Tamiloviam
தொடர்கள்
இந்த வார இதழில்
தராசு
வ..வ..வம்பு
திரைவிமர்சனம்
நூல் அறிமுகம்
சிறுகதை
கவிதை
சமைத்து அசத்தலாம்
கவிதை
சிறுகதை
திரையோவியம்
அறிவிப்பு
 
  முதல் பக்கம்
சென்ற இதழ்கள்
கங்கை இல்லாத காசி - பாகம் : 3
- பாஸ்டன் பாலாஜி
பாகம் : 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 (முற்றும்)
{இப்பகுதியை அச்செடுக்க}     {இத்தொடரை அச்செடுக்க}

உனக்கு நான்; எனக்கு நீ என சலீம், அனார்க்கலி போல கல்யாணங்களில் சந்தனப்பேலா, கற்கண்டுத் தட்டு மாற்றிக் கொள்வது போல விரல்களைக் கிள்ளி, கோயில் மதில் சுவர் இருட்டில் கொஞ்சி, வகுப்பு முடிந்ததும் சைக்கிளில் ஒன்றாக வீடு திரும்பி, மண்டபத்தில் அவள் மருதாணி பறிக்கையில் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து.... வேண்டாம் அசிங்கம்!

இப்படியே இரண்டு வருஷங்கள் போன பிறகு, பம்பாயில் இருந்து ஒருத்தன் அவளை பெண் பார்க்க வந்து, அவள் தனியாக என்னிடம் மூக்கைச் சிந்திப் போட்டு, ரெண்டு பேரும் அரளி விதை அரைத்துக் குடிப்பதா, ஓடி விடுவதா என்று குழம்பி, நாங்கள் முடிவெடுப்பதற்குள் அவள் கலியாணம் நிச்சயமாகி விட்டது.

எனக்கு வேலையில்லாத படியாலும், வேறு சாதிக்காரன் ஆன படியாலும் ஓடிப்போகத் துணியவில்லை. சலீம் - அனார்கலி, லைலா - மஜ்னுவின் காதலுக்கே அமரத்துவம் இருக்கட்டும் என்று விட்டுக் கொடுத்து விட்டோ ம்.

கயஸ் மாதிரி கைலாசநாதர் கோயில் குளப்படியில் நாலு நாள் தாடியோடு நான் இருக்க சந்தியாவதனம் பண்ண வந்த அம்புலுவின் தகப்பனார் "டேய் செல்வம், அம்புலு கல்யாணம் நிச்சயமாயிடுத்து; தெரியுமோன்னோ? நேரே பத்தாம் நாள் முகூர்த்தம். மாப்பிள்ளைக்கு லீவே இல்லியாம். சீக்கிரம் முடிக்கணும்னு அவசரப் படுத்தறா. இப்படிக் குரங்கு சாகக் கொடுத்த ஆண்டி மாதிரி இங்கே ஏண்டா உட்கார்ந்திடிருக்கே? மசமசன்னு இருக்காம காய்கறி, மளிகை எவ்வளவு காரியம் கெடக்கு! உக்கிராண அறைப் பொறுப்பு உன்னுதுதான்", அவர் சொல்லிக் கொண்டே போனார்.

அப்புறம் என்ன ஆச்சு? வாயிலே ஈ நுழைவது தெரியாமல் பம்பரமாய் சுற்றினேன். சரியா எட்டாம் மாசம் அம்புலு வயத்தை சரிச்சிண்டு வந்தா. நல்ல உயரம். பருமன். அடையாளம் கண்டு பிடிக்கிறதே சிரமமா இருந்தது.

பிள்ளையப் பெத்து எடுத்துண்டு போறப்ப "செல்வம், அவருக்கு மாகாணிக் கிழங்குன்னா ரொம்ப இஷ்டம்"ன்னு ஆதங்கப்பட்டு சந்தைக்கு அனுப்பி வாங்கிண்டு வரச் சொல்லி பாக் பண்ணி எடுத்துண்டு போனா.

அனார்கலிகள் சமாதியான பிறகு சலீம் ஜஹாங்கீராகி நூர்ஜஹானை நிக்கா செய்து கொண்டது முன்னே. இப்பொவெல்லாம்தான் ஆணோடு பெண் சரிசமமாச்சே! ஆணைப் பெண் தோற்கடிச்சுடறா.

உனக்கு எப்படி இந்த பிராமண பாஷை வந்ததுன்னு கேட்பா? அம்புலு, வைதேகி, இப்போ பிருந்தா... எல்லாரோடேயும் பழகிப் பேசி! சே, ப்ருந்தாவை இந்த லிஸ்டுலே சேர்த்திருக்கக் கூடாது.

அப்புறம் மனசு மாறி... அதான் மாத்திட்டாளே புண்ணியவதி. ரொம்பப் பெரிய மனுஷி மாதிரி அவ பேச்சும், அறிவுரையும் எங்க வர்க்கத்திலேயே, பெத்தவங்க சுட்டி காட்டின ஒருத்திக்கு தாலி கட்டினேன். காலத்திலே சந்தானமும் கிடைச்சது. இந்த இயந்திரமான வாழ்க்கையிலேதான் பிருந்தா குறுக்கிட்டாள்.

நாங்க பாத்துண்டப்போ கம்பர் இருந்திருந்தா புதுசா, அற்புதமா ஒரு கவிதையே பாடி இருப்பார். பாஸ்கர் அத்தனைக்கு மேதாவி இல்லையே!

"நீங்க ஏன் கச்சேரி செய்யக் கூடாது? இவ்வளவு நல்ல குரல் வளம் இருக்கறப்போ?" நான் கேட்க.

"முதல்லே எங்க ஊர் கோவில்லே நவராத்திரி கச்சேரி ஒண்ணு பண்ணினேன். அது பெரிய கதை"!

ஆமாம் இன்னிக்கு இப்படியேன் அசடு வழிஞ்சேன்! ஒண்ணரை சாண் இடத்திலே பாஸ்கர் மனைவி எழுந்து போடான்னு சொல்லாத வண்ணமா, குழந்தைகளிடம் "அவாள்ளாம் போகட்டும்; சாதம் போடறேன்"னு இதமா சொல்லி, "மணி எட்டாச்சே. சாப்பிட வேண்டாமா? நாளை ஆபீஸ் கிடையாதா?"ன்னு கத்தி, அப்புறமாதான் என் மரமண்டையில் உறைத்து நான் புறப்பட்டேன்.

அந்தக் கதையைக் கேட்கத்தான் நான் பிருந்தா வீட்டுக்குப் போயிருப்பதாக நினைத்துக் கொண்டிருப்பான் பாஸ்கர்... மடையன்.

"எங்க வீட்டிலே அவர் இல்லே. டூர் போயிருக்கார். அங்கே வாங்களேன். கொஞ்சம் பேசிண்டிருக்கலாம்", பிருந்தா அழைக்க, "பாஸ்கர், நீ சாப்பிட்டுட்டு வா", நான் பிருந்தாவை அவளின் வீட்டுக்குள் தொடர்ந்தேன்.


அந்த சமயத்தில் அவளுக்கு வரன் பார்த்துக் கொண்டிருந்தார்களாம். ஜாதகம் பொருத்தமாகி பெண் பார்க்க வந்த பிள்ளை வீட்டார் அந்தப் படலம் முடிந்ததும் "போன வாரம் கோவில்லே தேங்காமூடிக் கச்சேரி பண்ணினது உங்க பெண்தானே?" என்று விசாரித்திருக்கிறார்.

பிருந்தாவுக்கு அப்பா இல்லை. தாய்மாமனிடம் வளர்ந்தவள். அவளது அம்மாவும் பயந்தபடி தலையாட்டி இருக்கிறாள். "பெண்ணை எங்களுக்குப் பிடித்திருக்கிறது. ஆனால், கச்சேரி அது, இதுவெல்லாம் எங்களுக்கு ஒத்து வராது. வீட்டிலே குத்து விளக்கை ஏற்றி வைத்து அம்பாள் முன் பாடத்தான் சங்கீதம். ஊரிலே உள்ள ரௌடி, போக்கிரி, வேலையத்த வெட்டித் தடியன்கள் முன் பாட அல்ல. அந்த மாதிரி எண்ணங்களை மூட்டை கட்டி வைத்து விடுவதாக ஒப்புதல் தந்தால் சம்பந்தம் பேசுவோம். எங்கள் குடும்பம் பெண்கள் சம்பாதித்து சாப்பிடுகிறதில்லை", இப்படி நிபந்தனைகள் போட்டார்களாம்.

சங்கீதத்தைப் பற்றி எவ்வளவு உயர்ந்த அபிப்ராயம். கச்சேரி கேட்க வருகிற எல்லாருமா போக்கிரிகள்? கணவன் ரசிக்க மட்டும் அலங்காரம் என்றால், பெண்கள் கோவிலுக்கு, விழாக்களுக்கு, மற்றபடி வெளியில் வரும்போது அலங்கரித்துக் கொள்வானேன்? இன்னும் சொல்லப்போனால், முக்கால் வாசிப் பெண்கள் வெளியில் புறப்படும் போதுதான் அழகாக அலங்கரித்துக் கொள்கிறார்கள்.

சரி, விஷயத்துக்கு வருகிறேன். மாப்பிளையும் பிடித்து, மற்ற ஐயிட்டங்களும் ஒத்து வந்ததால் சுலபமாக வாக்குறுதி கொடுத்து விட்டாள், ப்ருந்தாவின் தாயார்.

பிருந்தாவுக்கு பைத்தியம் பிடித்தாற் போல் இருந்ததாம். அப்படியென்ன இவர்கள் கண்டிஷன் போடுவது என்ற எரிச்சல். ஒரு சினேகிதியின் கல்யாண மேடையில் அவள் பாட்டைக் கேட்ட கிளப் செக்ரடரி, ஒரு விழாவில் அவள் கச்சேரிக்கு ஏற்பாடு செய்திருந்தாராம். முன்பே ஒப்புக் கொண்ட கச்சேரி ஆனபடியால் அது மட்டும் நடந்ததாம்.

இவ்வளவையும் சொல்லி முடிப்பதற்குள் ப்ருந்தா பலமுறை கண் கலங்கி விட்டாள். சில இடங்களில் உணர்ச்சி வசப்பட்டு பெண்களை அடிமை கொள்ளும் ஆண் வர்க்கத்தைச் சாடினாள். கூச்சத்திரை கிழிந்தது.

(கங்கை வழியும்)

 
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2008 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |