தமிழோவியம்
கவிதை : என்ன இது
- சுரேஷ், சென்னை

காலையில் ஏனோ பேப்பர் பையன் வரவே இல்லை
கதவுடைக்கும் சத்தத்தோடு வரும்
அந்த பால்கார பாட்டிக்கு என்ன ஆச்சு ?

சுப்பரபாத பாட்டில் ஏனோ MS சப்தம் குறைகிறது
வாசலில் கோலம் பார்த்தேன் ! அது மட்டும் இருந்தது
ஆனால் அது நேற்று வரைந்தது.

இருபத்தியைந்து வருட வேலைகாரி செல்விக்கு தான் என்னாச்சு
மருமகளின் ஒரு நாளில் ஒரு வார்த்தை
"மாமா வரேன்" என்பதும் 
இன்று மௌனக்கொடி காட்டியதே

பூஜையறையின் அலங்காரிப்பில் ஒரு குறைவின் சத்தம்
அவசர மிதியில் மகனோ
மோட்டார் சைக்கிளில் பறந்தான்
முன்றாம் கியரில்.

தேடிபார்த்தேன் என் மொபயில் -  காணவில்லை
தொலைபேசி உதவியோடு மொபைல் தேட ஆரம்பித்தேன்
"தொலை பேசிக்கும் ஏன் இந்த கோபம்"
தொலை பேசியில் பதிவு செய்த ஒரு பெண்ணிண் சப்தம்
சன் செய்திகள் - நிர்மலாவின் குரலில்
"இந்த வசதி இந்த தொலைபேசிக்கில்லை"

அடடா out going calls are cut !
பொறுமையிழந்தேன் ...

குடும்பத்தின் பெரியவர்
என் செல்லப்பேரன்
டீவி  ரிமோட்டிற்கு அதிபதி
என்ற முன்று பட்டத்திற்கு  சொந்தக்காரணிடம் கேட்டேன்
என்னப்பா இதெல்லாம்,

முட்டாள் தாத்தா
இதுகூடவா தெரியவில்லை
இன்று உங்களுக்கு

“RETIREMENT”

Copyright © 2005 Tamiloviam.com - Authors