Tamiloviam
நவம்பர் 11 2004
தராசு
கார்ட்டூன்
மேட்ச் பிக்சிங்
சிந்திக்கச்செய்த சில சிங்கைச்செய்திகள்
காந்தீய விழுமியங்கள்
கட்டுரை
முத்தொள்ளாயிரம்
திரைவிமர்சனம்
சிறுகதை
கட்டுரை
சமையல்
கட்டுரை
நாங்க ரெடி நீங்க ரெடியா ?
 
  முதல் பக்கம்
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
கட்டுரை : யாஸர் அரா·பத்
- பாஸ்டன் பாலாஜி
| Printable version |  

இந்தியா சென்றுவிட்டு களைப்பாக அமெரிக்கா திரும்பியபோதுதான் அந்த நேர்முகம் எனக்கு கிடைத்தது. ட்ரிம் குறுகுறு மீசை, ஒல்லியான உடல், இந்திய முக அமைப்பு கொண்ட வாடகை வண்டி ஓட்டுநர். விமானதளத்துக்கு உள்ளே வர அனுமதி இல்லாததால், பனி பெய்யாத குளிர் இரவில் வெளியில் என் பெயர் தாங்கிய பலகையுடன் காத்திருந்தார். புகழ்பெற்ற அமெரிக்கத் தொலைகாட்சித் தொடர்களான 'டேக்ஸி கேப் கன்·பஷன்ஸ்' போன்றவை பார்த்ததாலோ என்னவோ, வழக்கம் போல் பேச்சு கொடுத்தேன்.

டாக்ஸி டிரைவர் பாலஸ்தீன நாட்டவர். குடும்பம் மிகவும் வறுமையில் இருக்கிறது. இன்னமும் மணம் முடிக்கவில்லை. ஒரு நாட்டை குறித்து '·பாரின் பாலிசி', 'நியு யார்க் டைம்ஸ்', 'பிபிசி' என்று படிப்பதை விட அந்த நாட்டின் குடிமகன்களிடம் அரை மணி நேரம் பேசினால் ஓரளவு தெளிந்த அலசல் கிடைக்கும். நான் இந்தியாவில் இருந்து கிளம்பிய அன்றுதான் 'ஹமாஸ்' வீரர் தற்¦காலை செய்து கொண்டு பத்தோ பதினைந்தோ இஸ்ரேலியர்களை விண்ணுலகம் அனுப்பியிருந்தார். 'தி ஹிந்து'வும், ·ப்ரான்க்பர்ட்டில் இலவசமாக கிடைத்த 'இண்டர்நேஷனல் ஹெரால்ட் ட்ரிப்யூனும்' தலைப்புச் செய்திகளுக்கு மிக அருகே செய்தியாக்கியிருந்தார்கள். தலையங்கப் பக்கங்களில் 'ஹமாஸ்' எவ்வாறு அரா·பத்தின் கட்டுப்பாட்டில் இல்லாமல் தன்னிச்சையாக இயங்குகிறது என்று வருத்தமும் பட்டிருந்தார்கள்.

வழக்கம் போல் ஒரு வரியில் 'இதெல்லாம் நிற்காதா?' என்று ஓட்டுநரிடம் வினா விடுத்தேன். பொறுமையாக விளக்க ஆரம்பித்தார். க்ளிண்டன் ஏற்பாடு செய்த உச்சி மாநாடு பற்றி கொஞ்சம் பிண்ணனி கொடுத்தார். அதில் யாஸர் அரா·பத் கையெழுத்திட மறுத்திருக்கிறார். என்ன திட்டம் என்பதை எங்கள் நாற்பததைந்து நிமிட பயணத்தில் பத்து நிமிடம் சுருக்கமாக சொன்னாலும் ஒன்றும் மண்டையில் ஏறவில்லை.

ஆனால், சாராம்சமாக புரிந்து கொண்டது யாஸர் அரா·பத் என்பவர் பாரதப் போரின் கிருஷ்ணன் போல. 'ஹமாஸ்' போய் குண்டு வீசி வருகிறதா? ஹமாஸ¤ம் அரா·பத் பேச்சின் படியே செயல்படுகிறது. என் குடும்பம் வறுமையில் இருக்கிறதா? அரா·பத்தின் கொள்¨கப் பிடிப்புதான் காரணம். என்னுடைய அண்ணாவின் மாப்பிள்ளை இஸ்ரேலினால் கொல்லப்பட்டானா? அங்கும் அரா·பத் அரூபமாகத் தெரிகிறார்.

அப்படியிருந்தும் அவனுக்கு அரா·பத் மேல் நம்பிக்கை இருக்கிறது என்று முடித்தான்.

கொலையாளி, தீவிரவாதி, உடும்புப்பிடி கோட்பாடுகள் கொண்ட அரா·பத் ஏன் பிடிச்சிருக்கு என்று நான் அதிகம் கேட்கவில்லை. எங்காவது எசகு பிசகாக கேள்வி கேட்டு, அவன் எங்காவது கடத்திச் சென்று பிணைக்கைதியாக்கி விடுவானோ என்னும் அளவு அவன் பேச்சில் ஆக்ரோஷம் இருந்தது.

தினசரிகளின் மூலம் மட்டுமே அறிந்த ஒரு ஆதர்ச தலைவரை பற்றிய நேரடி வருணனை அது. இந்தியாவிற்கு அடிக்கடி வந்து போகும் தலைவர்; காஷ்மீர் இந்தியாவுக்கே சொந்தம் என்று உலக அரங்கில் அறிவித்த தலைவர்; இஸ்ரேலின் கொடுங்கோலிற்கு அடிபணியாதவர் என்னும் எண்ணம் மட்டுமே என் முன்னே நிலைநிறுத்தப் பட்டிருந்தது. அன்று 'ஹமாஸ்' மூலம் கொலைகளும் செய்து வருபவர் என்று சொல்லப்பட்டது.

இந்திரா காந்தி இஸ்ரேலுடன் நல்லுறவை ஏற்படுத்திக் கொண்டிருந்தால் இந்தியா வெகு சீக்கிரமே சுபிட்சப் பாதையில் சென்றிருக்கும். சகாய விலையில் ராணுவத் தளவாடங்கள், பாகிஸ்தானின் அத்துமீறலகளை எளிதாக கண்காணித்தல் போன்ற தொழில் நுட்பங்கள் கிடைத்திருக்கும். வளைகுடா நாடுகளுடன் நல்லுறவு பாவித்ததில் பெட்ரோல் விலையும் குறையவில்லை; இன்றளவில் த¡வூத்தும் நாடுகடத்தப் படவில்லை.

இறந்த பிறகு ஒருவரை தூஷிப்பதை பலரும் விரும்புவதில்லை. வீரப்பனே ஆனாலும், 'அவனுக்குள்ளும் ஒரு நல்ல மனிதன் இருக்க¡ன்' என்று கண்டெடுத்து அவற்றைப் பெரிதாக சொல்வதே உவப்பாக உள்ளது. ஒஸாமாவிற்கு ரோல் மாடல் யார் என்பதை நமக்குத் தெரியாது. யாஸர் அரா·பத்தாக இருப்பதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.

ஏதன்ஸ் ஒலிம்பிக்ஸில் பாதுகாப்புக்கு கிட்டத்தட்ட ஒன்றரை பில்லியன் (மில்லியன் அல்ல) டாலர் செலவு செய்யப்பட்டிருக்கிறது. ஏறக்குறைய 6,750,000 கோடி ரூபாய். இவ்வளவுக்கும் பிள்ளையார் சுழி போட்டது 1972 ஒலிம்பிக்ஸில் நடந்த பதினொன்று இஸ்§ரலிய வீரர்களின் படுகொலை. தொடர்ந்து 1973-இல் சூடானின் அமெரிக்க வெளியுறவுத் துறையினரின் மரணங்கள், 1974-இல் இரண்டு டஜன் இஸ்ரேலிய பள்ளிச் சிறுவர்களின் கொலை, 1985 விமான கடத்தல் என்று பல நிகழ்வுகள் மூலம் பாலஸ்தீன பிரச்சினையை மக்கள் மனதில் இருத்தி வந்திருக்கிறார்.

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்குமான விவகாரத்தை அமெரிக்காவும் மற்ற நாடுகளும் மிகவும் உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள். ஒன்றரை பில்லியன் டாலருக்கு மேல் பாலஸ்தீனத்துக்கு நன்கொடையாக அமெரிக்கா வழங்கி வருகிறது. வெஸ்ட் பேங்க், காஸா போன்ற பகுதிகளில் உள்கட்டமைப்பு, நீர்வளம், கல்வி, சுகாதாரம் போன்ற பல துறைகளில் செயல்படுத்தி இருக்கிறார்கள்.

தனது பதவிக்காலம் முசிவதற்குள் முழுமையான தீர்வு ஏற்பட வேண்டும் என்று க்ளிண்டன் பெரிதும் விரும்பினார். இஸ்ரேல் ஒப்புக் கொண்ட திட்டத்தை பாலஸ்தீனத்துக்கு தீவிர ஆதரவு தரும் எகிப்து, சவுதி அரேபியா, ஜோர்டான், மொரோக்கோ, டூனிஸியா போன்ற நாடுகளின் ஆசீர்வாதங்களுடன் யாஸர் அரா·பத்திடம் சமர்ப்பித்தார். வசனம் பேசி மகிழும் சில தமிழக அரசியல்வாதிகள் பே¡ல் ஒரு கையில் சமாதானச் சின்னமும் மற்றொரு கையில் துப்பாக்கியும் கொண்டு தோன்றிய ஐ.நா. பேச்சு புகழ் பெற்றது. ஆனால், சமாதான உடன்படிக்கை எதையும் ஏற்றுக் கொள்ளாமல் கடைசி வரை சிறுவர்கள் முதல் பெண்டிர் வரை துப்பாக்கி தூக்குமாறு பாலஸ்தீன தலைவர் கட்டளையிட்டார். 'அவர் சொல்படியே நடப்போம்' என பட்டும்படாமல் மற்ற நாடுகளும் ஒதுங்கிக் கொண்டு விட்டது.

இப்பொழுது யாஸர் அரா·பத் மறைவிற்குப் பிறகு சில புதிய வழிகள் தென்படலாம். பிற அண்டை நாடுகளுக்கு பாலஸ்தீனத் தலைவர்களை வலியுறுத்தும் துணிவு வரலாம். விட்டுக் கொடுத்து லாபம் பெறுவது குறித்து பாடங்கள் நடத்தலாம். சொந்த நாடாக இயங்குவதின் லாப நஷ்டங்களை மக்களிடம் நேரடியாக எடுத்துரைக்கலாம். பலமிக்க ஒரே ஒரு சர்வாதிகாரிக்கு பதிலாக, ஜனநாயக முறையில் ஆயிரம் தலைவர்களைத் தேர்தெடுக்கும் வலிமையினை உணரலாம். எகிப்து, ஜோர்டானுடன் எல்லைக்கோடுத் தொடர்பு கொண்ட சுதந்திர நாட்டை உருவாக்கலாம்.

தேர்தல் மற்றும் சுதந்திரம் மட்டும் பாலஸ்தீனப் பிரச்சினைக்கு தீர்வு கொண்டு வராது. இதயநோய் உள்ள ஒருவனுக்கு கண்ணில் தூசி விழுந்திருக்கிறது. தூசி மட்டுமே இந்த க்ஷணம் பெரிதாகத் தோன்றும். கண்ணில் உறுத்தும் தூசியை ஊதித் தள்ளிவிட்டால் உலகமே தெளிந்தது போன்ற பார்வை கிட்டும். ஆனால், தூசி பெரிதல்ல. இதயநோய்க்கு வேண்டிய உணவுக் கட்டுப்பாடுகளும், மாற்று வால்வுகளும் அதி முக்கியம்.

பாலஸ்தீனத்தில் தூசியாக இருப்பது இஸ்ரேல். இஸ்ரேலை அழிப்பதால் பாலஸ்தீனத்துக்கு எவ்வித நனமையும் கிடைக்காது. இதய நோயான தீவிரவாதம், வகுப்புவாதம், பொருளாதாரப் பின்னடைவுகள், போன்றவற்றை குணப்படுத்த வேண்டும். புதிய தலைவர்கள் உணர்ந்து செயல்படுவார்கள். இனி அவர்களை வழிநடத்தப் போவது யாஸர் அரா·பத்தின் பிடியில் சிக்கியிராத மக்கள்தானே ?

உங்கள் கருத்து  
para
11/13/2004 , 1:06:27 AM

>>>பாலஸ்தீனத்தில் தூசியாக இருப்பது இஸ்ரேல்.

என்னய்யா ஆச்சு உங்களுக்கு? கொஞ்சம் எட்வர்ட் சயீத் புக்ஸெல்லாம் எடுத்துப் படிங்க.
   
பத்ரி
11/13/2004 , 1:17:44 AM

பாலஸ்தீன் - இஸ்ரேல் பிரச்னை முழுக்க முழுக்க பாலஸ்தீன் மக்களும், யாசர் அராபத்தும் உருவாக்கியது போலவும், பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலை அழிக்கக் கங்கணம் கட்டிக்கொண்டிருப்பது போலவும், ஏதோ அமெரிக்கா நல்லெண்ணத்துடன் கொடுத்த திட்டத்தையும் அராபத் ஒழித்துக் கட்டி, விடாமல் சண்டை போடத் தம் மக்களுக்குச் சொன்னது போலவும் எழுதுகிறீர்கள். அமெரிக்காவில் இப்பொழுது இப்படித்தான் மூளைச்சலவை செய்கிறார்களா?

பாலஸ்தீனத்தை சட்டவிரோதமாகத் தன் கைப்பிடியில் வைத்திருப்பது இஸ்ரேல். ஒவ்வொரு நாளும் யூதக் குழுக்கள் பாலஸ்தீனிய நிலங்களை ஆக்கிரமிக்கின்றன. சாகும் ஒவ்வொரு இஸ்ரேலிக்காகவும் கொத்து கொத்தாக பாலஸ்தீனியர்களைக் கொலை செய்கிறது இஸ்ரேலியப் படைகள். ஹமாஸ் செய்வதையெல்லாம் அராபத் தூண்டித்தான் என்று சொல்லியே அவர் பெயரை முடிந்தவரை நாசமாக்கியாயிற்று.

இன்று அராபத் செத்ததும், இஸ்ரேலில் உள்ளவர்களைக் காட்டிலும் புஷ், பிளேர்வைருவரும் கிட்டத்தட்ட ஸ்வீட் வழங்கி கட்டிப்பிடித்துக் கொண்டாடியிருக்கிறார்கள். 'அப்பாடி, இனி பாலஸ்தீனிய பிரச்னை தீர்ந்துவிடும்' என்ற நிலையில் இவ்விரு கோட்டான்களும் விடும் அறிக்கைகள் தாங்க முடியவில்லை.

பாவம் அராபத். பாவம் பாலஸ்தீனியர்கள். வெளி உலகுக்கு அவர்கள் பிரச்னைகளை எடுத்துச் சொல்ல சரியான தலைவர்கள் யாரும் இல்லை.

   
para
11/13/2004 , 1:38:56 AM

ஹமாஸின் நடவடிக்கைகளைத் தொடர்ந்து அராஃபத் கண்டித்து வந்திருக்கிறார். ஆயுதத்தால் அல்லாமல் பேச்சுவார்த்தைகளின் மூலமே பிரச்னைக்குத் தீர்வு காண முடியும் என்று தொண்ணூறுகளின் தொடக்கத்திலிருந்தே தம் நிலைபாட்டை மாற்றிக்கொண்டு தொடர்ந்து தெரிவித்துவந்திருக்கிறார். பாலஸ்தீன் பிரச்னைக்கு ஆயுதத்தீர்வு என்பதை முதலில் முன்வைத்தவர் அராஃபத் தான் என்றாலும், அது சரியானதல்ல என்பதைக் கண்டுணர்ந்த முதல் நபரும் அவரே. இன்றைய பாலஸ்தீன் பிரச்னைக்கு முழுமுதற்காரணம் இஸ்ரேல் மற்றும் இஸ்ரேல் மட்டுமே. அதற்குக் கொம்பு சீவி, தூபமிடும் திருப்பணியைத்தான் அமெரிக்கா ஆத்மசுத்தியுடன் செய்துவருகிறது. அராஃபத் இறந்ததால் அங்கே அமைதிக்கான வாய்ப்பு அதிகரித்திருப்பதாக ஆதிக்க சக்திகள் கொக்கரிப்பதன் உள்ளர்த்தத்தை தயவுசெய்து யோசியுங்கள். பி.எல்.ஓவைப் பிரித்தாளுதல், வெஸ்ட்பேங்க் பகுதியில் யூதக் குடியிருப்புகளை அதிகரித்தல், காஸாவை நிரந்தர பதற்றப்பிரதேசமாக அறிவித்து சீல் வைத்தல் என்று தொடங்கி, ஜோர்டன் உதவியுடன் மொத்தமாக பாலஸ்தீனிய அராபியர்களை நசுக்கப்போகிறது இஸ்ரேல். இதற்கெல்லாம் புஷ்ஷின் ஆசி இருக்கப்போகிறது. ஒருவேளை பாலஸ்தீன் என்கிற தனி தேசம் உருவாக வழி செய்யப்பட்டாலும் ஒரு சிறு கோவணம் அளவு நிலம் மட்டுமே அவர்களுடையதாக இருக்கும். மிச்சத்தை ஜோர்டனும் இஸ்ரேலும் பங்குபோட்டுச் சாப்பிடும். காஸா இன்னொரு பங்களாதேஷாகி, இறுதியில் இஸ்ரேலுடனே சங்கமிக்கும். இருபத்தோறாம் நூற்றாண்டின் மிகப்பெரிய சரித்திர மோசடி இதுவாகத்தான் இருக்கும், பொறுத்திருந்து பாருங்கள்.
   
மூர்த்தி
11/13/2004 , 1:49:38 AM

அமெரிக்காவின் நண்பர் இஸ்ரேல். இஸ்ரேலின் எதிரி பாலஸ்தீனம். பாலஸ்தீனத்தின் அதிபர் அமெரிக்காவிற்கும் எதிரி. அமெரிக்காவில் சம்பதிப்பதால் உங்களுக்கும் யாசர் அராபத் எதிரி!!!

வாங்க பாலாஜி..உண்ட வீட்டுக்கு ரெண்டகம் நினைக்கக் கூடாது என்பதை பண்டைய இலக்கியங்களில் மட்டுமே பார்த்திருந்தேன். இப்போதும் அப்படித்தான் என்று காட்டுகிறீர்கள்.

சிறு வயது முதலே சுதந்திர பாலஸ்தீனத்திற்காக தம்மை அர்ப்பணித்துக்கொண்ட ஒரு மாபெரும் சகாப்தத்தை கொச்சைப்படுத்த வேண்டாம். நோபல் பரிசு பெற்ற இரும்பு மனிதர் அவர். உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே என்பதை தாரக மந்திரமாகக் கொண்டவர் அந்த ஒப்பற்ற தலைவர்! ஆங்கில ஆதிக்கத்தின்போதும்கூட இந்திய நாட்டில் ஏற்பட்ட மற்ற தீவிரவாதத் தலைவர்களின் செயலுக்கும் காந்திக்கும் சம்பந்தம் இருப்பதாகவே காட்டியது அப்போதைய ஆங்கில அரசு. உங்களின் கூற்றும் அப்படித்தான் உள்ளது. கமாஸோடு எத்தனைமுறை பேச்சுவார்த்தை நடத்தினார் என்றாவது உமக்குத் தெரியுமா? ஏட்டுச்சுரக்காய் கறிக்காவாது தம்பி. உலகத்தினை மனிதத் தன்மையோடு பாருங்கள்!
   
para
11/13/2004 , 1:50:57 AM

பாலாஜி மற்றும் நண்பர்கள் பார்வைக்கு. பாலஸ்தீனிலுள்ள இஸ்ரேலிய யூதர்கள் பற்றி மகாத்மா காந்தி 1938ல் எழுதிய கட்டுரை இது.

http://www.countercurrents.org/pa-gandhi170903.htm
   
மூர்த்தி
11/13/2004 , 2:15:43 AM

//பாலஸ்தீனத்தில் தூசியாக இருப்பது இஸ்ரேல். இஸ்ரேலை அழிப்பதால் பாலஸ்தீனத்துக்கு எவ்வித நனமையும் கிடைக்காது. இதய நோயான தீவிரவாதம், வகுப்புவாதம், பொருளாதாரப் பின்னடைவுகள், போன்றவற்றை குணப்படுத்த வேண்டும். புதிய தலைவர்கள் உணர்ந்து செயல்படுவார்கள். இனி அவர்களை வழிநடத்தப் போவது யாஸர் அரா·பத்தின் பிடியில் சிக்கியிராத மக்கள்தானே ?//

இஸ்ரேலை பாலஸ்தீனம் அழிக்கிறது என்று எப்படிச் சொல்கிறீர்கள்? தற்கொலைக் குண்டுவெடிப்பைத்தானே? மேற்குக்கரையில் போவோர் வருவோரை எல்லாம் சுட்டும், அகதிகள் முகாமிலும்கூட அத்துமீறல்..தாக்குதல் என நடத்தும் இஸ்ரேலின் செயலை நியாயம் என்றா கூறுகிறீர்கள்? இஸ்ரேலின் மீதான பாலஸ்தீனத்தாக்குதலுக்குக் காரணம் ஹமாஸ். அதனை நீங்கள் யாசரின் கட்டளை எனக் கூருவது தவறு. உங்கள் வீட்டுக் கொள்ளைப்புறம் எவனாவது சுவர் கட்டினால் உங்களுக்கு கோபமே வராதா? அந்த தடுப்புச் சுவரை எல்லா நாடுகளுமே கண்டிக்கத் தவறவில்லை என்பது உமக்குத் தெரியுமா? குண்டுச் சட்டிக்குள் குதிரை வேண்டாம், வெளியே வாரும்! பாலஸ்தீனத்தையே அராபத் ஆட்டிவைத்தது போல் அல்லவா இருக்கிறது உம் பேச்சு? அவர்களின் தலைவரல்ல...தெய்வம் அவர்! அமைதி ஏற்பட இறைவனிடம் வேண்டிக்கொள்ளுங்கள்
   
பாலாஜி
11/13/2004 , 3:58:34 AM

>>தொண்ணூறுகளின் தொடக்கத்திலிருந்தே தம் நிலைபாட்டை மாற்றிக்கொண்டு

சதாமை (முதல்) ஈராக் போரில் யாஸர் அராஃபத் ஆதரித்து இருக்கிறார்.
எட்வர்ட் சயீத் இன்னும் படிக்கவில்லை. உள்ளூர் நூலகத்தில் கிடைக்கிறது. படிக்கிறேன் பாரா.

>>முழுக்க பாலஸ்தீன் மக்களும், யாசர் அராபத்தும் உருவாக்கியது போலவும்

பொத்தாம் பொதுவாக அந்த வகை எண்ணம் எழுமாறு கட்டுரை அமைந்திருக்கிறது. இருந்தாலும் ஜூனியர் விகடன் (http://www.vikatan.com/jv/2004/nov/14112004/jv0602.htm) போன்ற பல இடங்களில் விவரமாக இஸ்ரேல் வளர்ந்த கதை கிடைப்பதால் சாய்ஸில் விட்டுவிட்டேன். நான் படித்தவரையில் (தமிழ்/இந்திய வலைப் பதிவுகள், நாளிதழ்கள்) அராஃபத்தை தியாகச் செம்மலாகவே சித்தரித்திருக்கிறது.

நானும் அவ்வாறே நினைத்தும் இருந்தேன்.

ஆனால், அந்த டேக்ஸி ட்ரைவருடன் ஆன பேச்சு, கிறிஸ்துமஸ் பார்ட்டியில் சந்தித்த நண்பனின் நண்பன் உரையாடல் இரண்டுமே என்னை 'ஹமாஸும்' அராஃபத்தின் வெண்கொற்றகுடையின் கீழ் வருவதாக எண்ணவைக்கிறது. அவர்கள் இருவருமே பல வருடங்களாக (ஐந்துக்கு மேல்) அமெரிக்காவில் வசிப்பவர்கள். அதனால், தற்போதைய நிதர்சனத்தை பிரதிபலிக்காது போகலாம். டேக்ஸி ட்ரைவரிடம் அராஃபத்தின் கையெழுத்திட்ட கடிதங்கள் இருப்பதாக சொன்னார். ஒவ்வொருவரின் பால்ஸ்தீனரின் பங்கையும் நேரடியாகப் பாராட்டி கடிதம் எழுதியிருக்கிறார்.

>>அமெரிக்காவில் இப்பொழுது இப்படித்தான் மூளைச்சலவை

ஆமாம்... தலையங்கம் முதல் ஒபினியன் பக்கம் வரை இஸ்ரேல் பக்கம் சாய்ந்திருக்கிறது. 'ஆசிரியருக்கு வரும் கடிதங்கள்' கூட கொஞ்சமே கொஞ்சம்தான் அராஃபத்தின் மறுபக்கத்தை (இந்திய ஊடகங்களின் பார்வையை) சொல்லுகிறது. கிட்டத்தட்ட 'கொடுங்கோலன் ஓய்ந்தான்' என்பதைத்தான் எழுதுகிறார்கள். இவற்றில் துளிக்கூடவா உண்மை இருக்காது?

விடுதலைப் போராட்டம் என்றால் பலிகள் கொடுக்கத்தான் வேண்டும். அவர் மக்களின் பெருமதிப்பைப் பெற்ற தலைவர், இன்னும் சமாதானமாக இருந்திருக்கலாம். பேச்சுவார்த்த, உடன்படிக்கை என்றாலே விட்டுக்கொடுக்க மாட்டேன் என்று முரட்டுப் பிடிவாதம் நிச்சயம் பிடித்திருக்கார். மக்களின் ஈடு இணையற்ற அன்பையும் செல்வாக்கையும் உடையவர், 97% இட ஒதுக்கீடு கிடைத்தபோது ஒத்துக் கொண்டிருக்கலாமே?

முயலுக்கு மூணே கால், காஷ்மீர் விடுதலையாக வேண்டும் என்று கேட்கும் பாகிஸ்தான் போலத்தான் கடைசி நாள் வரை இயங்கியிருக்கிறார். அப்புறம் எதற்கு ஐ.நா. சபையில் 'ஆலிவ் சின்னம்'? ஆந்திரா நக்ஸலைட்டுகள் குறித்த வெங்கடேஷ் (http://www.tamiloviam.com/nesamudan/page.asp?ID=94&fldrID=1) பதிவு நினவுக்கு வந்தது.

>>பாலஸ்தீனத்தை சட்டவிரோதமாகத் தன் கைப்பிடியில் வைத்திருப்பது இஸ்ரேல்

இது குறித்து விபரமாக எழுதினால் (அல்லது இணையத் தொகுப்பு கிடைத்தால்) கொடுக்க வேண்டும், பத்ரி. இஸ்ரேலை ஏன் அணடை நாடுகள் படையெடுத்தது; தற்காப்புக்காக பாலஸ்தீனம் இஸ்ரேல் வசம் இருக்கிறதா; தற்போது ஷரோன் ஆரம்பித்திருக்கும் 'withdrawal' (a word he avoids) ஆகியவற்றியின் பிண்ணனியில் விளக்கினால் எனக்கு(ம்) ரொமபப் பயனுள்ளதாக இருக்கும்.

http://www.foreignpolicy.com/story/cms.php?story_id=179&page=1&PHPSESSID=d46fc1416495375fd840f83868192f24
அப்பா புஷ் மற்றும் க்ளிண்டன் காலத்தில் மத்திய கிழக்கு ஸ்பெஷலிஸ்ட்டாக இருந்த Dennis B. Ross எழுதிய ஃபாரின் பாலிசி கட்டுரையில், அராஃபத் முன், கேம்ப் டேவிட்டில் வைக்கப்பட்ட திட்டத்தை விவரித்துள்ளார்.

>>ஹமாஸ் செய்வதையெல்லாம் அராபத் தூண்டித்தான்

ஹ்மாஸ் நிச்சயம் அவரின் தலைமைக்குக் கட்டுப்படுத்தான் இயங்கியதாக (முதல் பத்தியில் குறிப்பிட்ட) நண்பர்கள் சொன்னார்கள். இது விவாதத்துக்குரியது. அவரும் இறந்துவிட்டார். தலைவர் என்பவர், எல்லாரையும் கட்டுக்குள் வைத்திருப்பவர்தானே?

>>இவ்விரு கோட்டான்களும் விடும் அறிக்கைகள்

ஏன் விடுகிறார்கள் என்றும் எழுதுங்கள் பத்ரி. அங்கு (எனக்குத் தெரிந்த மட்டில்) எண்ணெய் வளம் கிடையாது. இஸ்ரேலுக்கு அருகில் உள்ளது என்பது தவிர வேறு எதற்காகக் கொண்டாடியிருப்பார்கள்?

>>கொம்பு சீவி, தூபமிடும் திருப்பணியைத்தான்

ஆயுதம் அதிகம் விற்றால் அமெரிக்காவுக்கு லாபம்தானே என்னும் எண்ணமாக இருக்கலாம்.

>>காஸா இன்னொரு பங்களாதேஷாகி, இறுதியில் இஸ்ரேலுடனே

அவ்வளவு மோசமாகிப் போக சிரியாவும் எகிப்தும் இன்ன பிறரும் விட்டுவிடுவார்களா?

>>அமெரிக்காவில் சம்பதிப்பதால் உங்களுக்கும் யாசர் அராபத் எதிரி

அப்படியில்லை மூர்த்தி சார். நோபல் பரிசு கொடுக்கப்பட்டதற்கு அவருக்குத் தகுதியே இல்லை என்று நினைக்கிறேன். போராளி மனம் மாறி அரசியல்வாதியானால் பாராட்டலாம். யாஸின் மாலிக் போன்ற சிலர் நினைவுக்கு வருகிறார்கள். குரங்கு அப்பத்தைப் பிரித்துக் கொண்ட கதையாக 'எனக்கு இதுவும் வேண்டும்... இன்னமும் வேண்டும்' என்று அவர் தொடர்ந்து வேண்டுகோள் வைத்துக் கொண்டிருந்திருக்கிறார். எதுவும் வேலைக்காகாத போது, அவ்வப்போது சிறுவர்களையும் பெண்களையும் என அனைவரையும் இஸ்ரேலுக்கு எதிராகத் தூண்டியும் விட்டிருக்கிறார்.

>>அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே

அச்சமில்லாமல் பகைவனை எதிர்க்கலாம். கொரில்லா முறையில் தீர்த்துக்கட்டுவது நியாயமில்லை.

>>>கமாஸோடு எத்தனைமுறை பேச்சுவார்த்தை நடத்தினார் என்றாவது உமக்குத் தெரியுமா? ஏட்டுச்சுரக்காய் கறிக்காவாது தம்பி.----

இங்கு எழுதும் அனைவருமே (நானறிந்த வரையில்) இஸ்ரேல் சென்றதில்லை. அப்படி யாராவது நேரில் சென்று நிலைமை அறிந்திருந்தால், அவர்களின் கருத்தை அறிய வேண்டுகிறேன்.

>>உலகத்தினை மனிதத் தன்மையோடு பாருங்கள்!

நம் எல்லோரின் கருத்தும் நிச்சயம் இதுவாகத்தானே இருக்கும்.

சில அமெரிக்க பத்திரிகை சுட்டிகள்:

http://online.wsj.com/article/0,,SB109986619559166971,00.html?mod=article-outset-box
Over the years, Arafat has been responsible for killing far more Palestinians than Israelis, especially any 'moderates' who dared to promote a non-terrorist strategy.

http://www.nytimes.com/2004/11/10/opinion/10safi.html
Just imagine: this suggests that if there had been no stiff-necked Israel, we would never have had the bombing of Pan Am 103 by Qaddafi, no massacre of 10,000 Sunnis at Hama by Hafez al-Assad, no poison-gassing of 5,000 Kurds at Halabja by Saddam, no continued unpleasantness in Chechnya, or that incident in Lower Manhattan.

http://www.opinion.telegraph.co.uk/opinion/main.jhtml?xml=/opinion/2004/11/12/do1201.xml (லண்டன்)
Arafat exasperated radicals by his willingness to deal with Israel, and dismayed moderates by his exploitation of violence.

பத்ரி, மூர்த்தி, பாரா, அனவருக்கும் என்னுடைய ந்ன்றிகள்.
   
மூர்த்தி
11/13/2004 , 8:08:24 AM

புதிதாக மதிப்புமிகு "புஷ்" அவர்களுக்கும் நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப் பட்டிருந்தது. ஒருவேளை புஷ் அவர்களுக்கு நோபல் பரிசு கிடைத்திருந்தால் அப்பரிசுக்கான மதிப்பும் இறந்த நோபல் அவர்களுக்கான மதிப்பும் கூடியிருக்குமோ என்னவோ?

சதாமின் குவைத் தாக்குதலும், பல்லாயிரக்கணக்கானோரை கெமிக்கல் அலி மூலம் கொன்றதையும் யாருமே மனசாட்சியோடு ஆதரிக்கமாட்டார்கள். சதாமை ஆதரித்த ஒன்றினாலேயே யாசர் கெட்டவர் என்றால் நீங்களும் கூடத்தான் கெட்டவர். புஷ் என்ற சர்வாதிகாரியின்பின்னால் மகுடி இசைக்கின்றீர்!

பக்கத்துவீட்டுக் கோழி எங்கள் வீட்டில் மேய்ந்தபோது சண்டை வளர்த்தது எம் தவறு. எம் தெரு பையன் பக்கத்துத் தெரு பெண்ணோடு ஓடியபோது தவறு செய்தது யாம்!. எங்கள் ஊர் பையன் பக்கத்து ஊரில் குடித்து விட்டு வம்பு செய்தபோதும் தடுக்கத் தவறியது நாங்களேதான்! எங்கள் வட்டம் கபாடிப் போட்டியில் பக்கத்து வட்டத்தில் வெற்றி பெற்றபோது அவர்கள் அடித்த சவுக்குக் கட்டை அடியை வாங்கிக் கொன்டு மௌனமாக வந்தது எம் தவறு! எங்கள் மாவட்ட கிரிக்கெட் அணி பக்கத்து மாவட்டத்தில் தோற்று குடித்துவிட்டு வம்பு செய்ததுகூட எங்களால்தான்! எங்கள் மாநில கால்பந்தாட்ட அணி பக்கத்து மாநில அணியோடுமோதி வென்றதும் மகிழ்ச்சிமிகு கொண்டாட்டத்தில் சண்டைமூண்டதும் எம்மால்தான்! பக்கத்து நாடு எல்லை தாண்டிய பயங்கர வாதத்தை ஊக்குவித்து ஆதரித்தபோதும் புஷ் மாதிரி போருக்குப் போகாமல் கூப்பிட்டு நடுக்கூடத்தில் வைத்து பேச்சுவார்த்தை நடத்தியதும் எம் தவறேதான்!

எங்குதான் தவறில்லை. எதுதான் நீதி? எல்லோரும் நேர்மையாக நடந்தால் எதற்கு இந்த உலகில் நீதி மன்றங்கள்? எல்லோரும் மனிதனாக வாழ்ந்தாலே உலகில் பயங்கரவாதம் என்ற ஒன்று இருக்குமா? கையில் சொம்போடு ஆலமரத்தில் பஞ்சாயத்து பேசுபவன் எல்லாம் பஞ்சாயத்துக்காரனா? மன்சாட்சி என்ற ஒன்று அறவே வேண்டாமா?

உலகில் அமைதி திரும்பி சுபிட்சம் காண எல்லோரும் வேண்டுவோம்!!!
   
மூர்த்தி
11/13/2004 , 8:31:10 AM

நான்கு வயதில் தம் தாயை இழந்து 18 வயதிற்குப்பின் தமது போரில் குதித்தார். தாங்கள் தயவு செய்து 1920ஆம் ஆண்டு வரலாற்றினைச் சற்று புரட்டிப் பார்க்கவும். அவரின் ஆரம்பகாலம் முதன்முதலில் தீவிரவாதமாக இருந்தாலும் பின்னாட்களில் அது மென்மையாக மாறியது என்பதை யாரும் மறக்கவோ மறுக்கவோ முடியாது. 1947க்குப் பின்னரே அன்னாரின் வேகம் அதிகரித்தது எனலாம். தமக்கென ஒண்டக்கூட இடமில்லாத பாலஸ்தீனர்களுக்கு இடமென்று ஒன்று ஏற்படுத்திய பெருமை அராபத்தையே சாரும்! பின்னாட்களில் மெந்தலைவர்களும் வந்தலைவர்களும் பெருகியபோதும்கூட அன்னார் சமாதானத்தையே அதிகம் விரும்பி சமாதானத்துக்கான நோபல் பரிசைப் பெற்றார். தாங்கள் இன்னொருமுறை நோபல் பரிசுக்கான கமிட்டியையும் அது செயல்படும் நடுநிலையையையும் கருத்தில் கொள்ளவேண்டும். நாடு முழுவதையும் ஐநா இஸ்ரேலுக்காக அறிவித்தபோதும் யூதர்களுடன் நேசக்கரம் நீட்டி தமக்கென நல்ல பேச்சுவார்த்தைகளின் மூலம் இடம் வாங்கித்தந்தவர் யாசர்!

அராபத்துக்கு நோபல் பரிசு கொடுத்தது தவறென்று தாங்கள் கூறினால் கமிட்டி என்பதே தவறு. பின்னெதற்கு நோபல்? பேசாமல் இழுத்து மூடிவிட்டு மறுவேலை பார்க்கலாம். எங்கள் தன்னலமில்லா தலைவர் காந்திக்கு கொடுக்க நினைத்தபோதுகூட ஏகப்பட்ட சர்ச்சைகள்! ஒருவேளை காந்திக்குக் கொடுக்காததையும் யாசருக்குக் கொடுத்ததையும் தாங்கள் ஒப்புமைப் படுத்த முயன்றால் தயவு செய்து கமிட்டிக்கு தங்களின் கண்டனத்தைத் தெரிவிக்கவும்!
   
எஸ்.கே
11/13/2004 , 10:37:57 AM

பாலஸ்தீனியர்களுக்காக பலர் கொண்டு வந்து கொட்டும் மில்லயன் கணக்கான டாலர்களை அவர் கொஞ்சம் கொஞ்சமாக தன் மனைவி பெயரில் மாற்றியிருக்கிறார் என்கிறார்கள். கிட்டத்தட்ட 900 மில்லியன் என்கிறார்கள். மொத்தத்தில் அவர் காலத்தில் இந்தப் பிரச்னைக்கு ஏதேனும் தீர்வு காணும் வாய்ப்பை இழந்து விட்டார். எந்த நாடாக இருந்தாலென்ன, அரசியல் வாதிகளுக்குத் தீனி போட எதேனும் பிரச்னைகள் அணையாமல் கணப்பு இருந்து கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் பிழைப்பு நடக்கும்.
   
மூர்த்தி
11/13/2004 , 12:20:17 PM

எங்களின் பொன்மனம் பூவுலகை அடைந்தபோதும் ஆயிரத்துச் சொச்சம் கோடிகள்! எங்களின் தங்கத்தாரகை சிறைக்குச் சுற்றுப்பயணம் சென்றபோதும் இமெல்டாமார்கோஸ் போன்று பலஜோடி செருப்புகள்! எங்களின் குறலோவியத்திடம்கூட ஏகப்பட்டவை!

அனியாயமாய் சொத்து சேர்த்திருந்தால் தண்டிக்கப்படவேண்டியவர்கள். கட்சிப்பணத்தை யாசரும் தமது சொந்த நலனுக்கு பயன்படுத்தியிருந்தால் நிச்சயம் தவறேதான் அது!
   
madayan
11/15/2004 , 9:40:34 AM

யாஸர் அராபத்தின் சொத்து மதிப்பு 1.2 பில்லியன் டாலர்கள். அவருடைய குடும்ப தொழில் மூலமாக வந்த வருமானமா? உலக மக்கள் கொடுத்த நன்கொடை அனைத்தையும் தன் பாக்கெட்டில் போட்டல்லவா இந்த பணம் அவருடைய சொத்தாயிற்று?. நிற்க.
.
எப்போதுமே குற்றம் செய்தவர்கள் பக்கம் (வீரப்பன், சதாம், பின்லேடன், சங்கராச்சாரி) நிற்பது எந்த நியாயம் அய்யா?
ஆமாம்?, வீரப்பனுக்கும் தனி விமானம் அனுப்பி ராஜ மரியாதையுடன் அழைத்திருந்தால் வந்திருப்பானோ என்னவோ?
   
sampathkumar
11/15/2004 , 1:06:15 PM

வணக்கம் பாலஜி. கட்டுரைப் எளுதும் முன் இஸ்ரேல் உடைய வரலாறை முற்றும் தெரிந்து கொள்ள முயற்சி எடுத்து இருந்தால் அதர்க்கு முன்பு இருந்த பாலஸ்த்தீனதின் வறலாறு, நியாயம் கிடைக்க வேண்டிய பாலஸ்தீன மக்களுக்கு கிடைக்காதது, இது போன்ற தலைவர் இருந்தும் சில உலக நாடுகலின் கேவல அரசியல், மத வெறி எல்லாம் வெளியில் வரும். 2000 தில் காந்தி இந்தியா சுதந்திரத்துக்கு பாடுபட்டிருந்தால் அவரும் ஒரு தீவிரவாதி என முத்திரை குத்த பட்டிருப்பார். வரலாறு படைத்து மறைந்த மாமனித்னை தவறான கண்ணோட்டதில் விமர்சிக்காதீர்கள்
   
Dondu
11/16/2004 , 9:13:15 AM

நோபல் பரிசு அராபட்டுக்கு மட்டுமா கொடுக்கப் பட்டது? அவருடன் கூட இஸ்ரேல் பிரதமர் மற்றும் வெளியுறவு மந்திரி கூடத்தான் நோபல் பரிசைக் கூட்டாகப் பெற்றனர்.
இஸ்ரேலை அழிப்பதுதான் தன் இயக்கத்தின் நோக்கம் என்பதை அராபட் பல முறை நேரடியாகக் கூறியுள்ளார். அப்படிப்பட்ட இயக்கத்தை இஸ்ரேல் இரும்புக் கரம் கொண்டுதான் அடக்கும். முத்தமிட்டுக் கொஞ்சவா முடியும்? ஐயா இது போர். இஸ்ரேலுக்கு வாழ்வா சாவா என்ற பிரச்சினை. 2000 வருடங்களாக ஒடுக்கப்பட்ட மக்கள் இனிமேலும் ஒடுங்கத் தயாராக இல்லை.
1948-ல் மற்ற அரபு நாடுகள் இஸ்ரேலில் இருந்த பாலஸ்தீனியரை வழி விட்டு விலகச் சொன்னார்கள். அப்போதுதான் இஸ்ரேலை அழிக்க முடியும் என்று மனப்பால் குடித்தனர். மோசமானத் தோல்விக்குப் பிறகு என்ன செய்வது என்று அறியாமல் முழித்தனர். 1967-ல் மற்றும் ஒரு முயற்சி. பயங்கர உதை. இஸ்ரேலுக்கு அமெரிக்கா உதவி செய்தது என்றால் அராபியர்களுக்கு சோவியத் யூனியனின் உதவி. 1973-லும் அதே நிலை. 1982-ல் யாருமே பாலஸ்தீனர்களை ஏற்க மறுத்தப் போது இஸ்ரேலியப் பிரதமர் தான் அவர்கலை ஏற்றுக் கொள்வதாகக் கூறினார். ஆனால் அது நடக்க வேண்டுமானால் வாலைச் சுருட்டிக் கொண்டு உட்கார்ந்திருக்க வேண்டும் எனக் கூறினார். இது எவ்வளவு பேருக்கு நினைவிருக்கிறது? இந்த அவமானத்தைத் தாங்க முடியாத அரபு நாடுகள் பிறகு லெபனானிலிருந்து வெளியேற்றப்பட்டப் பாலஸ்தீனியருக்கு அடைக்கலம் கொடுத்தனர்.
நான் ஒரு இஸ்ரேலிய ஆதரவாளன் என்றுக் கூறவும் வேண்டுமோ? என் வலைப்பூவில் இதைப் பற்றி மேலும் எழுதுவேன்.
   
madayan
11/16/2004 , 9:22:59 AM

வரலாறு, மாமனிதன் சுதந்திரம் எல்லாம் சரிதான் அண்ணாச்சி. 1.2 பில்லியன் டாலர்கள் எங்கிருந்து வந்தது.?? ஒரு சமயம் வரலாறு படைக்கும் போது இதையும் படைத்து இருப்பாரா?. ஒரு பை ப்ராடக்ட் மாதிரி.....!!!!!! காந்திஜி தீவிரவாதியுடன் ஒப்பிடப்படும் கேவலம் நடப்பதை பார்க்க வேன்டிய வேதனை.

ஒரு முறை இஸ்ரேலில் 14 வயது பாலஸ்தீனிய சிறுவன் குண்டுகளை இடுப்பில் கட்டி பிடிபட்ட போது கேட்ட கேள்விக்கு அவன் சொன்ன பதில்: "சொர்க்கதில் ஆயிரம் கன்னிப்பெண்கள் காத்திருப்பார்கள் எனக்காக". இதற்காக அவனுக்கு கொடுக்கப்பட்ட கூலி 20 டாலர்கள்.

   
asanbasar
11/22/2004 , 11:37:26 AM

உலக போராளிகளுக்கு எதிரா பாலாஜிபோன்ற நுனிப்புல் மேய்ந்தவர்கள் நிரையபேர் எப்படியாயினும் வரலாறுகள் உண்மையை மறைக்காது
விரைவில் உலகின் எல்லா மாவீரர்களுக்கும் தாய்மண் கிடைக்க பிரார்த்திப்போம்
   
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2008 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |