தமிழோவியம்
கவிதை : காலம் நம் தோழன்
- சுரேஷ், சென்னை


தாங்கமுடியா
அதிர்ச்சி

உற்றார் உறவினர்களின்
பிரிவால் கவலை

கடன் பிரச்சினைகள்
அவமானங்கள்

நோயால்
மரணபயம்

ஆசைகள் பல
அதில் ஒன்றும் சாதிக்க முடியா எரிச்சல்

முதுகில்
குத்தியவன் மேல் பழி

சுயமரணம் தான் அடுத்த தீருமானம்
ஆனால் பயம்

நன்றி கெட்ட மனிதனை
செருப்பால் அறைய துடிப்பு

அடுத்தவனை குறை சொல்லியே வாழும்
மனித மிருகத்தின்
பொய் முகத்திறையை கிழிக்க ஆசை

ஏமாற்றிய காதலியை
இழந்த ஏக்கம்

அவள்
நன்றாக வாழ்ந்து போகட்டும்
என்ற மன்னிப்பு

மாற்றங்களை ஏற்க முடியா குழப்பம்
சொல்ல முடியா வேதனை

இத்தனை மனவலிகளிலிருந்து
வேண்டுமா விடுதலை ?

இந்த கவிதையை அடுத்த மாதம்
இதே நாளில் படித்து பாருங்கள்

காலம் நல்ல வைத்தியர் !

Copyright © 2005 Tamiloviam.com - Authors