எப்படிப்பட்ட சினிமா தமிழில் வரவேண்டும்

எப்படிப்பட்ட சினிமா வர வேண்டும் என பார்ப்பதற்கு முன் எப்படிப்பட்ட் சினிமா வந்து கொண்டு இருக்கு என்பதை பார்ப்போம்.

1. மதுரை தான் கதைக்களன் – ஹீரோ,வில்லன் அனைவருக்கும் வேலையே யாரையாவது வெட்டுவதுதான்,எப்போதும் கையில் அரிவாளோடு அலையனும்.படம் ஃபுல்லா ரத்தம் தெறிக்கோனும். இடை இடையே ஒரு பாட்டு,ஒரு குத்துப்பாட்டு,ஒரு ரீ மிக்ஸ் பாட்டு.

2. காதல் கோட்டை ஹிட் ஆனாலும் ஆனது,அந்த படம் வந்த சமயத்தில் காதல் என்ற வார்த்தையை வைத்து 47 படங்கள் வெளியானது. நம்ம ஆட்களிடம் உள்ள கெட்ட பழக்கமே "போல செய்தல்".  அதாவது ஒரு படம் ஹிட் ஆனால் அதே போல் தொடர்ந்து படம் தருவது.அகத்தியனே மறுபடி அதே ஃபார்முலாவில் காதல் கவிதை தந்தாரே?

3. சமீப காலமாக க்ளைமாக்சில் ஹீரோவை சாகடிப்பது தொடர்கிறது. ராவணன், காதல் சொல்ல வந்தேன், பாணா காத்தாடி.. என நீள்கிறது பட்டியல். எதற்கு இந்த போலியான அனுதாப ஒட்டு வரவழைக்கும் போக்கு? கதை அனுமதித்தால் மட்டுமே ஹீரோ சாக வேண்டும். வலுக்கட்டாயமா சாகடிக்ககூடாது.

4. ஹீரோ ஒரு ஊரில் இருப்பார், ஏதோ வேலையாகவோ அல்லது வேலை வெட்டி இல்லாமலோ வேற ஒரு ஊருக்கு போவார், அங்கே ஒரு ரவுடி அல்லது தாதாவின் கொட்டத்தை அடக்குவார். இந்த ஃபார்முலாவில் விஜய், விஷால் உட்பட பலரும் பல படங்களில் நடித்து விட்டார்கள்.

 

எப்படிப்பட்ட சினிமா வர வேண்டும்?

1. இலக்கியத்துல இருந்து கதை எடுக்கனும்.ஏராளமான நாவல்கள் இருக்கு.அதற்கு திரைக்கதை எழுதி படம் எடுக்கனும்.எத்தனையோ எழுத்தாளர்கள் இருக்கிறார்கள் ,அவர்களிடம் இருந்து கதை வாங்கனும்.அவர்களுடன் அமர்ந்து திரைக்கதை உருவாக்கனும்.

2. நிறைய இயக்குநர்கள் கதை, திரைக்கதை உட்பட அனைத்து பொறுப்புகளையும் பார்க்க ஆசைப்படுகிறார்கள்.அதெல்லாம் டி ஆர் கே பாக்கியராஜ் காலத்தோடு சரி.இனிமே ஒவ்வொரு இலாகாவுக்கும் ஒரு ஆள் தனியா செயல்படனும். திரைக்கதை அமைக்க பெரிய டீம் வேணும், அவங்க பேரை டைட்டில்ல போடனும் (அப்போதான் அவங்க ஒழுங்கா ஒர்க் பண்ணூவாங்க)

3. விகடன் வார இதழில் கரையெல்லாம் செண்பகப்பூ எனும் தொடர் சூப்பர்ஹிட் ஆனது,அது சுஜாதாவின் சம்மதத்தின் பேரில் பிரதாப்போத்தன் ஹீரோவாக நடிக்க அதே டைட்டிலில் படமாக்கப்பட்டு தோல்வி அடைந்தது,காரணம் ஹீரோ செலெக்‌ஷன்.கணெஷ் மாதிரி ஒரு புத்திசாலி கேரக்டர் பிரதாப் மாதிரி ஒரு லூஸ் தனமான (மீண்டும் ஒரு காதல் கதை)ஆள் செய்தது ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை.எனவே ஹீரோ செலக்‌ஷனில் கவனம் வேண்டும்.இவர் கால்ஷீட் கிடைச்சுடுச்சு படம் பண்ணிடலாம்னு இருக்கக்கூடாது.

4. மோகமுள் (தி.ஜானகிராமன்) அதே பெயரில் படமாக்கப்பட்டு விமர்சகர்களால் பாராட்டப்பட்டாலும் வியாபார ரீதியில் தோல்வி.இதற்குக்காரணம் படத்துக்கு விளம்பரம் இல்லாமையும் ,புதுமுக நடிகர்களை போட்டதும்தான்.இந்த மாதிரி ரிஸ்க் உள்ள கதைக்கு ஃபேமஸ் ஹீரோவே சரி.படம் தயாரிக்க ஆகும் செலவில் 40% விளம்பரத்துக்கும் செலவு செய்ய வேண்டும்.

5. அதே போல் காயத்ரி, ப்ரியா இரண்டும் ரஜினி படங்கள் சுஜாதா கதை. இதில் இரண்டு படங்களும் ஹிட் தான் என்றாலும் சூப்பர்ஹிட் இல்லை. அதற்குக்காரணம் ஒரிஜினல் கதையில் கை வைத்தது. நாவல் ஆசிரியர் என்ன எழுதி இருக்காரோ அதை அப்படியே படம் எடுக்க முடியாதுதான், அதற்காக 75% மாத்தினா இப்படித்தான் ஆகும்.

6. சுஜாதாவின் சூப்பர்ஹிட் நாவலான பிரிவோம் சந்திப்போம் கதையில் வந்த மதுமிதா, ரத்னா கேரக்டர் ஏற்படுத்திய பாதிப்பை தமனாவோ, ருக்மணியோ, டைரக்டரோ ஏற்படுத்த முடியவில்லை. அதனால் படம் வந்த சுவடே தெரியாமல் போனது. அந்தப்படத்தின் இயக்குநர் அந்த நாவலைப்படித்தே பார்த்திருக்க மாட்டார், மேலோட்டமாக கதை கேட்டிருப்பார். நாவலை படித்தால்தான் அந்த உணர்வுகளை உள் வாங்க முடியும். எனவே நாவலைப்படம் எடுக்கு இயக்குநர்கள் முதலில் முழுசாக நாவலைப்படிக்க வேண்டும்.

7. தங்கர் பச்சானின் கல்வெட்டு கதை  (அழகி)ஹிட்.மண் சார்ந்த பதிவாக அப்படி எடுக்கனும்.

8. நாஞ்சில் நாடனின் தலைகீழ் விகிதங்கள் கதை சேரனின் சொல்ல மறந்த கதை யாகி ஜெயித்தது.அது போல் ஈடுபாட்டுடன் மொத்த டீமே உழைக்கனும்.

9. ஜெயகாந்தனின் சிலநேரங்களில் சில மனிதர்கள் கதை படமாகி ஹிட். சம்பந்தப்பட்டா கதாசிரியரே ஆல் இன் ஆல் வேலை பார்த்தார்.

10. எழுத்தாளர் அனுராதா ரமணன் எழுதிய சிறை கதை அதே பெயரில் படமாகி ஹிட்.ஆர் சி சக்தி மிக திறமையாக படம் பிடித்தார்.

11. பாக்யராஜின் பவுனு பவுனுதான் தொடராக பாக்யாவில் வந்து பாராட்டை அள்ளினாலும் படம் படுதோல்வி.திரைக்கதை மன்னன் என பெயர் எடுத்தவர் இதில் சறுக்கியது ஏன்?ஹீரோயின் மார்பில் மாமனின் பெயரை பச்சை குத்தியதைப்போல வரும் சீன் ஏற்க இயலாததாக இருந்தது.நாவலில் ஏற்படுத்தாத நெகடிவ் பாதிப்பை சினிமா ஏற்படுத்தியது.

12. அப்புறம் ரெண்டரை மணி நேரம் எடுத்தே ஆகனும்னு ரசிகர்களை கொன்னெடுக்க தேவை இல்லை.சினேகா பிரசன்னா நடித்த அச்சமுண்டு அச்சமுண்டு,பிரசாந்த் நடித்த ஷாக், போன்ற படங்கள் ஒன்றரை மணீ நேர படங்களே,வித்தியாசமாக கொடுத்தால் மக்கள் கண்டிப்பாக ஏற்பார்கள்.

தொடர்புடைய படைப்புகள் :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : November 3, 2010 @ 7:13 pm