தொடரும் தெலுங்கானா பிரச்சனைகள்

"தெலுங்கானா பிரச்னைக்கு தற்காலிக தீர்வு எந்த வகையிலும் பயன் தராது. பிரச்னைக்கு விரைவில் நிரந்தர தீர்வு காண்பதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் தொடரும் வன்முறை சம்பவங்களால் மாநிலத்தின் வளர்ச்சி கடுமையாக பாதிக்கப்படும்” என ஆந்திர முதல்வர் ரோசய்யா தெரிவித்துள்ளார்.

அவர் கூறியுள்ளது 100க்கு 100 சரி.. தெலுங்கானா விவகாரத்தில், தொடர்ந்து நடக்கும் வன்முறை சம்பவங்களால், ஆந்திர மாநிலத்தின் வளர்ச்சி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆந்திராவில் புதிய முதலீடு செய்வதற்கு தொழில் துறையினர் தயக்கம் காட்டுகின்றனர். போக்குவரத்து, அன்றாட தொழில் உற்பத்தி உள்ளிட்ட அனைத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.. 

தெலுங்கானா தனி மாநிலம் அமைக்கும் விவகாரத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் போராட்டங்கள் நடக்கின்றன. தொடர்ந்து நடக்கும் வன்முறை சம்பவங்களால் மாநிலத்தின் வளர்ச்சி பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது நடக்கும் போராட்டங்களால் பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எந்த நேரத்திலலும் இப்பிரச்னை மேலும் பெரிதாகலாம். இதுபோன்ற சூழ்நிலையில் தற்காலிக பேச்சுவார்த்தை, தற்காலிக தீர்வு போன்ற நடவடிக்கைகள் எந்த பயனையும் தராது. பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – தான் எடுக்கும் நடவடிக்கைக்கு உள்ளூர் அரசியல் பிரமுகர்களை ஒத்துக்கொள்ள வைக்கவேண்டும். ஏனென்றால் மக்களைத் தூண்டிவிட்டு ஏகப்பட்ட கலவரங்களை உண்டாக்குபவர்கள் உள்ளூர் அரசியல்வாதிகள் தான்..

தெலுங்கானா விவகாரத்தை சரியாக கையாளத்தெரியாமல் மத்திய அரசு தடுமாறுவதாலேயே இத்தனை குழப்பங்களும் அமளிகளும். எத்தகைய பிரச்சனைகள் ஏற்பட்டாலும் அதை பேசியோ / இரும்புக்கரம் கொண்டோ சமாளிப்பது எப்படி என்று அந்தக்கால தலைவர்களான இந்திரா, பட்டேல் உள்ளிட்டவர்களுக்கு நன்றாகத் தெரிந்திருந்தது. ஆனால் தற்போது ஆட்சி அதிகாரம் யாரிடம் உள்ளது?? பிரதமரிடமா – சோனியாவிடமா  என்பதே சரியாகத் தெரியவில்லை.. ஆள்வோரில் யாருக்குமே தெலுங்கானா போன்ற பிரச்சனையை சரிவர கையாளத் தெரியவில்லை என்பது தெள்ளத் தெளிவாகியுள்ளது.

இதை இப்படியே வளரவிடுவதோ அல்லது தற்காலிகத் தீர்வு என்ற பெயரில் எதையாவது செய்வதோ மாநிலத்திற்கு எந்த விதத்திலும் நன்மையளிக்காது.     எண்ணித் துணிக கருமம் – துணிந்த பின் எண்ணுவதென்பது இழுக்கு என்ற குறளுக்கேற்ப மத்திய அரசு தெளிவான ஒரு முடிவை ஆந்திர மக்களுக்கு வெகு சீக்கிரத்தில் வழங்கவேண்டும். இல்லையென்றால் தமிழகம், உ.பி போன்ற மாநிலத்தில் காங்கிரஸ் நிலை என்னவோ அதுதான் ஆந்திராவிலும் என்ற நிலை ஏற்படும். சம்பந்தபட்டவர்கள் இதை உணர வேண்டும். உணர்வார்களா ?
 

தொடர்புடைய படைப்புகள் :

  • தொடர்புடைய படைப்புகள் எதுவும் இல்லை !

One thought on “தொடரும் தெலுங்கானா பிரச்சனைகள்

  • January 14, 2010 at 12:01 pm
    Permalink

    காங்கிரஸ் செய்யும் தவறு விவகாரத்தை ஜவ்வு போல இழுப்பது தான். ஆனால் இந்திரா , பட்டேல் செய்தது சரியா என்று சிந்திக்கவும். ஆந்திராவில் காங்கிரஸை தமிழக அளவுக்கெல்லாம் யாராலும் மாற்ற முடியாது என்றே தோன்றுகிறது.

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : January 25, 2010 @ 12:41 pm