தமிழோவியம்
பெண்ணோவியம் : தாய்
-


Jayanthi Narayananஇனி வரும் வாரங்களில் பெண்ணோவியம் பகுதில் புதிதாய் எழுத இருப்பவர் திருமதி. ஜெயந்தி நாராயணன்.

20 வருட மத்திய அரசு பணியிலிருந்து எழுத்து மேல் இருந்த ஆவலால் விருப்ப ஓய்வு பெற்று சமையல் குறிப்புகள், பயணகட்டுரை, எளிய மருத்துவ குறிப்புகள் என எழுத ஆரம்பித்தார். தனது தன்னம்பிக்கைக்கும், வெற்றிகளுக்கும் முதற்காரணம் தனது கணவர் என்பதை ஜெயந்தி குறிப்பிட தவறுவதில்லை. சமையலில் குறிப்பாக ஆர்வம் அதிகம் இருந்ததால் அதில் புதுப்புது முறைகளை கையாண்டு புதுவித சுவை, சத்துநிறைந்த 1008 வகை சமையற்குறிப்புகளை எழுதியுள்ளார்.

இயற்கை மருத்துவத்திலும் ஆர்வமுடைய ஜெயந்தி அதைப் பற்றி விவரமாக அறிய விரும்பி ஒருவருட டிப்ளமா பயிற்சியில் சேர்ந்து படித்து உணவே மருந்தாக எப்படிப் பயன்படுகிறது என்பதை முழுமையாகத் தெரிந்து கொண்டார்.  இதன் தொடர்பான பிராணாயாமாம், யோகாசனம் முதலியவற்¨றயும் கற்றுத் தேர்ந்தார். மேலும் இத்துடன் இனைந்த முறையான ரேக்கி ஹீலிங், கிரிஸ்டல் ஹீலிங் ஆகிய மருந்தில்லா மருத்துவ முறையினையும் முறையாக டாக்டர்.வாசு என்பவர் மூலமாக கற்று அறிந்து தனது உறவினர்கள், நண்பர்களுக்கு உதவி வருகிறார்.

2000 வருடம் முதல் இவருடைய கட்டுரைகள், வீட்டுக்குறிப்புகள், சமையற்குறிப்புகள் ஆகியவை மங்கையர் மலர், சிநேகிதி, க்ருஹஷோபா ஆகிய இதழ்களில் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இவர் மூன்று முறை மங்கையர் மலரில் 'இம்மாத இல்லத்தரசி' பகுதியில் முதல் பரிசு பெற்றுள்ளார்.

ஜெயந்தியை தமிழோவியம் சார்பாக வருக வருக என்று வரவேற்கிறோம். நம் வாசகர்களுக்கு இனி புதுவிதமான விருந்து காத்திருக்கிறது!! சமைத்து, ரசித்து உங்கள் கருத்துகளை ஜெயந்திக்குச் சொல்லுங்கள்..

- ஆசிரியர்.தாய் - ஜெயந்தி நாராயணன்

1. உலகத்திலுள்ள ஒரே ஒரு புனிதமான உருவம் தாய்தான். (கோல் ரிஜ்)

2. சொர்க்கம் அன்னையின் பாத அடியில் கிடக்கிறது   (முகம்மது நபி)

3. ஒரு சமுதாயத்தின் எதிர்காலமே தாய்மார்களிடம் குடி புகுந்துகொண்டிருக்கிறது. பெணகளால் உலகம் அழியிமென்றால் தாய் ஒருவளால்தான்

அதை தடுத்து நிறுத்தமுடியும். (டியீவிலர்)

4. உலகத்திலுள்ள செல்வங்கள் அனைத்தயும் ஒரு தட்டிலும், தாயை ஒரு தட்டிலும் வைத்தால் தாயின் தட்டுதான் தாழ்ந்திருக்கும். (லார்ட் சாங்கேல்)

5. ஒரு முறை தாயை சுற்றி வலம் வந்து வணங்கினால் ஆயிரம் முறை கங்கையில் நீராடிய பலன் கிடைக்கும். (கிருபானந்த வாரியார்)

6. இன்று நான் அடைந்துள்ளவைகளும் இனி அடையபோகின்றவைகளும் என் தாய்க்கே சொந்தமாகும். (ஆபிரகாம் லிங்கன்)

7. பிரசவத்தை நினைத்தால் பெண் ஜென்மத்தை போன்ற பாவச்சுமை உலகில் இல்லை. ஆனால் தாய்மை குறிய சிறப்பை எண்ணும்போது அடடா

ஆண்களுக்கு அந்த பெருமை கிடைக்கவில்லையே என வருந்துகிறேன்.  (பெர்னாட்ஷா)

8. கடவுள் தான் எங்கும் இருக்க முடியாது என்பதற்காகவே தாயை படைத்தான். (யூத் பழமொழி)

9. தாயின் அன்பை வெளியிட உலகத்தில் எந்த மொழியிலும் போதிய வார்த்தைகள் இல்லை (சோபீன்)

10. தாயின் இதயம்தான் குழந்தையின் பள்ளி  (ப்ரோர்)

11. அழகிய சிரிப்பைவிட தாயின் கண்ணீரே வலிமையானது. (ஷேக்ஸ்பியர்)

12. தாய்மை என்பதுதான் பெண்களின் மிக முக்கிய அணிகலன். (யாரே)

மேலே கூறியுள்ள பொன்மொழிகள் யாவும் ஒவ்வொரு குழந்தையும் படித்து மனதில் அழியாமல் நினைவு கொண்டால் எந்த நிலையிலும் தாயிடம் உள்ள அன்பு மாறாது. இளமை முதலே தாயின்பால் அன்பும் மரியாதையும் கொண்டு வளரும் ஒவ்வொருவரும் வாழ்க்கையில் நிச்சயமாக சாதனை படைப்பார்கள் என்று கூறி முடிக்கிறேன்.

Copyright © 2005 Tamiloviam.com - Authors