தமிழோவியம்
கவிதை : ஹைக்கூ
- கவிஞர். இமாம் கவுஸ் மொய்தீன்

  விளை நிலங்கள்
  விலை நிலங்கள்
  புதுமனை புகுவிழா!

  அமைதி தேடலில்
  மதம் பிடித்தது
  தீவிரவாதி!

  வாழை மாவிலை தோரணம்
  காத்திருக்கிறது
  குப்பைத் தொட்டி!

  மது,மாது,பெட்டி
  அடிமையாகும்
  நீதி!

  இறந்த மனிதனின்
  இதயம் வாழும்
  உறுப்பு தானம்!

  மழலைப் பூவுக்குத்
  தேனூட்டுகிறது
  தொப்புள் கொடி!

  அமைதியை நிலைநாட்ட
  ஆயுதங்களின் பக்கம்
  காவல்துறை!

   எத்தனை நதிகளைக் குடித்தாலும்
  தணியாத தாகம்
  கடலாசை!

  எச்சில் பதவிக்கு
  எத்தனை கோடி செலவு?
  ஏழை இந்தியா!

  தீவிர வாதம்
  ஒழிக்கப் படத்தான் வேண்டும்
  உருவாக்கியவர்களை?

Copyright © 2005 Tamiloviam.com - Authors