தமிழோவியம்
இந்து மதம் என்ன சொல்கிறது ? : உருவ வழிபாடு
-

வேதங்களில் உருவ வழிபாடு சொல்லப்படவில்லை. எல்லாவற்றுக்கும் வேதத்தையே ஆதாரமாக வைத்துக் கொண்டிருக்கும் நாம் விக்கிரக ஆராதனை செய்வது ஏன் ? அதையும் மனித வடிவத்தில் வைத்திருப்பது ஏன் ?

Chinmayanandhaவேதங்கள் அக்கினியைத் தவிர எந்தத் தேவதையையும் குறிப்பாக உணர்த்தவில்லை. இயற்கையின் சக்தி வடிவங்களாகவே அவை கருதப்பட்டன. இப்படி வைத்துக்கொள்ளும்போது வழிபாட்டில் உள்ள சிரமத்தை, அன்று ஞானாசிரியர்களாக இருந்து சொல்லிக் கொடுத்தவர்கள் புரிந்து கொண்டிருக்க வேண்டும். சாதரண மனிதனும் புரிந்து கொண்டு, தெய்வ வடிவங்களாகக் கருதி வழிபடும் முறையை அப்போது அவர்கள் உருவாக்கினார்கள். தியானத்தில் ஈடுபடவும், மனத்தை ஒருமுகப்படுத்தவும் அந்த வழிபாட்டு முறையே சிறந்தது என்று அவர்கள் கருதினார்கள்.

"உன்னுடைய தந்தையும் தாயும் நீ கண் முன்னால் கண்டு வணங்க வேண்டிய உயிருள்ள தெய்வங்கள்" என்று அவர்கள் சொல்லிக் கொடுத்தார்கள். பிறகு அந்தத் தாய் தந்தை வடிவங்களாகவே அம்மனையும் ஈருவரனையும் அமைத்துக் கொடுத்தார்கள். அந்த உருவத்திலேயே வழிபாட்டையும் நடத்தக் கற்றுக் கொடுத்தார்கள். உயிருள்ள தெய்வங்களாகப் பெற்றோரை வணங்க முற்பட்டவன், அந்த வடிவத்தில் உள்ள இறைவனையும் உயிர்ப்புள்ள பூஜையினால் வழிபடத் தொடங்கினான். விக்கிரக ஆராதனை என்பது இப்படித்தான் ஏற்பட்டது.

- சுவாமி சின்மயானந்தர். (Discourses on Taittiriya Upanishad)

Copyright © 2005 Tamiloviam.com - Authors