தமிழோவியம்
சிறுகதை : சூப்பர்ம்மா!
- ஹரிஹரன்

கல்யாணம் ஆகி தனி குடித்தனம் போனதில் இருந்து ஞாயிற்றுகிழமை மதியான சாப்பாட்டுக்கு மட்டுமே தாய் வீட்டுக்கு வருவான் கபில்.

அவனுக்காகவே முந்திரி அதிகம் போட்டு செய்த பொங்கலை பரிமாறினாள் தாய் ராஜம். "போதும்மா போதும்!" என்றவாரே.. "அம்மா என்னால அடுத்த ஞாயிற்றுகிழமை வர முடியாது. எனக்கு காலையில 10 மணிக்கு ஆபிசு இருக்கு, 4 மணிக்குத்தான் முடியும். வந்துட்டு போறதுலாம் கஷ்டம்"

"எல்லா அவ சொல்லி அனுப்பி இருப்பா ! திருவான்மியூர்லு இருந்து தி.நகர் வரதுக்கு 30 நிமிஷம் தான் ஆகும்! வந்துட்டு போன என்ன?" என்று மனதில் நினைத்தவாரே, "சரிப்பா உன் சவுகரியம் போல செய்" என்றாள் ராஜம்

"சூப்பர்ம்மா! நீ எவ்வளவு அழகா சுழ்நிலைய புரிஞ்சிக்கற, அவ என்னடான்னா, 'ஏன் மதியானம் முடியலேன்னா காலைல போயிட்டு வாங்க, ஒருநாள் காலைல 7 மணிக்கு எழுந்திருச்சா என்ன ? வாரம் பூராதான்
தூங்கரிங்களே! இங்க இருந்து 30 நிமிஷம் தான? வாரத்துக்கு ஒரு தடவைதான் போறீங்க, அதுக்கு கூட சோம்பேறித்தனமா'னு கேக்கறா?!"

"அவ அவதான்! நீ நீதான்மா!" என்றான் கபில்.

ஏதோ புரிந்ததுபோல தலையாட்டினாள் ராஜம்..

Copyright © 2005 Tamiloviam.com - Authors