“டேவிட் லெட்டர்மென்” என்கிற காமெடியரின் அடிதொற்றி

 

அமெரிக்கா பேஷ் பேஷ் என்று போற்றினால், அதுலியே அமெரிக்கா பாஷ், பாஷ் (bashing!) என்று தூற்றுவதற்கும் சில பக்கவிளைவுகள் நிறைய இருக்கே! அது தானே வாழ்க்கை! இங்கே அமெரிக்காவில் "டேவிட் லெட்டர்மென்" என்கிற காமெடியரின் அடிதொற்றி இதோ! 

10. அடிப்படை நேர்மை, மனிதநேயம், அனுசரித்துப் போதல்: பொதுவில் 80% மக்களிடம் இருக்கிறது. க்யூ வரிசையில் நின்று போகிற மக்கள், யாரேனும் உள்ளே தவறாக நுழைந்தால், முறைப்பாங்க, இல்லை சத்தமாகவே ஏதேனும் சொல்லுவாங்க.  தன் காரியம் தான் முக்கியம் எல்லோருக்குமே! ஆனால், கைநிறைய தூக்கிட்டு வர்றவங்களுக்கு யாராச்சும் கதவு திறந்து விடுவாங்க. 14, 15 வருஷம் முன்னால‌ எனக்கு புற்றுநோய் இருக்கக் கூடும்னு டாக்டர் சந்தேகப்பட்டு, அதற்காக மயக்கமருந்து கூடிய ஆஸ்பத்திரி ஸ்டேனு சொல்லியிருந்தாங்க.  அப்ப நான் அமெரிக்கா வந்து ஆறு மாசம் தான் ஆகியிருந்த‌து. ஊர்ல சொன்னா பயந்துடுவாங்கன்னு நான் யார்ட்டயும் சொல்லலை. ஆனால், என்னை மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்று, கூடவே காத்திருந்து, மாலையில் கூட்டிவந்து வீட்டில் விட்டுச் சென்றார் என்னுடன் பணிபுரிந்த வெள்ளைப் பெண்மணி! அந்தம்மாவுக்கு அன்னிக்கு சம்பளம் கட் (என்னைப் போல் தினக்கூலி!). எல்லாத்தையும் விட முக்கியமா, ஒவ்வொரு முறையும் என்னை நெகிழ வைப்பது: சைரனிடும் ஆம்புலன்ஸ், சைரனிடும் போலீஸ் கார் இவற்றைப் பார்த்ததும் இரண்டு வழியிலும் கார்கள், பாதையின் ஓரத்தில் நிறுத்தி விடுவார்கள். இதுக்காகவாச்சும் இது தர்ம‌ பூமின்னு தான் சொல்லணும்!  மறதியாக விட்டுப் போனவை பொதுவில் யாரும் எடுத்துவிட மாட்டார்கள் (யாராவது கவனித்துக் கொண்டிருந்தால்). பெரும் நகரங்களில் அவ்வளவு நேர்மை, மனிதநேயம் இல்லைன்னு தான் சொல்லுவேன்!

9. கட்டமைப்பு, திட்டமிடுதல்: ரோடு நல்லா இருக்குன்னு சொல்லிக் கேள்விப்பட்டுட்டீங்க.  ஆனால், ரோடு அப்படி நல்லா இருந்ததுக்கு முக்கிய‌ காரணம், சென்ற நூற்றாண்டில் நிகழ்ந்த பொருளாதார வீழ்ச்சி! நாட்டு நிலைமை மோசமா இருக்குன்னுட்டு ரோடு கட்டினா வேலை வாய்ப்புப் பெருகும்னு அரசாங்கமே செய்தது.  இன்னொரு விஷயம் தெரியுமா?  அப்படி ரோடு கட்டின போது மேஜர் ஹைவேக்களில் 5 மைலுக்கு ஒரு மைல் அமெரிக்க ராணுவம் வந்து இறங்குவதற்கு வசதியாக சமதளத்தில் அமைத்திருப்பார்க என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.  பிக்னிக் போவது முதல், ப்ராஜெக்ட் பிளானிங் வரை பல விதங்களில் எதிர்காலத் திட்டம் போடறதுக்கு இவங்க தான் இப்போதைக்கு நம்பர் 1! சறுக்கல்கள் இருக்குன்னு ஒப்புக்கிறேன், ஆனால், அளவில் குறைவு!

8. சட்டத்தை மதிக்கிறவங்க!  சட்டத்தைப் பற்றி நல்லாத் தெரிஞ்சு வைச்சிருக்கிறவங்க‌ சட்டத்தில் உள்ள ஓட்டைகளையும் பற்றி நிறைய தெரிந்து வைத்திருப்பாங்க;-)  அதுனாலியோ என்னவோ அரசுக்கு எதிராகப் போராடுபவர்களில் 99%, பஸ்ஸை எரிப்பதில்லை. மேலே ஆம்புலன்ஸ் பத்தி நான் சொன்னதையும் நினைவில் வச்சுக்கங்க!

7. மத நல்லிணக்கம்: பெருநகரங்களில், அவற்றைச் சார்ந்த புறநகர்களில் வசிக்கும் மக்கள் மத நம்பிக்கை அவ்வளவாக வெளிக் காட்டிக் கொள்வதில்லை.  ஆனால், உள்நகரங்களில் வசிப்பவர்களுக்கு தீவிர மத நம்பிக்கை இருக்கு. அனேகமா மத நம்பிக்கை பற்றிப் பேசுவதைத் தவிர்த்து விடுவேன். பாலிஷ்டா அவங்களும் தவிர்த்துடுவாங்க. தவிர்க்காம மத நம்பிக்கை பேசுறவங்க வாயைக் கிளறுவதும் நல்ல ஹாபி, ஹிஹி! அப்படி மதங்கள் பற்றி அறிந்தவர்கள் நிறைய படித்தவர்களாகவும் இருப்பாங்க. ஸோ, மத்தவங்க மனசு புண்படாம மத நம்பிக்கை பேசுபவர்களுக்கு நல்வணக்கம். (ஆனால், கடந்த 4/5 வருடங்களாக, வெளிப்படையாகவே இஸ்லாம் பற்றி விமர்சிப்பவர்கள் அதிகமாகி விட்டார்கள்:-( வந்த புதிதில், நண்பர்களோடு பார்க்கில் சாப்பிட அமர்ந்த போது, எங்களுக்கு ஞானஸ்நானம் செய்யும் நோக்கத்தோடு வந்து "போன ஜன்மம் வினை என்று அத்தனையும் தீர்க்கும் அருமருந்து பற்றி உங்களோடு 5 நிமிடம் பேச வேண்டும்" என்றார் ஒருவர். நான் சொன்னேன், "ஷ்யூர், ஆனால், எல்லா மதத்தையும் மதிக்கச் சொல்வதாலேயே நான் உயரியதாய்க் கருதும் எங்கள் மதத்தைப் பற்றி நான் முதலில் உங்களிடம் 5 நிமிடம் பேசுவேன்" என்றேன், ஓடி விட்டார்;-‍)  இந்த லைனை நீங்களும் உபயோகிக்கலாம்:-)

6. வசதியான வாழ்க்கை: வீட்ல ரொம்ப இல்லைன்னாலும், ஜோரா ட்ரஸ் பண்ணிக்குவாங்க. எதைச் செய்தால் வாழ்க்கை வசதிகள் கூடும்? எதைச் செய்தால், சட்னு பணம் பண்ணலாம்னு யோசிச்சிட்டே இருப்பாங்க. எடுத்துக்காட்டா, "வெண்ணெய் வைக்கும் கண்ணாடி டிஷ்"இல் எவ்வளவு வெண்ணெய் மீதமிருக்குன்னு தெரிகிற மாதிரி அளவையோடு கூடிய டிஷ்" என்று கண்டுபிடித்து, அந்த கண்டுபிடிப்பை விற்ற பெண்மணிக்கு, சுமார் 1.5லட்சம் டாலர் கிடைத்ததுன்னு சொல்லிட்டிருந்த எங்கள் கூட பணிபுரியும் பெண்மணியை ஏதோ சினிமா ஸ்டாரைப் பார்க்கிறது போல் மக்கள் பார்த்தாங்க! இவங்களோட புதியன / வசதிகள் ‌ நாடும் நோக்கத்தினாலேயே மத்தியதர மக்களுக்கும் வசதி எளிதில் கிடைக்குது. அப்படி மற்ற மக்களுக்கு வசதிகள் செய்து பணம் பார்க்கணும்னும் நினைக்கிறவங்க இவங்க!

5. சாப்பாட்டு ருசி: ஹிஹி, என் முகராசியா இருக்கும்னு நினைக்கிறேன். எனக்குத் தெரிந்த அமெரிக்க மக்கள் எல்லாம் ருசிச்சு ரசிச்சுச் சாப்பிடறவங்கப்பா!  நிறைய பேருக்கு இந்த சைவச்சாப்பாடு சாப்பிடறவங்களைப் பார்த்தா இளக்காரம் தான். நேரவே அனுபவிச்சிருக்கேன்.  ஆனால், அப்படியிருக்கிறவங்க மாடு, கோழி, எல்லாத்தையும் ஒரு கை/கால், இரைப்பை எல்லாத்தையும் விட மாட்டாங்க!  இந்தியச் சாப்பாடு சாப்பிடுற அமெரிக்கர்கள் அநேகமாக மற்ற நாட்டு, இனத்துச் சாப்பாடும் சுவைத்துப் பார்த்தவங்களா இருக்கும். (இல்லை, Kosher பத்தியச் சாப்பாடு சாப்பிடும் யூதர்களாகவும் இருக்கக் கூடும்).

4. பரிபூரண ஞானம்: அநேகமா, இந்தியர்களோடு நல்லா பழகுற அமெரிக்கர்கள் எல்லோருக்கும் வரலாறு நல்லா தெரிந்திருக்கும். (பழகாதவங்களுக்கு – நான் பார்த்த வரையில் – இந்தியர்களைப் பற்றிய முன்முடிபு – bias – இருக்கும்). அந்த காலத்தில‌ ஃபிலடெல்ஃபியாவில் நிமோனியா தொற்று உள்ள போர்வை கொடுத்து செவ்விந்தியர்களைக் கொன்றது முதல், தீவிரமா ஒரு விஷயத்தைப் பற்றி உள்ளே புகுந்து அக்கு, ஆணி பிரிச்சுக் கொடுத்துடுவாங்க. விஷயத்தை அரைகுறையாக அறிந்து கொள்ள மாட்டார்கள். 

3. உழைப்பு: வருஷம் முழுக்க 10 நாள் தாங்க லீவு: http://www.opm.gov/Operating_Status_Schedules/fedhol/2011.asp. குழந்தை பெற்று 6 வாரங்களில் தாய் திரும்ப வேலைக்கு வந்திருவார் (உடல்நிலை அனுமதித்தால்). அந்த ஆறு வாரங்களில் உடலை இளைக்கவும் வைத்திருப்பார்! அமெரிக்காவில கிடைச்ச லீவை எஞ்சாய் மாடுவாங்க; இல்லை மாடுவெட்டித் தின்னுவாங்க. ஆனா, உழைக்கிறவங்க நிறைய. Productivity நிறைய!!!

2. என்னை அடிச்சிட்டு சும்மாப் போயிடுவியாங்கிற திமிர். இது தப்புன்னு எனக்குத் தோணலை. அவங்க வாழ்க்கை முறை.  நான் அகிம்சை போற்றும் காந்தியவாதி தான். அமெரிக்க வாழ்க்கையில் அநியாயத்துக்கு ஒரு கஷ்டம் வந்த போதும் அகிம்சையைக் கடைபிடித்தேன், கோர்ட்டுக்குப் போகலை. ஆனால், கோர்ட்டுக்குப் போ என்று என்னிடம் ஒற்றைக் காலில் நின்றவர்கள் நிறைய. நியூயார்க் கட்டடங்கள் தகர்ந்த போதும் சரி, வேறு நாடுகளில் வாலாட்டக் கூடியவர்கள்னு தெரிந்த போதும் சரி, பொதுவாகவே, ஐந்தாம் படையை முதலிலும், பின்னர் மற்ற படைகளையும் அனுப்புகிற மன்னர்கள்! தீக்குளிப்பு, தற்கொலையால் தன் எதிர்ப்பைக் காட்டுதல்னு பொதுவாக மேல்நாடுகளில் தம் லட்சியங்களுக்காக மடிவதில்லை என்பதையும் கவனிக்கவும்! 

1. நகைச்சுவை: மணிமகுடம். எனக்கு அமெரிக்க வாழ்க்கையில் மிகப்பிடித்த விஷயம். ஓரளவே படித்தவர்களும் சட்னு புரிஞ்சுக்குவாங்க. டக்னு ஜோக்கடிப்பாங்க. (கடி ஜோக் அவ்வளவா செல்லாது இங்கே, எனக்கு அது வருத்தமே;-(  நானே லூஸ் மாதிரி சிலசமயம், ஹிஹி poor-joke (கடி ஜோக்) அடிச்சிட்டேன்லனு சொல்லுவேன்..!  வேற எடுத்துக்காட்டுகள்:

"என்னால இதைச் சாப்பிட முடியாது, நான் சைவம்" – நான்.

"ஓ, ஐ அம் ஸாரி" – வெள்ளையர்.

"பரவாயில்லை" – நான்.

"இல்லை அம்மா, இந்த மாதிரி சாப்பாட்டை மிஸ் செய்யிறியே, அதுக்கு ஸாரி ஃபார் யூனு சொன்னேன்" – வெள்ளையர்.

வழி தவறி ஒரு பார்பர்ஷாப்பில் நின்று வழி கேட்டவளிடம், அங்கே யாருக்கோ முடிதிருத்திய தாத்தா யோசிக்காமல் "இங்க வயசான ஆண்கள் தான் எப்பவும் வர்றாங்க‌, பெண்கள் அடிக்கடி வர்றதில்லை. எனவே, உன் தலைமுடி கட் செய்தப்புறம் தான் வழி சொல்வேன்! ஃப்ரீ கட்!".

நான்: ஙே!

தொடர்புடைய படைப்புகள் :

7 thoughts on ““டேவிட் லெட்டர்மென்” என்கிற காமெடியரின் அடிதொற்றி

 • June 24, 2012 at 8:36 pm
  Permalink

  தங்கள் கூறுவதை முற்றிலும் உண்மை உங்கள கண்ணோட்டத்தில்…

  //என்னை அடிச்சிட்டு சும்மாப் போயிடுவியாங்கிற திமிர். // புரிய என்னக்கு நாள் ஆகும் என்று நினைகிறேன்

  Reply
 • February 13, 2011 at 1:12 am
  Permalink

  உங்க பதிவு வழியா பேரிக்காயைப் பார்த்தா ரொம்பப் பிடிக்கிறது.
  மத்தபடி எங்க ஊரு நல்ல ஊருப்பா:)

  Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : February 9, 2011 @ 10:52 pm