அரசு ஒவ்வொரு குடிமகனுக்கும் பதில் சொல்ல கடமைப்பட்டுள்ளது. அவர்கள் கேட்கும் அனைத்து தகவல்களையும், சில ரகசிய கோப்புக்களைத் தவிர அனைத்தையும் வழங்க அரசுக்கு பொறுப்பு உண்டு என்று 1975ம் ஆண்டு உச்சநீதி மன்றம் அளித்த தீர்ப்புக்கு தற்பொழுது மத்திய அரசின் மூலம் விடிவு பிறந்துள்ளது.
மத்தியில் ஆட்சி நடத்தி வரும் ஜக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் 146 திருத்தங்களுடன் குரல் வாக்கெடுப்பு மூலம் கடந்த ஜீன் மாதம் தகவல் அறியும் உரிமைச் சட்டம் ஜம்மு கா~;மீர் மாநிலத்தை தவிர பிற மாநிலங்களில் செயல்படும் விதத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தவுடன் 120 நாள்களுக்குப் பின் அமலுக்கு வந்துள்ள இச்சட்டம் பொதுமக்களுக்கு ஒரு அரசாங்கம் எப்படி செயல்படுகிறது என்பதை தெளிவாக தெரிந்து கொள்ள இந்திய குடிமக்களுக்கு பெரிதும் உதவும் என்று சமூகவியல்வாதிகள் ஆணித்தரமாக சொல்கிறார்கள்.
கருப்பையா விவசாயத் தொழிலை செய்து வருபவர். இவருக்கு அரசின் சார்பில் வழங்கப்படும் ரேஷன்
ஜோக் |
நர்ஸ் : டாக்டர்களைக் கிண்டல் பண்ணி ஜோக் எழுதுற எழுத்தாளர் நீங்கதானே ?
எழுத்தாளர் : ஆமாம். அதுக்கென்ன ?
நர்ஸ் : உங்களுடைய ஆபரேஷனை நீங்களேதான் செய்துக்கணும்னு டாக்டர் சொல்லிட்டார்.
எழுத்தாளர் : ???
| அட்டையை இவர் தொலைத்து விட்டார். அதற்கு மாற்றாக மாற்று நகல் அட்டை கேட்டு விண்ணப்பித்தார். ஆனால் அதற்கான பதில் அரசு அதிகாரிகளிடம் இருந்தும், வட்டல் வழங்கல் துறையினரிடமிருந்தும் இவருக்கு முழுமையாக வரவில்லை. உடனே கருப்பையா தன்னார்வ அமைப்பு ஒன்றின் உதவியோடு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை பயன்படுத்தி தனது மனு எந்த இடத்தில் இருக்கிறது என்பதை அறிய மனு கொடுத்தார். அதன் விளைவு கருப்பையாவுக்கு மின்னல் வேகத்தில் தகவல் கொடுக்கப்பட்டு அவருக்கு மாற்று ரேஷன் கார்டு வழங்கப்பட்டது என்று சொல்லும் நுகர்வோர், மனித உரிமைக் கழக தலைவர் ராமச்சந்திரராஜா தகவல் அறியும் சட்டத்தை இனி ஒவ்வொரு குடிமகனும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதற்காக எங்கேயும் அலைய வேண்டாம். அருகில் இருக்கும் தபால் நிலையத்தில் விண்ணப்பம் கொடுத்தாலே போதும். தகவல்கள் விண்ணப்பம் கொடுத்தவரின் வீடு தேடி வரும் என்கிறார்.
மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசு எப்படி செயல்படுகிறது என்பதை அறிய மக்கள் விரும்பினாலும் அதற்கு தேவையான வழிகளை அரசும், அரசு அதிகாரிகளும் மறைப்பதற்கு தான் முயற்சி செய்வார்கள். அந்த நிலைமை மாறி ஒரு அரசு எப்படி செயல்படுகிறது என்பதையம், அரசின் ஒரு கோப்பை பார்வையிடவும் இந்த தகவல் அறியும் உரிமைச் சட்டம் அனுமதியளிக்கிறது. உதாரணத்திற்கு கடந்த 25 ஆண்டுகளாக நம் நாட்டில் மக்கள் தொகை, பொருளாதார வளாச்சி, அன்னிய முதலீடு பற்றிய புள்ளி விபரங்களை ஒரு அரசாங்க அலுவலகத்தில் போய் கேட்டால் அதற்கு பதிலே கிடைக்காது. ஆனால் தற்பொழுது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் படி மேற்சொன்ன தகவல்களை கடைக்கோடி குடிமகன் வரை அறிந்து கொள்ள முடியும். அதற்கு அவர்கள் செய்ய வேண்டிய ஒன்று ரூபாய் 25 ரூபாய் கட்டணம் செலுத்தி ஒரு விண்ணப்பம் அருகில் இருக்கும் தபால் அலுவலகத்தில் கொடுத்தால் போதுமானது. விண்ணப்பம் கொடுத்து 30 நாட்களுக்குள் தகவல்கள் விண்ணப்பதாரருக்கு அனுப்பியாக வேண்டும் என இச்சட்டம் சொல்கிறது. அப்படி அனுப்பத் தவறும் துறையைச் சார்ந்தவர்கள் மேல் வழக்குத் தொடர்ந்து அவர்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்கவும் இச்சட்டம் வழி வகுக்கிறது.
அரசுகள், அதன் அமைப்புகளின் செயல்பாடுகள் வெளிப்படையாகவும், ஊழல் மற்றும் முறைகேடுகள் இல்லாமலும் இருப்பதை உறுதிப்படுத்துவதை இச்சட்டம் உதவுகிறது. ஜம்மு கா~;மீர் மாநிலம் தவிர நாடு முழுவதும் அமலுக்கு வரும் இச்சட்டத்தின் மூலம் ஆவணங்கள், கடிதங்கள், மின்னஞ்சல்கள், பத்திரிக்கை குறிப்புகள், அரசின் சுற்றறிக்கைகள், உத்தரவுகள், ஒப்பந்தங்கள், மின்னனு வடிவத்தில் உள்ள புள்ளி விபரங்கள் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் பொதுமக்கள் சம்மந்தப்பட்ட துறைகளிடமிருந்து பெற உரிமை வழங்கப்படுகிறது. இந்தச்சட்டத்தின் கீழ் மத்திய தகவல் ஆணையம் ஒன்றும், மாநிலங்களில் மாநில தகவல் ஆணையம் ஒன்றும் அமைக்கப்படும். இது தொடர்பான புகார்களை இந்த ஆணையங்கள் தான் விசாரனை செய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய மாநிலங்களில் தமிழ்நாட்டில் தான் 1997ம் ஆண்டு தி.மு.க ஆட்சியில் இந்த சட்டத்தை தமிழகத்தில் முதன் முறையாக கொண்டு வந்தனர். அவரைத் தொடர்ந்து கேரளா, கர்நாடகா, டில்லி, கோவா, அசாம், மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட ஒன்பது மாநிலங்களில் இச்சட்டம் ஏற்கெனவே அமலில் இருந்து வருகிறது. இந்நிலையில் மத்திய அரசு தேசிய அளவில் இச்சட்டத்தை கொண்டு வருவதற்கு அருணாய் ராய் என்ற தமிழ் பெண் தான் காரணம். தகவல் பெறும் உரிமையை கேட்டு போராடி மஸ்தூர் கிஸன் சக்தி சங்கத்தை ஏற்படுத்தி அதன் மூலம் இந்திய அளவில் பெரும் போராட்டம் நடத்தி வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் அதிகார து~;பிரயோகம் மற்றும் லஞ்சத்தைத் தடுக்க முடியும் என்று இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது என்கிறார் தமிழகத்தில் இச்சட்டத்தை பயன்படுத்தி பல ஆவணங்களை பெற்ற வழக்கறிஞர் ராமன்.
இச்சட்டத்தின் மூலம் எளிதாக, குறிப்பிட்ட கால வரையறைக்குள் எவ்வித அதிக செலவுமின்றி தகவல்களை பெற முடியும் என்று பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்திருந்தாலும் இச்சட்டம் சாமானிய மக்களுக்கு பயன்படாது என்ற கருத்தும் இருக்கத் தான் செய்கிறது. ஏனெனில் முழுமையான தகவல்களை அரசாங்க அமைப்பு சார்ந்த துறைகள் தருவதில்லை என்ற குற்றச்சாட்டும் இருக்கிறது. ஒரு விரிவான தகவலை எதிர்பார்த்து காத்திருக்கும் பொழுது தேவையான அடிப்படை தகவல்களை மட்டுமே வருவதாக குற்றம் சாட்டுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இந்தச் சட்டம் டில்லி, கோவா, கர்நாடகா மாநிலங்களில் தான் சிறப்பாக செயல்படுகிறது என்றும் தன்னார்வ அமைப்புக்கள் சொல்லி வருகின்றன.
எது எப்படியோ மாநில அளவில் மட்டும் இருந்த தகவல் பெறும் உரிமைச்சட்டம் தற்பொழுது தேசிய அளவில் கொண்டு வரப்பட்டு நாங்கள் மக்களுக்குத் தேவையான அனைத்துத் தகவல்களையும் தருகிறோம். இதற்காகவே பல அரசாங்க அலுவலகங்களில் பொது தகவல் மையத்தை ஏற்படுத்தியிருக்கிறோம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இது எந்த அளவில் வெற்றி பெறப் போகிறது என்பதை ஒரு சில ஆண்டுகளில் தெளிவாக நிர்ணயித்து விடலாம்.
|