Tamiloviam
தொடர்கள்
இந்த வார இதழில்
தராசு
வ..வ..வம்பு
திரைவிமர்சனம்
நூல் அறிமுகம்
சிறுகதை
கவிதை
சமைத்து அசத்தலாம்
கவிதை
சிறுகதை
திரையோவியம்
அறிவிப்பு
 
  முதல் பக்கம்
சென்ற இதழ்கள்
பில்லியன் டாலர் கனவுகள் - பாகம் : 1
- சசிகுமார்
பாகம் : 1 | 2 | 3 | 4 (புதிது)
{இப்பகுதியை அச்செடுக்க}     {இத்தொடரை அச்செடுக்க}

1946, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் நடக்கும் நேரம். இது வரை நடந்த காங்கிரஸ் கமிட்டி தேர்தல்களை விட  இந்த தேர்தலுக்கு முக்கியத்துவம் அதிகம் இருந்தது. ஏனெனில் இந்த தேர்தலில் வெற்றி பெறுபவர் காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் தலைவர் அல்ல.  சுதந்திர இந்தியாவின் "முதல் பிரதமர்" என்ற கவர்ச்சிகரமான பதவியையும் அவர் தான் அலங்கரிப்பார். பல ஆண்டுகள் அடிமைப்படுத்தப்பட்டு,  சீர்குலைந்திருந்த ஒரு நாட்டை திட்டமிட்டு எழுப்ப வேண்டிய முக்கியமான பொறுப்பிற்கான தேர்தலாகவும் இந்த தேர்தல் அமைந்தது.

எங்கும் நிறைந்திருந்த வறுமை, மதவெறி, கல்வியறிவின்மை போன்ற்வற்றை கலைந்து பொருளாதாரத்தை வளர்த்து நாட்டை வழி நடத்தக் கூடிய  தலைவர் யார் ?

ஜவகர்லால் நேரு, சர்தார் வல்லபாய் பட்டேல், ஆச்சாரியா கிர்பலானி என்று மூன்று பேர் தலைவர் பதவிக்காக போட்டியிட்டனர். இவர்களில்  சர்தார் வல்லபாய் பட்டேல் தான் வெற்றி பெறுவார் என்று நம்பப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் மத்தியில் காந்திக்கு அடுத்தபடியாக  அவருக்கு தான் செல்வாக்கு அதிகம். பிராந்திய காங்கிரஸ் கமிட்டிகளில் பெரும்பான்மையான கமிட்டிகள் சர்தார் வல்லபாய் பட்டேலையே  ஆதரித்தன. மொத்தமிருந்த 19 கமிட்டிகளில் 12 கமிட்டிகள் சர்தார் வல்லபாய் பட்டேலையே முன்மொழிந்திருந்தன. நேருவை ஒரு கமிட்டி கூட  முன்மொழியவில்லை.

எந்த காங்கிரஸ் கமிட்டியின் ஆதரவும் இல்லாமல் நேரு எப்படி பிரதமரானார் ?

Jawaharlal Nehruசுதந்திர இந்தியாவின் முதல் அதிகார போட்டியின் சுவாரசியமான கதைக்குள் செல்வதற்கு முன்பாக நேரு மற்றும் சர்தார் பட்டேலின் வாழ்க்கை  பற்றி சுருக்கமாக கவனிக்கலாம். ஏனெனில் அவர்களின் வாழ்க்கை முறை தான் ஒருவரை பிரதமராகவும் மற்றவரை பிரதமராகவிடாமலும் செய்தது.

நேருவின் செல்வ செழிப்பு அனைவரும் அறிந்த ஒன்று தான். நேரு பிறக்கும் பொழுதே அவர் வீட்டில் வேலை செய்வதற்கு 50க்கும் மேற்பட்ட  வேலையாட்கள் இருந்தனர். சொகுசான நீச்சல் குளத்துடன் வீடு, ஐரோப்பாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கார்கள் என அவர்  பெரும்பான்மை இந்திய மக்களிடம் இருந்து வெகு தூரத்தில் இருந்தார். இந்தியாவின் விடுதலை போராட்டத்தில் நேருவின் தந்தை மோதிலால் நேரு  பங்கேற்றாலும் அவர் பிரிட்டிஷ் அதிகாரத்தில் உள்ளவர்களிடம் நெருங்கிய நட்பு கொண்டிருந்தார். தன்னுடைய மகன் இந்திய சிவில் சர்வீஸ் தேர்வு  எழுதி பிரிட்டிஷ் அதிகார பீடத்தில் முக்கிய பதவிக்கு செல்ல வேண்டும் என்ற ஆசை மோதிலால் நேருவுக்கு உண்டு. ஆனால் ஜவகர்லால்  நேருவுக்கு சிவில் சர்வீஸில் நாட்டம் இல்லை.

பள்ளிப் படிப்பு Harrow பள்ளியில், கல்லூரிப் படிப்பு cambridge மற்றும் Trinity கல்லூரியில் என்று மிக செல்வாக்குடன் வாழ்ந்தார். ஜரோப்பாவில்  கல்லூரியில் படிக்கும் பொழுது தாரளமாக செலவு செய்து பல நாடுகளுக்கு சென்று அங்கிருந்த நடிகர் நடிகைகள் பற்றியும் தான் பார்த்த நாடகங்கள்  பற்றியும் தன் தந்தைக்கு ஆர்வமுடன் கடிதம் எழுதுவார். ஐரோப்பில் வளர்ந்து கொண்டிருந்த புதிய தொழில்நுட்பம் குறிப்பாக விமானங்கள் மேல்  அவருக்கு அதிகமான காதல்.

1912ல் இந்தியாவிற்கு திரும்பிய நேருவுக்கு இந்திய விடுதலை இயக்கம் மேல் கவனம் திரும்பியது. தன்னுடைய வசதியான வாழ்க்கையில் கூட  அவர் பிரிட்டிஷார் மீது வெறுப்புற்றிருந்தார். தன் தந்தையின் பிரிட்டிஷ் அரசாங்க நண்பர்கள் தன்னுடைய வீட்டிற்கு ஷாம்பெயின் குடிக்க  வந்தாலும் ஒரு முறை கூட தங்களை அவர்கள் வீட்டிற்கு அழைத்ததில்லை என்பது அவரை உறுத்தியது. பிரிட்டிஷார் தங்களை அவர்களுக்கு  சரிசமமாக நடத்தாததை உணர்ந்தார். 

காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு இந்தியாவின் பல கிராமங்களுக்கு அவர் செல்லத் தொடங்கிய பொழுது தான் இந்தியாவின்  வறுமையை முதலில் கண்டார். இந்தியாவின் நிலையும் ஐரோப்பாவில் தான் கண்ட நிலையும் அவரை மிகவும் பாதித்தது. இந்தியாவின் வறுமையை  எப்படி போக்குவது என்பது குறித்து தீவிரமாக யோசிக்கத் தொடங்கினார். இந்தியாவிற்கான தன் கனவுகளையும் உருவாக்கிக் கொண்டார்.

நேருவின் சித்தாந்தமும், கொள்கையும் காங்கிரஸ் தலைவர்களின் ஆதரவை பெறவில்லை. அப்போதைய பல தலைவர்களிடம் இருந்து அவர் தனித்து  தென்பட்டார். காந்தி, நேரு இடையே சுதந்திர இந்தியாவின் பொருளாதார கொள்கை குறித்து கடுமையான கருத்து வேறுபாடுகள் இருந்தன. இந்தியப்  பொருளாதாரம் இந்தியாவின் தனித்தன்மைக்கேற்ப நம் பலத்தை அடிப்படையாக கொண்டு இருக்க வேண்டும் என்று காந்தி நம்பினார். நேரு  மாறுபட்ட எண்னங்களுடன் இருந்தார்.

 
Sardar Vallabhai Patelகாந்தியின் கொள்கையை பின்பற்றி காந்தியின் மிக நெருங்கிய சீடராக இருந்தவர் சர்தார் வல்லபாய் பட்டேல். இந்தியாவின் இரும்பு மனிதர் என்று  அழைக்கப்பட்ட சர்தார் ஒரு சராசரி இந்திய விவசாய குடும்பத்தில் பிறந்தவர். இவருடன் பிறந்தவர்கள் மொத்தம் 6 பேர். சிறு வயதில் அவருடைய  கல்விப் படிப்புக்காக அவரே சம்பாதிக்க வேண்டிய நிலை. குடும்பத்தில் இருந்து பெரிய உதவி எதுவும் அவருக்கு கிடைக்க வில்லை. 22 வயதில்  தான் மெட்ரிக்குலேஷன் தேர்வினை முடித்தார்.

அவருடைய லட்சியம் இங்கிலாந்து சென்று பாரிஸ்டர் பட்டம் பெறுவது தான். ஆனால் அவரிடம் அதற்கு தேவையான பணம் இல்லை. அதனால்  ஒரு சாதாரண வக்கீலாக (Pleader) பணியாற்ற தொடங்கினார். அந்தப் பணி மூலம் சேமிக்கும் பணத்தைக் கொண்டு இங்கிலாந்து செல்ல வேண்டும்  என்பது தான் அவரது லட்சியம். இளைமைக் காலத்தில் அப்பொழுது பரவிய பிளேக் நோயால் பட்டேல் பாதிக்கப்பட்டார். ஆனால்  அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். 1909ம் ஆண்டு அவருடைய மனைவி இறந்தார். மனைவியின் மறைவிக்குப் பிறகு இரு குழந்தைகளை  வளர்க்கும் பொறுப்பு, குடும்பப் பொறுப்பு என ஓயாமல் உழைத்தாலும் இங்கிலாந்து லட்சியத்தை மட்டும் அவர் மறக்கவே இல்லை.

தனக்கு கிடைத்த இங்கிலாந்து வாய்ப்பை தன் தம்பிக்காக தியாகம் செய்தார். தான் இங்கிலாந்து செல்வதற்காக சேமித்த பணத்தை தன் தம்பிக்கு  கொடுத்து அவரை இங்கிலாந்து அனுப்பி வைத்தார்.

ஒரு வழியாக தன் 36வது வயதில் தான் அவரால் இங்கிலாந்து செல்ல முடிந்தது. இத்தனை வருடங்களில் அவர் பெற்ற அனுபவம், வாழ்க்கையில்  நடந்த சோகங்கள் அவரை இரும்பு மனிதராக மாற்றியது. இங்கிலாந்தில் தன்னுடைய வகுப்பில் முதல் மாணவராக தேறிய பட்டேல் பின்  அகமதாபாத் வந்தவுடன் நகரின் முக்கிய பாரிஸ்டாராக உருவாகினார்.

1918ம் ஆண்டு தான் பார்த்து வந்த பாரிஸ்டர் தொழிலை உதறி விட்டு இந்திய தேசிய காங்கிரசில் தன்னை இணைத்துக் கொண்டார். பட்டேல்  மகாத்மா காந்தியின் வலதுகரமாக இருந்தவர். காங்கிரசில் காந்திக்கு அடுத்த நிலையில் இருந்தவர். இந்தியாவின் முதல் பிரதமராக பதவியேற்க  இவருக்கு தான் ஒட்டு மொத்த காங்கிரசின் ஆதரவும் இருந்தது.

ஒரு சாதாரண இந்தியராக, சராசரி இந்தியன் அனுபவிக்கும் பல துன்பங்களை அனுபவித்து தன்னுடைய விடா முயற்சியால் முன்னேறிய பட்டேல்  ஏன் பிரதமராக முடியவில்லை ?

பட்டேல் பிரதமராகி இருந்தால் இந்தியா முன்னேறியிருக்குமா ?

நேரு எப்படி பிரதமாரானார் ? அவர் பிரதமரானதால் இந்தியாவிற்கு ஏற்பட்ட நன்மை என்ன ? அவர் செய்த தவறுகள் என்ன ?

அடுத்து வரும் வாரங்களில் கவனிப்போம்...

 
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2008 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |