பல நாள் திருடன் ஒரு நாள்

 

வழக்கம் போல இன்றும் காலை என் அலுவலகம் இருக்கும் தளத்திற்குச் செல்ல மின் தூக்கி அருகே சென்றபோதுதான் கவனித்தேன். ஒரு 15 பேர் ஆண்களும் பெண்களுமாய் கறுப்பு பேண்ட், சட்டையில் மவுனமாக சுவரோரம் நின்றிருந்தார்கள். Middlesex Countyயில் பணிபுரியும் பலரைத்தெரியும் என்பதால் முகங்கள் பரிச்சியம் இல்லாதிருந்ததால் சற்றே ஆச்சரியம் இருந்தது. 

NJ Governor Chris Christieவிஷயம் என்னவென்றால், நிறைய தேர்தல் வாக்குப்பெட்டிகள், கணினிகள் மற்றும் பொருட்கள் வாங்கும் துறையில் நிறைய ஆவணங்கள் FBI ஆல் கைப்பற்றப்பட்டதாகவும், சமீபத்திய தேர்தலில் முறைகேடுகள் நடந்திருக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பில் தேர்தல் அலுவலகம், மற்றும் கவுண்டி கிளார்க் அலுவலகம் மூடப்பட்டுள்ளன. ஒற்றை ஓட்டு வித்தியாசத்தில் சவுத் ஆம்பாய் மேயர் வென்றதும், அரசல் புரசலாக இறந்தவர்கள் வாக்களித்திருப்பதாகவும் பேசிக்கொள்கிறார்கள். நாடெங்கும் அடிக்கும் குடியரசு கட்சி அலையில் கூட Middlesex coutyயில் ஜனநாயக வேட்பாளார்கள் வென்றது ஆளுனர் கிறிஸ்டியை சினத்துக்குள்ளாக்கி இருக்கக்கூடும். இது போன்று ஒரு ஊழலை 2002லிருந்து சந்தேகித்து வந்தாலும் இப்போது திடீரென்று அதிரடியாய் செயல்பட்டிருக்கிறார்கள் என்றும் பேசிக்கொள்கிறார்கள்.

தமிழ்நாடு போல் இலவசப்பொருட்கள் அள்ளித்தருவதில்லை என்றாலும் எடிசன் மேயர் தேர்தலில் வாக்கு ஒன்றிற்கு $300 தந்ததாகவும் பேசிக்கொண்டார்கள். ஊழல் நடைமுறை வாழ்க்கையை பாதிக்கவிட்டாலும் கூட, சில போதை வழக்குகள் காணாமல் போனதையும் சில வேலைக்கான காண்ட்ராக்டுகள் கொடுக்கப்பட்ட விதமும் கொடுக்கப்பட்டவர்கள் பின்புலமும் இன்னும் சில வேலைக்கான ஊதியம் வேலையே செய்யாமல் தந்ததும் நானே பார்த்திருக்கிறேன். நேரடியாகவே சில அபராதங்கள் (ரிசைக்ளிங், காற்று தண்ணீர் கலப்பு போன்றவையில் ஒரு சின்ன அபராதமே $1000 வரும்) குறைக்கப்பட்டது எனக்கு தெரியும். டன்கின் டோனட் ஒன்றில் சுடுநீர் வரவில்லை என்பதால் எங்கள் சுகாதாரத்துறை அலுவலகர் இவை எல்லாம் சரிசெய்யப்படவேண்டும் என்று சான்றிதழ் கொடுத்து வருவதற்குள்ளேயே அரசியல்வாதிகள் தொலைபேசி அதை சரிக்கட்டியதும், தேர்தலில் தங்களுக்கு வேலை செய்தவர்கள், உறவினர்கள் என்று பலரை பணியில் அமர்த்துவதும் செய்யாத பணிக்கு நல்லவேலை செய்த அடிப்படையில் ஊதிய உயர்வு தந்ததும் கண்டு நொந்து போயிருந்திருக்கிறேன். கொஞ்சம் கொஞ்சமாய் இங்கேயும் ஊழலும் மிரட்டலும் பினாமிகளும் பெருகுவதைக் கண்டிருந்தேன்.

இந்த தேர்தலில் எங்கள் freeholder தோற்க வேண்டும் என்று விரும்பி இருந்தேன். மறுநாள் நல்ல செய்தி என்று கவுண்ட்டி ஆணையாளரும் நிதித்துறை தலைவரும் உற்சாகமாய் கொண்டாடியபோது வருத்தமாக இருந்தது. ஆனால் இன்று தேர்தல் முறைகேடு விசாரணை இன்னும் பல  விசாரணைகளுக்கும் இடமளிக்கும் என்று தோன்றுகிறது. மாநில அளவிலும் நிறைய நிதி முறைகேடுகள் (கோர்சைன் காலத்து), அதை விசாரிக்க அட்டார்னி ஜெனரல் அலுவலக குழு ஒரு நான்கு மாதமாய் இங்கே இருக்கிறார்கள். அடிக்‌ஷன் துறையில் நிதி நிலை வரவு செலவு, உடல்நல துறையில் சில கணக்கு வழக்குகள், அவசரநிலை திட்டமிட வந்த கோடிக்கணக்கான வருவாயில் நடந்த ஊழல்கள் என இன்னும் பலவும் சலவைக்கணக்காய் வரும். சிலர் சிறைக்கும் செல்லலாம். இது ஒரு ஆரம்பமோ இல்லை அவசரமாக சில இரகசிய உடன்பாடுகளோடு முடிக்க வந்த ஒரு மிரட்டலோ, காலம் பதில் சொல்லும்.

தொடர்புடைய படைப்புகள் :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : November 16, 2010 @ 11:28 pm