கொத்தமல்லி சாதம்

 

தேவையான பொருட்கள்

கொத்தமல்லி- ஒரு கட்டு

கறிவேப்பிலை – 5 இணுக்கு

தேங்காய்- 1/4 மூடி

உப்பு- தேவையான அளவு

புளி- சிறிதளவு

பச்சைமிளகாய்- 4

எண்ணெய்- 2 டீஸ்பூன்

கடுகு- 1 டீஸ்பூன்

கடலைப்பருப்பு- 2 டீஸ்பூன் 

வெள்ளைஉளுத்தம்பருப்பு- 2 டீஸ்பூன்

மிளகாய் வற்றல் – 2

காயம்- சிறிதளவு

பெரிய வெங்காயம்- 1

 

செய்முறை:

1.கொத்தமல்லித் தழைகளை மண் போக நன்றாக அலசிக் கொள்ளவும். சாததை விறைப்பாக வடித்து ஆற வேண்டும்.

2. மிக்ஸியில் கொத்தமல்லி, கறிவேப்பிலை, தேங்காய்த்துருவல்(பாதியைப் போட்டால் போதும்),உப்பு, புளி,காயம், பச்சைமிளகாய் ஆகியனவற்றைச் சேர்த்து அரைக்கவும்.

3. வாணலியில் எண்ணெய் இட்டு கடுகு, கடலைப்பருப்பு, மிளகாய்வற்றல்,வெள்ளை உளுத்தம்பருப்பைத் தாளிசம் செய்து கொள்ள வேண்டும். பொடியாக நறுக்கிய வெங்காயத்தைப் பொன்னிறமாக வதக்கவும்.

4.தாளிசம் செய்த பொருட்களுடன் அரைத்த விழுதைச் சேர்த்து மிதமான தீயில் வதக்க வேண்டும்.

5. வதக்கும் போது மீதி வைத்துள்ள தேங்காய்த் துருவலைப் போட வேண்டும். 

6. நீர் விட்டு கெட்டியாக ஆனதும் ஆற விட வேண்டும். பிறகு ஆறின சாதத்துடன் இந்தக் கலவையைக் கலந்து பரிமாறவும். ருசியான கொத்தமல்லி சாதத்தை மிக எளிதாகச் செய்து விடலாம்.

 

கூடுதல் குறிப்புகள்

1.ஒரே மாதிரி சித்ரான்னங்கள் செய்து அலுத்தவர்களுக்கு இது ஒரு மாற்று இணை.

2.பசியைத் தூண்டி விடக் கூடிய கொத்தமல்லி நினைவாற்றல் தர வல்லது. 3.பச்சைமிளகாய்க்குப் பதில் மிளகாய் வற்றல் சேர்த்துக் கூட செய்யலாம்.

4.அப்பளம், வடகம் அல்லது பச்சடி இதற்கு அருமையான இணை.

5.இரத்த சோகையைக் குணப்படுத்தவல்ல கொத்தமல்லியை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

தொடர்புடைய படைப்புகள் :

One thought on “கொத்தமல்லி சாதம்

  • November 14, 2010 at 1:56 am
    Permalink

    ஹும்,பரமாதமான சுவைஉடன் இருக்கும்,,,,,,,,,,,

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : November 3, 2010 @ 7:12 pm