியாக வரும் மல்லிகாவைப் பற்றி சொல்ல பிரமாதமாக ஒன்றும் இல்லை.

மணல்கொள்ளை, ஆன்மீக, நாத்திக வாதங்கள், அதிபர் புஷ்ஷின் செயல்பாடுகள்  என போகிறபோக்கில் இன்றை சமூகத்தை வசனங்களால் சாட்டையடி அடிக்கிறார் வசனகர்தா கமல். கமலுக்கும் அசினுக்கும் இடையே நடக்கும் ஆன்மீக, அறிவியல் பூர்வமான தர்க்கங்களில் பொதிந்துள்ள அர்த்தங்களும் - நீங்க சாமி இல்லைன்னு சொல்பவரா என்று அசின் கேட்கும் கேள்விக்கு நான் அப்படிப்பட்டவன் இல்லை - சாமி இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைப்பவன் என்று கமல் பதில் சொல்வது கமல் பஞ்ச். படத்திற்கு கதை - திரைக்கதை - வசனம் கமல் தான்.

சமீர் சந்தா, தோட்டாதரணி, எம்.பிரபாகரன் ஆகியோரின் கலை அமைப்புகளும் தேவிஸ்ரீ பிரசாத்தின் பின்னணி இசையும், ஹிமேஷ் ரேஷ்மியாவின் பாடல் இசையும் படத்தின் மிகப்பெரிய பலம். ஒளிப்பதிவாளர் ரவிவர்மனை என்ன பாராட்டினாலும் தகும் - குறிப்பாக அந்த ஓப்பனிங் காட்சிகளும் சுனாமிக் காட்சிகளும் அசர வைக்கின்றன.

படத்தில் சில குறைகளும் இருக்கின்றன. குறிப்பாக சென்னையில் பல வருடங்கள் இருப்பவருக்கே முதல் முறையாக ஒரு இடம் விட்டு ஒரு இடம் சென்றால் வழி சரியாகத் தெரியாது. ஆனால் அமெரிக்காவிலிருந்து அப்போதுதான் இந்தியா வந்த பிளட்சர், கோவிந்த் எங்கு சென்றாலும் பின்தொடர்ந்து சென்று விடுகிறான். அவனுக்குகட்டிடம் கட்டும் இடத்தில் சாரங்களுக்கிடையே லிப்ட் ஆபரேட் செய்யத்தெரிகிறது. மேலும் பிளட்சர் துப்பாக்கியால் கோவிந்திற்கு குறிவைக்க - ஆனால் அது அவதாரின் கழுத்தில் பட்டுவிட அதன் மூலமால அவரின் தொண்டை கான்ஸர் ஆபரேஷன் செய்யாமலேயே சரியாவதும் அதை மருத்துவ அதிசயம் என்று டாக்டர் கூறுவதும் ரொம்ப ஓவர்.

ஆனாலும் மணிக்கணக்காக சிரமப்பட்டு மேக்கப் போட்டுக்கொண்டு 10 வேடங்களில் அற்புதமாக நடித்த கமலுக்கும், நடிப்பு, கதை, திரைக்கதை, வசனம் என்று அனைத்திலும் ஈடுபடுத்திக்கொண்ட கமலின் அசராத உழைப்பிற்கு இணையாக ஈடுகொடுத்து படத்தை வெற்றிகரமாக இயக்கியதற்காக இயக்குனர் கே.எஸ் ரவிகுமாருக்கும் பாராட்டுகள். மொத்தத்தில் தசாவதாரம் ஏமாற்றவில்லை..பிரமிக்க வைக்கிறது.

Copyright © 2005 Tamiloviam.com - Authors