விதியே கதை எழுது – 3

 

"குட்மார்னிங் சாரங்!" கூவினாள் ராகினி..

இடம் ராகவ் எண்டர்ப்ரைஸின் மூன்றாவதுதளம்.

நேரம் காலை பத்துமணி பத்துநிமிடங்கள்.

சாரங்கன் அப்போதுதான் ஆபீசுக்குள் நுழைந்து  வேகவேகமாய் தனது அறையை நோக்கி நடந்துகொண்டிருந்தான். 

"ஓ, காட்!. .பத்துநிமிஷம் லேட்டா வந்திருக்கேனே" முணுமுணுத்தபடி நடந்துகொண்டிருந்தவனுக்கு ராகினி காலைவணக்கம் கூறியது காதில் விழவேயில்லை. 

புதிய டிசைனர் சேலையில்,அதற்கு மேட்சாக கழுத்தில் சோக்கர் அணிந்துகொண்டு ப்யூட்டிபார்லரில் நேற்று ஹைலைட்ஸ் செய்துகொண்ட மெரூன்வண்ணமுடி  காற்றில்பறக்க தேவதைபோல நிற்கும் தன்னை ஏறெடுத்தும்பார்க்காமல் போன சாரங்கனீன்மீது  செல்லக்கோபமாய் வந்தது.

அறைக்குள் சென்றதும் தன் இருக்கையில் அமர்ந்த சாரங்கனுக்கோ அந்த ஏசி குளிரிலும் வியர்க்க ஆரம்பித்தது.

தாமதமாய் ஆபிசுக்கு வந்து பழக்கமில்லாததால் ஏதோ குற்ற உணர்ச்சியில் மனம் குறுகுறுக்க தவிப்பாய் காணப்பட்டான்.

இன்றும் எப்பொழுதும்போல காலை சீக்கிரமே எழுந்து குளித்து பூஜைகளைமுடித்து டிபனையும் சாப்பிட்டு ஷூ அணிந்துகொண்டு பைக்கிலேறிஉட்காரும்போதுதான்   பின் சக்கரம் பஞ்சர் ஆகி இருப்பதை கவனித்தான் சாரங்கன்.

"என்ன ஆச்சு?" உரத்தகுரலில்கேட்டபடி ராதிகா அந்த நான்காவது மாடியின் பால்கனிக்குவந்து நின்றாள்.

அந்த சூர்யா அபார்ட்மெண்டில் மொத்தம் ஆறு ப்ளாக்குகள். அதில் சி ப்ளாக்கின் நான்காவதுமாடியில்தான் சாரங்கன் – ராதிகா குடி இருக்கிறார்கள். இரண்டு பெட் ரூம் ஹால் கிச்சன் என்ற அளவிலான அழகிய ஃப்ளாட். பேஸ்மெண்ட்டில் சிறுவர்கள் விளையாட இடம் உண்டு.  ஆறுப்ளாக்குகளுக்குமாய் பெரிய நீர்த்தொட்டி, நீச்சல்குளம் . பேஸ்மெண்ட்டில்  ஃப்ளாட்டில் வசிப்பவர்கள் வாகனங்களை நிறுத்த வசதியாய் பார்க்கிங் இருக்கிறது.

"பஞ்ச்சர் "என்றான் சாரங்கன் மேலே நின்ற ராதிகாவை நிமிர்ந்துபார்த்து.

அடுத்த நிமிடம் ராதிகா கீழே வந்துவிட்டாள். இரவு உடையோடு அவள் அப்படி தடதடவென்று ஓடிவருவதை ஃப்ளாட்டின் கீழ்க்குடி இருப்பினர் சிலர் வேடிக்கைபார்த்தனர்.

ராதிகா யாரையும் லட்சியம் செய்யாமல், ஃப்ளாட்டின் வாட்ச் மேனை உரக்க அழைத்தாள்."வேலைய்யா வேலய்யா எங்க போய்த் தொலைஞ்சீங்க?"

"ராதிகா…அவரை எதுக்கு இப்போ அழைக்கிறே? பாவம் வயசானவர் ராத்திரி எல்லாம் தூக்கம்முழிச்சி, இப்போதான் அந்த ஓரமாய் படுத்துதூங்க்ப்போனார்.." என்று தடுத்தான் சாரங்கன்.

"நீங்க சும்மா இருங்க… "என்று அதட்டிவிட்டு ஓடிவந்த வாட்ச்மேனிடம் சீறத் தொடங்கினாள்.

"என்னய்யா கிழவா நீ காவல் காக்கிற லட்சணமா இது? உன்னை நம்பிதானே இங்க வண்டிகளை எல்லாரும் விடறாங்க?  மாசாமாசம் சம்பளம் மட்டும்  வாங்கிக்கறியே ,இங்க நிறுத்தும் வாகனங்களை ஒழுங்கா  கவனிச்சிக்க  துப்பு இல்லயா உனக்கு? எங்க பைக்கை யாரோ பஞ்சர் செய்திருக்காங்க அதை நீ தடுத்திருக்கவேணாமா? யு இடியட்.

கிழவனையெல்லாம் காவலுக்கு வச்சா  இதான் கதி.. அடுத்தமாச ஃப்ளாட்மீட்டிங்ல  உன்னை வேலைய விட்டு எடுக்க சொல்றேன் பாரு"

"எ..எனக்கு ஒண்ணும் தெரியாதும்மா..  யா…யாரும்  இங்க வரலயே?"

வாட்ச்மேன் அறுபதைக்கடந்தவர்.ராதிகாவின் கூச்சலில் அரண்டுபோய் கைகட்டிக் குனிந்து நின்றார்.

"ராதிகா ப்ளீஸ் அவரை எதுவும் சொல்லதேம்மா.." சாரங்கன் கெஞ்சினான்

"வயசான ஆளேன்னு பாக்றேன்.. இல்லேன்னா அறைஞ்சிருப்பேன் ராஸ்கல்"

"ஐயோ ராதிகா… எல்லாரும் பாக்றாங்கம்மா,,,சத்தம்போடாதேயேன்.. வாட்ச்மேன் மேல எந்தத் தப்பும் இல்ல. நாந்தான் நேத்திக்கு ஆபீஸ் முடிஞ்சி வெளிலவரப்போ  பைக்கை ஆபீஸ்ல  என்னோடு வேலைபார்க்கும் மஞ்சுநாத் என்பவர்கிட்ட தந்தேன் ." அம்மாக்கு உடம்பு சீரியஸ் ஆஸ்பித்ரிபோகணும் என் வண்டி சர்வீஸ்க்கு போயிருக்கு.. உங்கவண்டிதாங்க"ன்னு கேட்டார்.  அவர்தான் ராத்திரி பைக்கை இங்கவச்சிட்டு நான் ஆன்மீக சொற்பொழிவுக்குபோயிட்டதினாலும் ,நீ கருடாமாலுக்கு உன் தோழிகூட ஷாப்பிங் போயிட்டதாலும், பைக் சாவியை எதிர்ஃப்ளாட் பத்ரிசார்கிட்ட கொடுத்துப் போனார். மஞ்சுநாத்துக்கே பஞ்சர் ஆனது  தெரிஞ்சிருக்காது, பாவம்"

ராதிகா பட்பட் என்றுதலையில் அடித்துக்கொண்டாள்.

"அந்த மஞ்சுநாத் தடியனுக்கு வண்டியை தராதீங்கன்னு நான் முன்னமே சொன்னேன் ..அப்போ ஒருவாட்டி உங்ககிட்டே வாங்கிட்டு 3 நாள் கழிச்சி திருப்பிக் கொடுத்தான். அவனும் உங்களமாதிரி அந்த ஆபீஸ்ல பெரியபொறுப்புள்ள வேலைல  உள்ளவன்னு சொல்லிக்காதீங்க கேவலமாஇருக்கு"

"ச்சேசே..மஞ்சுநாத் நல்லவர் ராதிகா. என்னைவிட மூணுவயசுதான் மூத்தவர். எனக்குமுன்னாடியே இந்தக் கம்பெனில சேர்ந்து பணிபுரியறவர் "

'அதென்னவோ அவனைக்கண்டாலே எனக்குப்பிடிக்கல.அன்னிக்கு ஒருநாள் நானும் நீங்களும் சினிமாதியேட்டர்ல  இன்டர்வல்ல பார்த்தப்போ, நீங்க முதமுதல்ல அறிமுகம் செஞ்ச  நாளே எனக்கு அவனைப்பிடிக்கல..அவன் மூஞ்சியும் அவனும்.."

"யாரையும் வெளித்தோற்றம் வைத்து எடைபோடக்கூடாதும்மா..சரி…வண்டி சாவியைக்கொண்டு வீட்ல வைச்சிடு. நான் ஆட்டோ லபோய்க்கறேன்"

'ஒரு கார்வாங்கமாட்டீங்க… கேட்டா பெங்களூர்ல இப்போ ட்ராஃபிக் அதிகம். ஆபீசுக்கு நேரத்துக்குப் போகணும்னா பைக்தான் வசதின்னு சொல்ல வேண்டியது.. ஒரு செல்போன் வச்சிக்கமாட்டீங்க..அதுக்கும் ஒரு காரணம்.  'லாண்ட் லைன் போதும் எனக்கு ..ஆபீஸ்போனால் அங்க மேஜைல நாலுபோன்  இருக்கு.. எனக்கு எதுக்கு செல்போன் வேறதனியா?"ன்னு சொல்லவேண்டியது.நிஜமா  நீங்கஅதிசயப்

பிறவிதான்! " நைட்டீசின் லேசினை இறுக்கியபடி முணுமுணுத்தாள் ராதிகா.

சாரங்கன் சிரித்தபடி,"வரேன்ராதிகா" என்றான்.

"ஒகே நான் இன்னிக்கு சாய்ந்திரம் அஞ்சுமணிக்கு forum ல ஒரு கடைல சேல்ஸ் கேர்ல் வேலைஇருக்காம் ..விசாரித்துவரபோகப்போறேன்…"

"ராதிகா நீ எதுக்குமா வேலைக்குப்போகணும்?நான் தான் கைநிறைய சம்பாதிக்கிறேனே?"

"ஐயோ 18ம் நூற்றாண்டு மனுஷனாட்டம் பேசாதீங்க . பெண்கள்  வேலைக்குப்போவது சம்பாதிக்கமட்டுமா? வீட்லபோர் அடிக்குதுங்க… 

என் படிப்புக்கு நான் என்ன சாஃப்ட் வேர் கம்பெனியிலா  வேலைபாக்க  முடியும்? ஏதோ இதுவே என் பழைய தோழி ஜெயந்திஏற்பாடு செய்துதரேன்னா..மேலும் வீட்ல இருந்தால்  ஒருநிமிஷம் வாசல் கதவைதிறந்து வச்சிக்கமுடியறதில்லை..எதிர்வீட்டு பத்ரிக்கிழம் என்னையே லுக் விடுது"

"ச்சேசே…பெரியவங்களைப்பத்தி  அப்படியெல்லாம் சொல்லக் கூடாதும்மா.. சரி, நான் சாயங்காலம் ஜெய்நகர் கோயில்ல 

உபந்நியாசம்கேட்டு லேட்டா தான் வருவேன்…எனக்காக சாப்பிடாம வெயிட் செய்யாதம்மா…சரியா?"

இப்படி ராதிகாவிடம் பேசிவிட்டு ஆட்டோ கிடைத்து  ஏறி புறப்பட்டுவர தாமதமாகிவிட்டதில் வருத்தமாய் அமர்ந்திருந்தவனை ராகினி, இன்ட்டர்காமில் அழைத்தாள்.

"ஒரு முக்கியமான  விஷயம் பேசணும், இப்போ நான்  உங்க ருமுக்குவரலாமா சாரங்?" லாவ்ண்டர் பெர்ஃப்யும்  மணக்க  அறைக்குள் நுழைந்த ராகினி ,சாரங்கனைக் கண்டதும்,"வாவ்! இந்த க்ரேகலர் சூட்ல you look awesome!  "என்றாள்.

"தாங்க்ஸ். என்னவோ முக்கியமா பேசணும்னீங்களே?"

ஆமாம்…  நம்ம எம் .டி. இன்னும் வரவில்லை….செல்போனில் பேசமுயற்சித்தால் எடுக்கவேஇல்லை.. சாதாரணமாய் அவர் இப்படி இருக்கமாட்டார். உங்களைப்போல கனிவும் அன்பும் மனிதர்களை மதிக்கும் நல்லபண்பும் கொண்டமனிதர். அதான் ஏதோ கவலையாய் இருக்கிறது."

"சென்னைக்கு ஏதோ கல்யாணத்துக்கு போகபோவதாய் என்னிடமும் சொல்லி இருந்தார். எனி டைம் இங்க வந்துவிடுவார் வெயிட்பண்லாமே போனில் தொல்லைசெய்வதைவிட?"

"சரி…கார்லதான் போயிருக்கார்…நேராய் சென்னையிலிருந்து இங்க ஆபீசுக்கே வந்துடலாம்"

"மஞ்சுநாத்தும் வந்தமாதிரி தெரியலையே? அவர் அம்மாக்கு உடம்பு சீரியஸ்னு சொன்னார் பாவம்"

"மஞ்சுநாத்தின் அம்மாக்கு சீரியசா?" சிரித்தள் ராகினி

பிறகு,"சாரங்..வெளுத்ததெல்லம் பால் உங்களுக்கு.. அப்பாவி நீங்க. ஆனா அந்த மஞ்சுநாத் நேத்து சந்தோஷ் தியேட்டர்ல தன் கேர்ல் ஃப்ரண்ட் கூட  உக்காந்திட்டு சினிமா பார்த்ததை என் தம்பி கவனிச்சிட்டான், அவன் அவங்களுக்கு பின் சீட்டுலதான் உக்காந்துந்தானாம்.

'ரண்டு சினிமா பாத்தேன்கா "ன்னு தலையில் அடிச்சிட்டான். தம்பி என்னைப்பார்க்க வந்தபோது, மஞ்சுநாத்தை ஒருநாள்  நாந்தான் அறிமுகப்படுத்திவைத்தேன்.. .சாருக்கு இதெல்லம் சகஜம்"

ராகினி இப்படிச் சொல்லும்போதே தடதடவென ஷூ ஒலிக்க அந்த இடத்தில் பிரவேசித்தான் மஞ்சுநாத். 

திரைப்பட வில்லனை போன்ற முகம். ஆறடி உயரம், ஒல்லியான உருவம். ஆனால் முரட்டுத் தோற்றம் .ராகினியிடம்  ஒருமுறைமஞ்சுநாத் ஆபாசமாய்பேச ஆரம்பித்து அறைவாங்காமல் தப்பித்துப் போயிருக்கிறான். ஆளுக்கு ஏற்றபடி பேசுவதில் அவன் வல்லவன். எம்டியிடம் அப்படி பேசிப் பழகியே நல்லபெயரை சம்பாதித்துக் கொண்டிருப்பதில் ராகினிக்கு மிகவும் கடுப்பு.

மஞ்சுநாத் அங்குவந்ததும் சாரங்கனையும் ராகினியையும் ஏறிட்டவன்;'சாரி…உத்தரவின்றி உங்க அறைக்கு வந்துவிட்டேன் சாரங்… சூழ்நிலையின் பதட்டம் என்னை இங்க வரவழைச்சது…நம்ம எம்டி சென்னையிலிருந்து  வந்துகொண்டிருந்த கார்  சற்றுமுன் விபத்துக்குள்ளாகி விட்டது. அவர் ஸ்பாட்ல மரணமாம்.. இப்பதான் எனக்கு மெசேஜ் வந்தது" என்றான்.

ஆபீசே திடுக்கிட்டது, அனுதாபமாய் சூள்கொட்டியது.

அவரது மறைவையொட்டி விடுமுறை என்று அறிவிக்கப்பட்டது.

சாரங்கன் மனவேதனையுடன் வீடுவந்தான்.

காலிங்பெல்லை அழுத்தினான். 

நீண்டநேரமாகியும் ராதிகா வந்துகதவைத் திறக்கவில்லை.மணிபார்த்தான் , காலை மணி 11:30தான் .

இந்த நேரத்தில் ராதிகா எங்கே போனாள்?

 

(தொடரும்)

தொடர்புடைய படைப்புகள் :

One thought on “விதியே கதை எழுது – 3

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : January 28, 2011 @ 10:40 pm