தக்காளிச் சட்னி
தேவையான பொருட்கள்
பழுத்த நாட்டுத்தக்காளி-1
கடலைப்பருப்பு-1 டீஸ்பூன்
வெந்தயம்-6
வெள்ளைஉளுத்தம்பருப்பு-2 டீஸ்பூன்
மிளகாய்வற்றல்-1
சீரகம்-1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை-1/2 இணுக்கு
கொத்தமல்லித்தழைகள்-அலங்கரிக்க
செய்முறை
1.வாணலியில் எண்ணெய் விட்டு வெந்தயம்,கடலைப்பருப்பு,1 டீஸ்பூன் வெள்ளைஉளுத்தம்பருப்பு,மிளகாய்வற்றல் ஆகியனவற்றை வதக்கிக் கொள்ளவும்.
2.தக்காளியையும் நறுக்கிக் கொண்டு பருப்புகளுடன் வதக்க்வும். கடைசியாக சீரகத்தைச் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.
3.வாணலியில் கடுகு,வெள்ளை உளுத்தம்பருப்பு,கறிவேப்பிலை தாளிசம் செய்து கொண்டு அரைத்த விழுதைச் சேர்த்து வதக்கவும்.
4.ஓரளவு கெட்டியான பதம் வந்ததும் வேறொரு பாத்திரத்திற்கு மாற்றவும். கொத்தமல்லி தூவி அலங்கரிக்கவும்.
கூடுதல் குறிப்புகள்
1.பொதுவாக நாள்,கிழமைகளிலும் பண்டிகை காலங்களிலும் சில இல்லத்துப் பெரியவர்கள் வெங்காயம்,பூண்டு சேர்க்க மாட்டார்கள். அவர்களுக்கு இந்த சுவையான தக்காளிச்சட்னியைச் சில நிமிடங்களில் தயார் செய்து தரலாம்.
2.மேற்கண்ட செய்முறையைப் போலவே மிளகாய்வற்றல் சேர்ப்பதற்குப் பதில் 1/2 டீஸ்பூன் சாம்பார்பொடியைத் தக்காளியுடன் வதக்கி அரைத்தும் சட்னி செய்யலாம். இதுவும் வித்தியாசமான சுவையைத் தரும்.
3.கொழுக்கட்டைக்குத் தக்காளிச்சட்னியும் மிளகாய்ப்பொடியும் சிறந்த இணைகள்.