சுஜாதாவை பார்த்தால் பரிதாபமாக இல்லை ?
பீகார் தேர்தல். எதிர்பார்த்த முடிவுகள் வர ஆரம்பித்துவிட்டன. நிதிஷ்க்கு ஜெயம். லாலுவுக்கு கரி. ஜெயித்தவர்கள்,தோற்றவர்கள் பாரபட்சம் பாராமல் மைக் நீட்டி கருத்துக் கேட்கும் வழக்கமான ஜர்னலிஸம்தான் பெரும்பாலான சேனல்களில். நம்மூரில் வெறும் பிளாஷ் செய்தியோடு நிறுத்திக்கொண்டார்கள். என்டிடிவி, புள்ளி விபரத்தை அள்ளிவிட்டு அசத்தினார்கள். ரவுண்ட் டேபிளில் இருந்தாலும் கடைசிவரை பர்கா தத் குளோஸப்பில் வரவேயில்லை. முழு ரிசல்ட் வந்தபின்னர்தான் கருத்து சொல்லமுடியும் என்கிற வழக்கமான பல்லவியோடு ஆரம்பித்தார் ஜெயந்தி நடராஜன். பீகாரில் பிரச்சாரம் செய்ய ராகுலுக்கு நேரமில்லையாம், இன்னா பில்ட் அப்பு?!
ஜீ டிவியில் சபதம். மாமனாரின் முகத்திரையை கிழிக்க போராடும் மருமகள் என் டாப் கியரில்
ஆரம்பித்தது நெற்றிக்கண்ணை ஞாபகப்படுததினார்கள். கொஞ்ச நேரத்தில் சபதம், எங்க வீட்டுப்பிள்ளையாகிப்போனது. சித்தப்பாவின் முகத்திரையை கிழிக்க போராடுகிறாராம் மகன். சொத்துக்காக அண்ணனை கொன்றுவிட்டு தானே அண்ணனாக வந்து மனைவியை அண்ணி என்கிறார் சக்ஸவரநாமம். சொந்த மகனை அண்ணன் மகன் என்பதால் நாகேஷ்க்கு அதிர்ச்சி. அடுத்தடுத்து திடுக்கிடும் திருப்பங்கள். சப்பையான கிளைமாக்ஸ். சுவராசியமான கதைதான். ஆனால் டைட்டிலை சபதம் என்பதற்கு பதிலாக சபதங்கள் என்று வைத்திருக்கலாம்.
பரவசப்படுத்தியது திருவண்ணாமலை கார்த்திகை தீபம் லைவ். சன் நியூஸ், ராஜ், ஜீ, வஸந்த், மெகா,கேப்டன் என அரை டஜன் சேனல்கள் களமிறங்கின. ஜெயா பிளஸ் ஏனோ மிஸ்ஸிங். வழக்கம்போல் அசத்தியது பொதிகை. இத்தனை வருஷ அனுபமிருந்தும் ராஜ் டிவி தடுமாறியது.வஸந்த் டிவியின் கேவலமான ஒளிபரப்புத் தரம். லைவ் கோதாவில் குதிக்காமலே இருந்திருக்கலாம். காலையில் எடுத்தவற்றையெல்லாம் சேர்த்துப் போட்டு சமாளித்தது கேப்டன் டிவி. ஆச்ச்ர்யப்படவைத்தது ஜீ டிவிதான். பக்காவான பிளான். நேரடி ஒளிபரப்பின்போதே அஷ்ட லிங்கம், திருவண்ணாமலை, ரமணர் பற்றியெல்லாம் தனியாக செய்தித்தொகுப்பு கொடுத்தார்கள். கண்ணை உறுத்தும் பிளாஸ் நியூஸ், விளம்பரம் எந்த தொந்தரவும் இல்லை. இனி லைவ்னா நீதான் ஜீ!
போனவாரம் கமலை காதல் சக்கரவர்த்தியாக்கியது நண்பரை கோபப்படுததிவிட்டது. போனில் புலம்பித் தள்ளிவிட்டார். அவருக்கு சிவாஜி மேனியா. எதற்கெடுத்தாலும் சிவாஜியை இழுத்து விட்டு விடுவார். ஏதோதோ படங்களை உதாரணம் காட்டினார். சிவாஜி ஏற்கனவே சக்ரவர்த்திதான் என்று சொல்லி எஸ் ஆனேன். ஏதோச்சையாக சன் மியூஸிக் பக்கம் உலாத்தும்போது பகல் நேரத்தில் இப்படியொரு மிட்நைட் மசாலா. சுஜாதாவை பார்த்தால் உங்களுக்கு பரிதாபமாக இல்லை ?!
//டைட்டிலை சபதம் என்பதற்கு பதிலாக சபதங்கள் என்று வைத்திருக்கலாம்//
//சுஜாதாவை பார்த்தால் உங்களுக்கு பரிதாபமாக இல்லை ?!//
LOL :)))))))))))