அமெரிக்கப் பத்து!

இந்த புதிய பகுதியில், அமெரிக்க வாழ் தமிழர்கள் தங்களுக்கு அமெரிக்காவில் பிடித்தவைகளை இங்கே பகிர்ந்துகொள்வார்கள். முடிந்தவரை வேறு எந்த நாட்டோடும் ஒப்பிடாமல் அமெரிக்காவின் சிறப்புகளை மட்டுமே எடுத்துக்காட்டும் ஒரு முயற்சி இது.

வாசகர்கள் இந்த பகுதியில் எழுத விரும்பினால், உங்கள் படைப்பை feedback @tamiloviam.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.

இந்த வாரம் : லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்

– ஆர்


‘எப்பொருள் யாரார் வாய் கேட்பினும்’ மட்டுமல்ல, எங்கெங்கே நல்ல விஷயங்கள் பார்த்தாலும் நாமும் மாறித்தானே ஆகணும்? அமெரிக்காவில் எனக்கு மிகவும் பிடித்த, என்னை மிகவும் இம்ப்ரஸ் செய்த ‘அமெரிக்கப் பத்து’ லிஸ்ட் இதோ:

1. போலீஸ்: அடாடா, என்ன ஒரு கம்பீரம்! மோட்டார் சைக்கிள் ‘காப்’பாக இருந்தாலும், காரிலோ, குதிரையிலோ, ஏன் சைக்கிளில் வளைய வந்தாலும், எல்லோருக்குமே சூப்பர் உடற்கட்டு. நோ பிள்ளைத்தாச்சி தொந்தி, நோ கசங்கின யூனிஃபார்ம், நோ அசடு வழியக் காது சொறியல். கண்டிப்பாக நோ லஞ்சம்! ‘தப்பு செய்தவன் திருந்தியாகணும், தவறு செய்தவன் வருந்தியாகணும்’ பட்டுக்கோட்டை பாடியதெல்லாம் அமெரிக்காவிலே மட்டும் தான் நடக்கிறது!

2. படிப்பு: பெரிய யுனிவர்சிடிகள் மட்டுமல்லாமல், சின்னச்சின்ன கல்லூரிகள், பள்ளிகள் தங்கள் தனித்தன்மை மாறாமல், ‘மெரிட்’டுக்கு மட்டுமே முதலிடம் கொடுப்பது மிகவும் பாராட்டப்படவேண்டிய, உருப்படியான அம்சம். எங்கேயாவது ஒரு டுபாக்கூர் ஆன்லைன் யுனிவர்சிடி ஃப்ராடு பண்ணலாம். ஆனால் 99 சதவீதம், படிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். வாத்தியார்களுக்கு மரியாதை அதிகம். கொஸ்சின் பேப்பர் அவுட், பாஸ்மார்க் மினிமம் கேரண்டி, பாஸாவதில் ரிசர்வேஷன் கோட்டா போன்ற அபத்தங்கள் சுத்தமாக இல்லை.

3. நேர்மை, நாணயம், நாசூக்கு: சும்மா ‘கடமை, கண்ணியம், கட்டுப்பாடு’ என்றெல்லாம் வெறும் பம்மாத்து கோஷம் மட்டும் போட்டு, எங்கெங்கும் எல்லாவற்றிலும் ஃப்ராடு செய்வதெல்லாம் இங்கே நடப்பதில்லை. பல சூப்பர் மார்க்கெட்கள், செயின் ஸ்டோர்கள் வேலை செய்யாத பொருட்களைத் திரும்பப் பெற்றுக்கொள்வதிலோ, பணத்தை உடனே ரீஃபண்ட் பண்ணுவதிலோ சுணக்கம் காட்டுவதே இல்லை. ‘A satisfied customer is a customer forever!' என்கிற தாரக மந்திரம் அமெரிக்க பிசினசின் தேசீய கீதம்! 

4. சுத்தம், சுகாதாரம், சுபம்: ஒரே நாளில் லட்சக்கணக்கானவர்கள் கூடும் டிஸ்னிலாண்ட் போன்ற கேளிக்கை தளங்களாகட்டும், சினிமா தியேட்டர்கள், சாதாரண ஹோட்டல்கள் அல்லது பெட்ரோல் பங்க்களாகட்டும், நம்பி தைரியமாக பாத்ரூமுக்குள் நுழையலாம். அல்லது வெட்டவெளியில் தின்பண்டங்கள் வாங்கிச் சாப்பிடலாம். ஈ மொய்ப்பது, ஊசிப்போன சமாச்சாரங்கள், காலாவதியான பர்கர்கள் எல்லாம் அறவே நஹி, நஹி! மிகுந்த விழிப்புடன் இருக்கும் சுகாதாரத் துறை சுட்டு விடும், லைசென்ஸைப் பிடுங்கிக் கடையையும் மூடி சீல் வைத்துவிடும்!

5. ஹைவேஸ்: கிராமத்துப் புழுதியில் சிறுவனாக இரும்பு வளையத்தை பென்ஸ் காராகப் பாவித்து ஓட்டி விளையாடிய எனக்கு ஜெர்மனியின்  ஆட்டோபான்கள் மீது பெரிய craze இருந்தது உண்மை. ஆனால் உலகத்தைப் பலமுறை சுற்றிய பிறகு, அமெரிக்கச் சாலைகளின் கான்க்ரீட்+ரப்பர் கட்டுமானம், அகல நீளம், டிராஃபிக் ப்ளானிங் உலகத்தில் எங்குமே கிடையாது என்று என் கார் மீது ஏறிக்கூவ நான் எப்போதும் தயார்!

6. மருத்துவமனைகள்: அமெரிக்காவின் மருத்துவமனைகளின் சுத்தம், சுகாதாரம் உலகப் பிரசித்தி பெற்றது. எந்த ஒரு வெராண்டாவிலும் இலை போட்டுச் சாப்பிடலாம், அவ்வளவு, சுத்தம், அவ்வளவு சுகாதாரம்!

7. பொது இடங்களில் மரியாதை: எத்தனை கூட்டமாக, அவசரமாக இருந்தாலும் லைனில் நிற்கும் ஒழுங்கு பாராட்டப்படவேண்டிய ஒன்று. ‘தலிவர் படமா? மின்னாடி நிக்றவன் தலமேல ஏறி மிறிச்சிப் போயாவது எட்ரா டிக்கெட்ட!’ எல்லாம் கிடையவே கிடையாது. 4 பேர் இருந்தாலும் 400 பேர் இருந்தாலும் லைன் லைன்தான். அபூர்வமாக, ‘க்யூ’வில் நிற்காமல் அட்டூழியம் பண்ணும் அராத்து எதையாவது பார்த்தால், அது எங்கே இருந்து வந்திருக்கக்கூடும் என்பது நான் உங்களுக்குச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை!

8. வரி, வட்டி, கிஸ்தி: என்னதான் இன்கம் டாக்ஸ்காரர்களை நாம் வெறுத்தாலும், ஒரு ஆடிட் என்று வந்துவிட்டால் கிலி தான்- சொந்த அனுபவத்தில் சொல்கிறேன்- செக்கிங் என்று வரும் ஆடிட்டர்கள் நம் செலவில் ஒரு டீ கூடச் சாப்பிடமாட்டாகள். நம் ஃபோனைக்கூட உபயோகிக்க மாட்டார்கள். அநாவசிய உருட்டல், மிரட்டல்கள் கிடையாது. பல நேரங்களில் நாங்கள் க்ளெய்ம் பண்ண மறந்துபோனவற்றை அவர்களே நினைவுபடுத்தி ரீஃபண்ட் வாங்கிக் கொடுத்ததும் உண்டு. லஞ்சமா, மூச்சு விடக்கூடாது!

9. வியாபாரம், நேர்மை, நாணயம்: இவை எல்லாமே இங்கே நன்றாக இருக்கிறது. நானும் எத்தனையோ விதமான பெரிய்ய்ய Fortune 50 கார்பரேட் கஸ்டமர்களிலிருந்து தம்மாத்துண்டு கஷ்டமர்களையும் பார்த்தாயிற்று. முக்கால்வாசியும் போன் மூலம் தான் பிசினஸே. ”வார்த்தை தவறி விட்டாய், கண்ணம்மா!” என்றெல்லாம் நாம் சோக கீதம் இழைக்கத் தேவையே இருக்காது. 

10: பாவம், புண்ணியம், மத சுதந்திரம்: சில பல ஆண்டுகளாகவே அமெரிக்காவில் இந்தியக் கோவில்கள் அட்டகாசமாக வளர்ந்து வருவதும் வளம் கொழிப்பதுமே இதற்கு அத்தாட்சி. ‘நாமுண்டு நம் வேலையுண்டு’ என்று இருந்தால் யாரும் நம்முடன் வம்புச் சண்டைக்கு, பாவ-புண்ணிய அடிதடிகளுக்கு வருவதில்லை. மடியாக மூன்று வேளையும் சந்தியாவந்தனம், ஜபம் செய்தாலும், காவடி எடுத்தாலும், தேர் இழுத்தாலும், ஒன்றுமே செய்யாமல் நாத்திகனாய் இருந்தாலும் நம் மத சுதந்திரத்தில் யாரும் மூக்கை நுழைப்பதில்லை!

தொடர்புடைய சுட்டி : கடவுள்களின் கார்னிவெல்

தொடர்புடைய படைப்புகள் :

18 thoughts on “அமெரிக்கப் பத்து!

 • March 30, 2012 at 5:46 pm
  Permalink

  //பாஸாவதில் ரிசர்வேஷன் கோட்டா போன்ற அபத்தங்கள் சுத்தமாக இல்லை.// போகிற போக்கில் எதாவது அடிச்சு விட் வேண்டியது..இந்தியாவில் பாஸாவதில் ரிசர்வேஷன் என்பது கிடையவே கிடையாது

  Reply
 • February 10, 2011 at 10:33 am
  Permalink

  பத்தோ பதிநொண்ணோ

  என்னதான் கிடைத்தாலும், இந்தியாவில் உள்ள ஏதோ ஒரு வித நிம்மதி இங்கு இல்லை என்பதை மறுக்க முடியாது….!!!!
  அம்மா,அப்பா, தம்பி, தங்கை, அவர்களை சந்தோசம் துக்கம் இன்னும் எவ்வளவோ…

  Reply
 • February 4, 2011 at 3:00 pm
  Permalink

  Raju: You must be from stoneage
  Only gun will stop bad guys! No gun? No mercy from bad guys.
  Make your gun visible, bad guys will stay away

  Reply
  • February 5, 2011 at 2:51 pm
   Permalink

   Suresh:

   The slogan of NRAs and the conservatives that “Guns don’t kill; people do” is the silliest defense to their stand on the Right to Arm.

   I don’t know how many more lives need to be lost for this country to realize that there is no reason for a common man to carry a gun to protect oneself.

   You can put in place as many regulations as you want but enforcing them is almost impossible. Remember, if one man comes up with a rule, it can easily to circumvented by another.

   The simplest solution is to totally ban from public use. The only reasonable exemption would be to make them available for hunting.

   Ramani

   Reply
 • February 3, 2011 at 10:39 pm
  Permalink

  நானும் அமெரிகாவில் தான் இருக்கிறேன் ,இந்த பத்தில் போலீஸ் தங்க எனக்கு ரெம்ப ரெம்ப பிடித்தது ,அந்த போலீஸ் கார்க்கு இருக்கிற மரியாதையே தனி தான் ,அந்த return பாலிசி யை நம் ஆட்கள் தவறா பயன்படுதுரங்க .இன்னும் எழுதுங்க.

  Reply
 • February 3, 2011 at 5:06 pm
  Permalink

  All are good in USA as long as you are earning.

  Gun culture will not assure the human life for next day. 🙂

  Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : February 2, 2011 @ 10:08 pm