அப்படி போடு ரோஹிணி.. ஆஹா

ஆஹா FM (91.9) அப்படி போடு நிகழ்ச்சியின் RJ ரோஹிணியுடன் ஒரு மினி பேட்டி.


நீங்க இப்பதான் வாயாடியா இல்லா சின்ன வயசுலேயே இப்படிதானா ?

செண்ட் ஜோசப் மகளிர் பள்ளி திண்டுகல்ல தான் +2 வரை படிச்சேன். ஸ்கூல் ரொம்ப ஸ்டிரிக்ட். ஆனா அங்கேயும் அப்போ அப்போ கட் அடிச்சுட்டு சினிமாவுக்கு போயிடுவோம். ஸ்கூல்ல என்னை எல்லாருக்கு தெரியும். 

மதுரை தியாகராயல Bio Technology படிச்சேன். காலேஜுல பெரிய ரவுடி. ப்ரின்சிபலே என்ன பார்த்தா என்னமா எப்படி இருக்கேனு விசாரிப்பாரு. Bio Technology னாலே ஒரு படிப்ஸ்தான். Culturalsல சேர்க்கவே மாட்டாங்க. நான் போய் ஏன் எங்களுக்கு ஆடத் தெரியாதா.. சண்டை போட்டு culturalsல சேர பர்மிஷன் வாங்கினேன்.   2007ல.. Best Cultural Womenனு மெடல் வாங்கினேன்.

Bio Technology to RJ எப்படி ?

காலேஜ் பிரின்சிபால் மற்றும் தமிழ் லெக்சரர் இவங்க ரெண்டு பேரும்தான் இந்த லைனை விட்டுட்டு மீடியா லைன்ல போம்மான்னு ஐடியா கொடுத்தாங்க. பேராசிரியர் கு. ஞானசம்பந்தம் ஐயாதான் சென்னை ஆல் இந்தியா ரேடியோவுல அடிப்படை விஷயங்களை கத்துக்க சொல்லி ரெகமண்ட் செஞ்சாரு. ரெண்டு மாசம் பேசிக்கா சில விஷயங்களை கத்துகிட்டு அப்புறம் எல்லா FM ஸ்டேஷன்லயும் ரெஸ்யூம் அனுப்பி வேலை தேட ஆரம்பிச்சேன். எங்கேயும் பதிலே இல்லை. அப்போதான் ஆஹா FM நம்பர் கிடைச்சுது. நேரா போன் செஞ்சு வேலை இருக்குனா இருக்குன்னு சொல்லுங்க, இல்லேனா இல்லைனு சொல்லுங்க.. ஏன் இப்படி அலைய வெக்கறீங்கனு கேட்டேன். அவங்க அப்புறம்  நேர்ல வர சொல்லி, RJ வேலை ஒன்னும் இல்லை வேணும்னா PRO வேலை இருக்கு.. சினிமா பிரபலங்கள் கிட்ட ரேடியோ சம்பந்தமான பேட்டி எடுக்கனும், செய்வியான்னு கேட்டாங்க. சரி ஜாலியான வேலைனு சேர்ந்துட்டேன்.

RJவா எப்போ ஆனீங்க ?

ரேடியோவுல நிறைய filler வரும், ஒரு தடவை நான் வாய்ஸ் கொடுத்தேன்.. அதை கேட்டு MD இந்த பொண்ணு வாய்ஸ், மாடூலேஷன் நல்லா இருக்கேனு சொன்னப்ப, என்ன வெச்சே ஒரு filler தனியா ஆரம்பிச்சாங்க. நமீதா நர்சரி ஸ்கூல்னு. அதுக்கு ஏகப்பட்ட நெகடிவ் ரீச். ஏன்னா அந்த நிகழ்ச்சி பூராவே டபுள் மீனிங்தான். மகளிர் சங்கம்ல இருந்து சண்டை போட ஆரம்பிச்சுட்டாங்க. அப்புறம் சின்ன மாப்ளே, பெரிய மாப்ளே இதுலதான் நானும் ஒரு RJ வா தொடங்கினேன். நான் படிச்சது திண்டுக்கல் அப்புறம் மதுரை, இருக்குறது சென்னையில ஆனா அந்த ஷோல கோயம்பத்தூர் பாஷை பேசணும்.

அப்படி போடு நிகழ்ச்சி எப்போ தொடங்கினீங்க ?

அப்படி போடு நிகழ்ச்சி மொதல்ல சாந்தினிதான் (கானே அஞ்சானே) தொடங்கினாங்க. அப்புறம் அவங்களால தொடர்ந்து செய்ய முடியலைன்னு MD ஒரு நாள் என்னைய கூப்பிட்டு இனிமே நீ அந்த நிகழ்ச்சிய பண்ணுன்னு சொன்னாரு. இப்போ மூணு வருஷமா தொடர்ந்து போய்கிட்டிருக்கு.

நேரத்தை வாரத்துக்கு ரெண்டு நாளாவது தப்பா சொல்லறீங்களே ? வேணும்னே தப்பா சொல்லறீங்களா ?

அது என்னன்னே தெரியலை.. பார்க்கறது தப்பா ஆகுதா, இல்லை சொல்லும் போது வாய் உளறுதா தெரியலை. அப்புறம் எதையாவது சொல்லி சமாளிப்பேன். இப்ப என்னன்னா மக்கள் அதையும் ரசிக்க ஆரம்பிச்சுட்டாங்க. ஆனா இன்னி வரைக்கும் தப்பா சொல்லனும்னு சொன்னது கிடையாது, அதுவா தப்பா வருது.

வயசு வித்தியாசம் இல்லாம எல்லாரையும் வாயா, போய்யானு சொல்லறீங்களே ? உங்க ஸ்டைல்ல இதுவும் ஒன்னா ?

அதுவா.. லைவ்வா கால் எடுக்கறதுக்கு ஒரு நிமிஷம் முன்னாடி, அவங்ககிட்ட பேரு விஷயம் கேட்டு ஹோல்டுல போட்டு வெச்சுப்பேன். அப்போவே அவங்க சொல்லிடுவாங்க..போடா வாடான்னு சொன்னாதான் நாங்க பேசுவோம் இல்லைன்னா லைனை கட் செஞ்சுடுவோம்னு. நான் சாதாரணமா பேசினா நீங்க இப்படி பேசறது நல்லா இல்லை, ஜாலியா ஃப்ரெண்டு மாதிரி பேசுங்கன்னு. அதான் சமயத்துல கவுண்டமணி வாய்ஸ் ட்ராக் போட்டு சமாளிச்சுடுவேன். 

உங்க நிகழ்ச்சியோட சக்சஸ் என்ன ?

RJக்குன்னு எந்த ஒரு ஸ்டைலும் இல்லாம, சாதாரணமா வீட்டுல, ப்ரெண்ட்ஸ் கூட பேசறது மாதிரி பேசறதுதான் இந்த நிகழ்ச்சியோட சக்சஸ்ன்னு நினைக்கிறேன்.

ஓய்வு நேரத்துல என்ன செய்வீங்க ?

சண்டே சண்டே கிட்டார் க்ளாஸ் போவேன். 

Facebook, Twitter ல உங்களுக்கு பெரிய ரசிகர் மன்றமே இருக்கே உங்களுக்கு தெரியுமா ?

நான் அந்த பக்கமே போகறது இல்லை. சொல்லப்போனா நான் SMS கூட ரொம்ப அனுப்ப மாட்டேன். ப்ரெண்ட்ஸ் கூட போன்ல, நேருல அரட்டை அத்தோட சரி.

சினிமாவுல நடிக்கிற ஆர்வம் இருக்கா ? அடுத்து என்ன செய்யப் போறீங்க?

அடுத்து விஷ்ஷுவல் மீடியா போகலாம்னு ஒரு ஐடியா இருக்கு. பார்ப்போம்.

 

தொலைபேசி பேட்டி : கணேஷ் சந்திரா

படம் : மல்லிகை மகள்.

பின் குறிப்பு : www.loka.fm ல் ஆஹா FM நிகழ்ச்சிகளை கேட்டு ரசிக்கலாம்.

தொடர்புடைய படைப்புகள் :

7 thoughts on “அப்படி போடு ரோஹிணி.. ஆஹா

 • November 4, 2010 at 3:05 pm
  Permalink

  Nalladhaan irukku interview…idhu yaarunne ippodhaan therinjukitten. Bookmarking to make it a habit!

  Oru chinna pizhai – resume engira vaarthhai “may” endru mudiya vendum.

  -Na. Irasagopal.

  Reply
 • November 4, 2010 at 1:02 pm
  Permalink

  ஆவ்வ்வ்வ்வ். இப்படி பேசறீங்கன்னு தெரிஞ்சிருந்தா நானும் கேள்வி கேட்டிருப்பேன்ல. ரசிகர்மன்றத்துக்கு 2வது உறுப்பினருக்கே தெரியாம ஒரு பேட்டியா ..

  Reply
 • November 3, 2010 at 11:00 pm
  Permalink

  வோய்!! தலைவி பேட்டிய record பண்ணி போடுறத விட்டுட்டு எழுத்துல போட்டா ஒத்துக்க மாட்டோம்  

  Reply
  • November 3, 2010 at 11:03 pm
   Permalink

   ரிகார்ட் செஞ்சதை எடிட் பண்ண நேரம் ஆகும். அம்மணி அரை மணி நேரம் பேசியிருக்காங்க.

   Reply
   • November 4, 2010 at 1:03 pm
    Permalink

    அதனால என்ன? தலைவி பேசறதா மூனு மணி நேரம் தினமும் கேட்கிறோமே.. அப்படிப்போடு/சிமா பெமா)

    Reply
 • November 3, 2010 at 10:19 pm
  Permalink

  ஆஹா !! ஒரு வழியா உங்க தலைவிகிட்டே பேசிட்டீங்க போல !! வாழ்த்துக்கள் !! கேள்வி எல்லாம் நச்ச்னு இருக்கு !! அது சரி இது உண்மையிலேயே எடுத்த பேட்டியா இல்ல கற்பனையா இல்ல கனவா ? எதுவானாலும் அருமை !!

  Reply
  • November 3, 2010 at 10:29 pm
   Permalink

   நன்றி.

   இது உண்மையிலேயே தொலைபேசியில் எடுத்த பேட்டி. 🙂

   Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : November 3, 2010 @ 10:51 pm