Tamiloviam
தொடர்கள்
இந்த வார இதழில்
தராசு
வ..வ..வம்பு
திரைவிமர்சனம்
நூல் அறிமுகம்
சிறுகதை
கவிதை
சமைத்து அசத்தலாம்
கவிதை
சிறுகதை
திரையோவியம்
அறிவிப்பு
 
  முதல் பக்கம்
சென்ற இதழ்கள்
அமானுட கேள்விகளும், அரைகுறை ஞானிகளும் - முன்னுரை
- நல்லடியார்
பாகம் : 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 (முற்றும்)
{இப்பகுதியை அச்செடுக்க}     {இத்தொடரை அச்செடுக்க}

சாந்தியும் சமாதானமும் படைத்தவன் புறத்திலிருந்து உண்டாகட்டுமாக.

இஸ்லாம் என்பது இன்றைக்கு உலகு புரிந்து வைத்திருப்பது போன்றதொரு மதமல்ல. அது ஒரு வாழ்க்கை நெறி. இஸ்லாத்தின் நோக்கம், மனிதர்கள் அமைதியாக வாழ வேண்டும் என்பதேயாகும்.

மாற்றுமத சகோதரர்கள் நினைப்பது போல இஸ்லாம் ஒரு மதமாக இருந்திருக்குமானால், அது வணக்க வழிபாட்டு முறைகளைப் பற்றித் தான் தன் திருமறையின் வாயிலாகப் போதித்திருக்கும். ஆனால் அந்தத் திருமறையின் ஆரம்ப வசனங்கள் கூறுவது என்னவென்றால்,

இது, (அல்லாஹ்வின்) திருவேதமாகும்;. இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை. பயபக்தியுடையோருக்கு (இது) நேர்வழிகாட்டியாகும். (பயபக்தியுடைய) அவர்கள், (புலன்களுக்கு எட்டா) மறைவானவற்றின் மீது நம்பிக்கை கொள்வார்கள்; தொழுகையையும் (உறுதியாக முறைப்படிக்) கடைப்பிடித்து ஒழுகுவார்கள்; இன்னும் நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து (நல்வழியில்) செலவும் செய்வார்கள். (நபியே!) இன்னும் அவர்கள் உமக்கு அருளப் பெற்ற (வேதத்)தின் மீதும்; உமக்கு முன்னர் அருளப்பட்டவை மீதும் நம்பிக்கை கொள்வார்கள்; இன்னும் ஆகிரத்தை (மறுமையை) உறுதியாக நம்புவார்கள். இவர்கள் தாம் தங்கள் இறைவனின் நேர்வழியில் இருப்பவர்கள்; மேலும் இவர்களே வெற்றியாளர்கள். (இரண்டாவது அத்தியாயம் - வசன எண்கள் 2-5)

உலக சமயங்களில் இஸ்லாமிய வாழ்க்கை நெறி மட்டுமே அதிகப்படியான கட்டுப்பாடுகளைக் கொண்டுள்ளது. இஸ்லாத்தின் மீது சேற்றை அள்ளிப் பூசிக் கொண்டிருப்போர் நியாயமான விமர்சனங்களை மேற்கொள்வதில்லை. தங்களின் மூடத்தனமும் குற்றங்களும் இஸ்லாத்திற்கு எதிராக இருப்பதால் நியாய உணர்வுகளை அவர்களால் மதிக்க முடிவதில்லை. இஸ்லாமியக் கோட்பாடுகளும் கட்டுப்பபாடுகளும் மனித இனத்திற்கு வலம் சேர்ப்பதை இவர்கள் சரியாகப் புரிந்து கொள்வதில்லை அல்லது புரியாதது போன்று நடிக்கிறார்கள்.

இஸ்லாமிய சமயத்தை விமர்சிக்கும் உரிமை இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் வாழ்ந்த காலம் முதல் இன்று வரை அனைவருக்கும் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த விமர்சனங்கள் நியாயமானதாக இருக்கவேண்டும். உண்மை உணர்த்தப்படும் போது ஏற்றுக் கொள்ளும் பக்குவம் நிறைந்ததாக இருக்கவேண்டும். இதுதான் அறிவுடமை.

முதலில் இஸ்லாத்தை விமர்சிப்பவர்கள் இன்றைய முஸ்லிம்களின் செயல்களிலிருந்து தொடங்குவார்கள். பர்தா, பெண்ணுரிமை, பலதாரமணம் எனத் தொடங்கி குண்டுவெடிப்பு, தீவிரவாதம், பின்லாடன் etc என இவர்களின் விமரிசனம் திசைமாரிச் செல்லும்.

இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் இப்படித்தான் குறை சொல்ல முடியும். மிகச் சமார்த்தியமாக தங்கள் புழுத்துப் போன கொள்கைகளையும் மூட நம்பிக்கைகளையும் மறைத்து விட்டு, இஸ்லாத்திற்கு பகரமாக அறிவியலையோ அல்லது மேற்கத்திய கலாச்சாரத்தையோ சொல்வார்கள். இதுவா விமரிசனம்?. ஒரு ஆப்பிளை இன்னொரு ஆப்பிளோடுதானே ஒப்பிட வேண்டும்? அதுதானே நியாயமும் நடுநிலையுமாகும்.

அந்த வகையில்தான் திரு.நேசகுமார், சமீபத்தில் மொழிபெயர்த்த டாக்டர். கொய்ன்ராட் எல்ஸ்ட் என்பவரின் "வஹீ- ஒரு அமானுடப் பார்வை" என்ற கட்டுரையைப் படிக்க நேர்ந்தது. மொழிபெயர்ப்பாளரும் ஏதோ சமூக பொறுப்பிலும், உலகளாவிய சகோதரத்துவத்தை நிலை நாட்டுவதிலும் ஆர்வமுள்ளவர் அல்லர். தனிப்பட்ட முறையில் முஸ்லிம்களின் செயல்கள் அவரின் வாழ்க்கையில் எதிர்மறை பாதிப்பை ஏற்படுத்தியதால், அவரின் இஸ்லாமிய எதிர்ப்புவாதத்தை நியாயப்படுத்தி இருந்ததையும், எழுத்தாளர் திரு. யமுனா ராஜேந்திரன் மற்றும் பி.கே. சிவகுமார் இவரின் இஸ்லாமிய எதிர்ப்புவாத அணுகுமுறையை விமரிசித்திருந்ததையும் இங்கு குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும்.

சிந்தனைக்கும், அறிவிற்கும் உரமிடும் கருத்துக்கள் எதுவும் அதில் இல்லையென்றாலும், ஏதோ உலகப் பிரச்சனைக்களுக்கெல்லாம் இஸ்லாம் / திருக்குர்ஆன் தான் காரணம் என்பது போலவும், இஸ்லாம் தான் வன்முறைகள் எல்லாவற்றிற்கும் வித்திட்டது போலவும் எழுதியிருந்தார்.

கட்டுரையின் முழு பரிமாணமே நபிகள் நாயகத்திற்கு வந்த "வஹி" எனும் இறைச் செய்தியையும் அதன் நம்பகத்தன்மையையும் அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளதால் இதற்கான விளக்கம் எழுத வேண்டியது அவசியமாகிறது.

இதுவரை எவருமே இஸ்லாத்தின் அடிப்படையை ஆராயாதது போலவும் இந்தியாவில் இருந்த ஒரு சில இந்துமத அறிஞர்கள் மட்டும் இதில் கவனம் செலுத்தி அதிலிருந்த முரண்பாடுகளை கண்டுபிடித்தாகவும் அதில் குறிப்பிடத்தக்கவர்களாக சுவாமி தயானந்த சரஸ்வதி, விவேகானந்தர் போன்றவர்களின் பெயர்களில் சில கருத்துக்களை எழுதியிருந்தார். (இவர்களின் பின்னணி "இந்துத்துவா மீட்சி" என்பதும், அதற்கு தடைக்கல்லாக இஸ்லாம் இருப்பதும் வேறு விஷயம்)

அது மட்டுமின்றி சரியான பயிற்சி இல்லாததால், அதாவது ஒரு யோகிக்குரிய பயிற்சி எதுவும் நபிகள் நாயகத்திற்கு இல்லாததால் அவருக்குத் தோன்றிய ஒரு சில நல்ல கருத்துக்களுக்கு இடையே தனது சொந்தக் கருத்துக்களையும் திணித்து தன்னை முன்னிலைப் படுத்தினார் என்ற குற்றச்சாட்டையும் வைத்துள்ளார்.

மனிதர்களின் எதார்த்த குணம், நியாயமான எவ்வித புதிய கருத்துக்களையும் உடனடியாக ஏற்றுக் கொள்வதில்லை. இந்த நிலை ஏன் என்று ஆராய்ச்சி செய்த மனோவியல் ஆராய்ச்சியாளர்கள் "மனிதனின் வாழ்வியல் பய உணர்ச்சிகளின் காரணாமாகவே இவ்வாறு நிகழ்கிறது" என்று கணிக்கின்றனர். இந்த மனப்பான்மையை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். SUSPICION என்னும் சந்தேக நோக்கு SKEPTICISM என்னும் சமயக் கொள்கைகளின் மீதான அவநம்பிக்கை.

வஹீ-பற்றிய மொழிபெயர்ப்புப் பதிவில் Dr.Koenraad Elst / நேசகுமார் போன்றவர்களுக்கு வந்திருக்கும் சந்தேகம் இரண்டாவது வகையே. இஸ்லாத்திற்கு எதிரான சந்தேகம் அது அறிமுகப்படுத்தப் பட்டதிலிருந்தே தொடர்கிறது. நபிகளாரின் தோழர்களாக பின்னாளில் மாறியவர்கள், இஸ்லாத்தை ஏற்பதற்கு முன் - இஸ்லாமிய ஏகத்துவக் கொள்கையை சந்தேகப் பட்டதோடு அதனை ஒழிக்கவும் கங்கணம் கட்டியவர்கள் என்பதை வரலாற்றின் மூலம் அறியலாம்.

நபிகளாரின் காலகட்டத்தில் இருந்த இஸ்லாத்தின் எதிரிகள் பல்வேறு வகையான இட்டுக் கட்டல்கள் மூலம் முஹம்மது நபியின் தூதுத்துவத்தை சந்தேகத்திற்கு உட்படுத்திட முனைந்தனர். முஹம்மது நபியின் நம்பகத்தன்மையை குறை சொல்ல அவர்களால் முடியவில்லை. ஏனெனில் இஸ்லாத்தை சொல்லும் முன்னரே முஹம்மது நபிகள் அக்கால மக்களிடையே நற்பெயர் பெற்றிருந்தார்கள்.

இஸ்லாத்தையும் அதன் புரட்சிக் கொள்கைகளையும் எந்த அறிவுப்பூர்வமான காரணம் கொண்டும் மறுக்க இயலாதவர்களுக்கு இருந்த ஒரே வழி, முஹம்மது நபியின் சொந்த வாழ்க்கை வரலாற்றை திரித்து அவர் கொண்டு வந்த வாழ்வியல் நெறியான இஸ்லாத்தை ஏனைய மேற்கத்தியக் கொள்கைகள் போல் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டதல்ல என்ற நிலைக்கு கொண்டுவர விடுபட்ட காரணங்களை தேடிப்பிடிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இதற்கு மேற்கத்திய பின்னனி கொண்ட காவிச் சிந்தனையாளர்களின் உதவி தேவைப்பட்டது.

சில விளக்கங்கள்:

1) இத்தொடரில் இஸ்லாம் அல்லாத பிற மதங்களைப் பற்றிய எனது  கண்ணோட்டம், இதுவரை நான் பார்த்த, பழகிய இன்றும் இனியும் நண்பர்களாக இருக்கும் சக இந்துக்களின்  பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள் மற்றும் சில குறிப்புகளை வைத்து எழுதியுள்ளேன்.

2) முடிந்தவரை அநாகரிகமான விமரிசனங்களை தவிர்த்துள்ளேன். சொல்லப்பட்ட கருத்துக்களின் அழுத்தம் சம்பந்தப்பட்ட மதத்தவரை புண்படுத்தவோ அல்லது இதர மதங்களின் குறையைச் சொல்லி சில இஸ்லாமியரின் தவறுகளை நியாயப் படுத்தவது என் நோக்கம் அல்ல. பேய், பூதம் போன்ற நம்பிக்கைகளுக்கு துளியும் இடம் இல்லாத இஸ்லாத்தைக் கொச்சைப்படுத்த, மொழிபெயர்ப்பாளர் அவரின் தொடரில் வானவர் ஜப்ரீல் அவர்களை பூதம் போன்று படம் போட்டிருந்தார். அதற்கு பகரமாக நானும் இந்துக்கள் வணங்கும் லிங்கம் யோனி போன்றவற்றை இட்டு அவர்களின் மனதை புண்படுத்தினால் அவருக்கும் எனக்கும் வித்தியாசம் தெரியாமல் போய்விடும் என்பதால் அதனை தவிர்த்துள்ளேன்.

3) முஹம்மது நபிகளைப் பற்றி நற்கருத்து கொண்ட மாற்றுமத மற்றும் மதம் சாராத அறிஞர்களின் விமரிசனத்தையும் தவிர்த்துள்ளதன் மூலம், இக்கட்டுரையின் நோக்கம், வஹீ பற்றியும் முஹம்மது நபி பற்றியும், முஸ்லிம்கள் மீது சுமத்தப்பட்ட அவதூறுகளுக்கான விளக்கமாகவுமே இத்தொடர் முன்வைக்கப் படுகிறது.

4) இஸ்லாத்தின் மீதான இது போன்ற ஆராய்ச்சிகளும், சிந்தனைத்தாக்குதல்களின் பின்னணியும் என்ன என்பதை இறுதியாக பார்ப்போம்.

5) என்னுடைய வேலைப்பளுவிற்கு இடையே எழுதப்பட்ட சொற்ப விளக்கமே தவிர அவரின் கட்டுரைக்கு முழுமையான விளக்கமாக கருத வேண்டாம். இதனை நான்கு தொடரில் முடித்துவிட எண்ணியுள்ளேன். தேவைப்பட்டால் பிரிதொரு சந்தர்ப்பத்தில் வாய்ப்பு கிடைக்கும்பொழுது விரிவாக பார்ப்போம்.  இவரின் முந்தைய குற்றச்சாட்டுகளுக்கு http://abumuhai.blogspot.com, http://islamicreply.blogspot.com, http://athusari.blogspot.com, http://islamanswers.blogspot.com போன்ற பதிவுகளில் விளக்கம் தரப்பட்டுள்ளது என்பதையும் தமிழோவியம் வாசகர்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன்.

 
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
Feedback Closedஇந்த தொடருக்கான பின்னூட்டப் பெட்டி மூடப்பட்டது.
Copyright © 2001 - 2008 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |