கிரக பலம் கையாளுவது எப்படி ?

 

பொதுவாக ஜாதகத்தில் ஒரு கிரகம் நல்லதா அல்லது கெட்டதா என்பதை முடிவு செய்ய அதன் ஆதிபத்தியத்திற்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம்.  லக்கினாதிபதி என்றால் அவர் நல்லதையே செய்வார் என்றும், கேந்திராதிபதிகள், திரிகோணாதிபதிகள் நல்லவர்கள் என்றும்,கேந்திராதிபதியும், கோணாதிபதியும் ஒன்று சேர்ந்தால் அவர்கள் ராஜ யோகத்தைச் செய்வார்கள் என்றும் நமது ஜோதிட நூல்கள் கூறுகின்றன.  அதேபோல் அஷ்டமாதிபதியென்றால்,கெடுதலையே செய்வார்களென்றும்,  சஷ்டமாதிபதி (6ம் வீட்டிற்குடையவர்), விரையாதிபதி ஆகியோர் கெடுதலையே செய்வார்களென்றும் அந்நூல்கள் கூறுகின்றன.  

அதேபோன்று கெட்ட ஆதிபத்தியம் உள்ள கிரகம் 6,8,12 இடங்களில் மறைந்து போனால் அது நன்மையைச் செய்யும் என்றும் (கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜ யோகம்) ஜோதிட சாஸ்த்திரம் கூறுகிறது. இது அனுபவத்தில் எவ்வளவு தூரம் சரியாக வருகிறது எனப் பார்ப்போம்.

கீழே உள்ள ஜாதகத்தைப் பாருங்கள்.

இந்த ஜாதகக்காரர் ஒரு நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர் செய்கின்ற உத்தியோகத்தை விட்டுவிட்டு சுயமாகத் தொழில் செய்ய விரும்பினார். ஒரு ஜோதிடரிடம் சென்று ஆலோசனை கேட்டார். இவருக்கு சுக்கிர தசை ஆரம்பமாயிற்று. அந்த  ஜோதிடர் இந்த ஜாதகத்திற்கு, சுக்கிரன் 3, 8 வீடுகளுக்கு அதிபதி. அவர் 6 ல் மறைந்து விட்டார்.  ஆக கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம் என்ற விதியின்படி உங்களுக்கு இப்போது ராஜ யோகம் உள்ள தசை. சுய தொழில் செய்யுங்கள். நல்ல லாபம் கிடைக்குமென்றார்.  அதன்படி அவரும் தொழில் செய்தார்.  சுமார் 1 1/2  ஆண்டுகள்தான் வியாபாரம் செய்தார். பல லட்சங்கள் நஷ்டம். உதாரணத்திற்கு இது ஒரு ஜாதகம்தான்.

இதைப்போல் பல ஜாதகங்களை நம்மால் உதாரணம் காட்ட முடியும். வெறும் ஆதிபத்தியத்தை மட்டும் பார்த்து இது நல்லது செய்யும், அல்லது கெடுதல் செய்யும் என்று கூறுவது  சரியாக வராது.

கிருஷ்ணமூர்த்திப் பத்ததி : இந்த முறையைப் பற்றி பலரும் அறிந்திருக்கக் கூடும். கிருஷ்ணமூர்த்தி என்பவர் நமது இந்து ஜோதிடத்தையும், மேலை நாட்டு ஜோதிடத்தையும் நன்றாகக் கற்றறிந்தவர். அவைகளில் நல்ல நிபுணத்துவமும் கொண்டவர்.  அவர் ஜோதிடத்தில் பல ஆராய்ச்சிகள் செய்து புது பத்ததியை உறுவாக்கினார். அதில் ஒருகிரகம் நல்லது அல்லது கெட்டது செய்யுமா என்பதைத் தீர்மானிப்பது அந்த கிரகத்தின் உப நட்சத்திர அதிபதி.  மேற்கண்ட ஜாதகத்தில் சுக்கிரனின்  Longtitude 13" 591. அதாவது பூர நட்சத்திரத்தின் சாரத்தில் இருக்கிறார். பூரம் சுக்கிரனின் சாரமல்லவா.  சுக்கிரன் 3,8 ம் வீடுகளுக்கு அதிபதி; 6 ம் வீட்டில் இருக்கிறார்.  ஆக சுக்கிரன் 3,6,8 ம் வீட்டின் பலன்களைக் கொடுக்க வேண்டும். சரி! இந்த வீடுகளின் பலன்கள் நல்லவையா அல்லது கெட்டவையா?  சுக்கிரனின் உப நட்சத்திராதிபதியும் சுக்கிரன்தான்.  உபநட்சத்ராதிபதியும் 3,6,8 வீடுகளைக் குறிக்கின்றன.  ஆக சுக்கிரனின் தசையில் பல இன்னல்களுக்கு ஆளானார்.  இவாறாக ஒரு கிரகம் நல்லது செய்யுமா  அல்லது கெடுதல் செய்யுமா என்பதைக் கண்டறிய அதன் உப நட்சதிராதிபதியை வைத்துத்தான் சொல்ல முடியும்.

மேலை நாட்டு ஜோதிடம் : இதில் எல்லாமே பார்வைகளை வைத்துத்தான் சொல்ல வேண்டும்.  பார்வை என்றால் நமது ஜோதிடத்தில் கூறி இருப்பதைபோல் அல்ல.  இதில் இரண்டு கிரகங்களுக்கு இடைப்பட்ட தூரமே பார்வை எனப்படும்.  இந்தப் பார்வையில் நல்ல பார்வையும் உண்டு; கெட்ட பார்வையும் உண்டு.  இடைப் பட்ட தூரம் 45*,90*,180* ஆகியவை கெடுதலான பார்வையாகும்.  30*, 60*, 120* ஆகிய பார்வைகள் நல்ல பார்வையாகும். இந்தப் பார்வைகளுக்குப் பெயர்கள் உண்டு. அவைகளையெல்லாம் நாம் இப்போது விளக்கப் போவது இல்லை. உதாரணத்திற்கு ஒரு ஜாதகத்தைப் பார்ப்போம்.

இந்த ஜாதகத்தில் குரு 6 ம் வீட்டில் இருக்கிறார்.  குரு நல்லவரா? கெட்டவரா? மேலை நாட்டு ஜோதிடத்தில் ஆதிபத்தியத்தைப் பார்க்க வேண்டியதில்லை.  சந்திரன் குருவை 90 பார்வையாகப் பார்க்கிறார். இது கெடுதலான பார்வை அல்லவா?  ஆக குருவானவர் சந்திரனின் பார்வையால் கெடு பலன்களைக் கொடுப்பவராக ஆகின்றார்.  இவர் ஆடம்பரச் செலவு செய்பவராகவும், கொடுத்த பணத்தை திரும்பிப் பெற இயலாதவராகவும், அதனால் பண நஷ்டப் படுபவராகவும் ஆகின்றார். சரி! செவ்வாய் எப்படி? நல்லவரா, கெட்டவரா?  சந்திரன் செவ்வாயை 120* பார்வை அதாவது Trine Aspects ல் பார்க்கின்றார்.  ஆக செவ்வாய் நல்லவராக ஆகின்றார். தவிரவும் செவ்வாய்க்கும் குருவுக்கும் இடைப்பட்ட பார்வை 30*. அதாவது  Semi-Sextile  என்ற பார்வை. ஆக செவ்வாய் இவருக்கு நல்லதையே செய்யும்.

இவ்வாறாக ஒவ்வொரு ஜோதிடத்திலும்  ஒவ்வொரு முறை கையாளப்பட்டு வருகிறது. இதில் எதைக் கையாளுவது? என்ற கேல்வியைக் கேட்பீர்களானால் மூன்றையுமே கையாள வேண்டுமென்பதுதான் எமது பதில்.

தொடர்புடைய படைப்புகள் :

3 thoughts on “கிரக பலம் கையாளுவது எப்படி ?

 • April 15, 2019 at 10:32 pm
  Permalink

  முதலில் கொடுத்த உதாரண ஜாதகத்தில் லக்னாதிபதி ஆறாம் இடத்ததிபதியுடன் சேர்ந்து அஸ்தங்கம் ஆகி, ஆறாம் இடத்தில் உள்ள ஒரு கிரகத்தின் தசா நடக்கிறது என்றால் மரத்தடி ஜோதிடர் கூட ”கவனமாக இரு” என்று கூறுவார்.

  ஆனால் இவரது ஜாதகப்படி இவர் நஷ்டப்பட வேண்டியது கர்மா என்பதால், இவருக்கு வாய்த்த ஜோதிடர் அவரை புதைகுழியில் இழுத்து விட்டு சென்று விட்டார்.

  நடக்கப்போகும் நிகழ்ச்சிகளுக்கான அறிகுறிகளை ஓரளவிற்கு அறிந்து கொள்வதற்க்கு தான் ஜோதிடம் உபயோகப்படுமே தவிர அதிலிருந்து தப்பிப்பது சிரமம்.

  Reply
 • August 14, 2017 at 7:39 am
  Permalink

  மிகவும் நல்ல முயற்சி. உன்னையில் ஜோதிடம் என்பது கடல் தான்.மிக்க நன்றி ஐயா.

  Reply
 • April 5, 2017 at 10:45 pm
  Permalink

  dear Honerable Sir, You are doing a wonderful Job.There is no words to praise you Sir.Keep it up Sir. I have studied KP.System. It’s helpful to my family and my friends.Really your work is need to our people. Without studying some people are spoiling the holy Science.
  Sir I am From srilanka lives in Scarborough, Canada.My date of birth is 6th of April 1950. Birth time 7:46PM.Vattukottai ,Jaffna.Lagna Thulam.Natchathram Anusham,Virusika rasi.

  Reply

Leave a Reply to Ram Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : November 3, 2010 @ 11:41 pm