கொஞ்சம் வெடிச்சுட்டு போங்க :)

:)

 

தல தீபாவளி தெரியும், அது என்ன சின்ன தல தீபாவளி ?

சின்ன வீட்டோட இது தான் முதல் வருஷ தீபாவளி.


 

சார் விஜய் வெடி வேணுமா ?

என்னது விஜய் வெடியா?

ஆமா. பற்ற வைக்க வேண்டியது இல்லை. பஞ்ச் டயலாக் பேசுனாலே போதும்.


 

இது என்ன புதுசா லவ்வர்ஸ் வெடி ?

ஆமா! இங்கே பற்ற வெச்சா ஊர் எல்லையைத் தாண்டிப்போய் வெடிக்கும்.


 

தீபாவளி அன்னைக்கு எதுக்கு அஜீத் வீட்டுக்கு கிளம்பிட்டே?

’தலை’க்கு எண்ணெய் தேய்ச்சுட்டு அப்புறமா குளின்னு சொன்னாங்க. அதான் ’தல’ வீட்டுக்கு போறேன்.


 

அண்ணே! குருவி வெடி ஒன்னு குடுங்க.

அது பழசுங்க. சுறா வெடின்னு புதுசா வந்திருக்கு அதை வாங்கிட்டுப் போங்க.


 

லஷ்மி வெடி தெரியும் இது என்ன புதுசா அர்ஜுன் வெடி ?

ஆமா. பற்ற வெச்சா ’வந்தேமாதரம்’-னு கோஷம் போட்டுக்கிட்டே வெடிக்கும்.


 

தீபாவளி அன்னைக்கு ஹீரோ ஏன் கோவமா இருக்கார் ?

அவர் வெடி வெடிச்சாலும் அது புஸ்னுதான் போகுதாம்.

 

:)

தொடர்புடைய படைப்புகள் :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : November 3, 2010 @ 7:13 pm