விதியே கதை எழுது – இறுதி பாகம்

 

ஜெய்நகர் போலீஸ்  ஸ்டேஷன்.

இன்ஸ்பெக்டர் பசவராஜ்  தனக்குத்தெரிந்த அரைகுறை தமிழில்  பேச ஆரம்பித்தார்.

"சொல்லுப்பா மஞ்சுநாத்.!..எதுக்கு நீ அந்தம்மாவே கொலே செய்தே? "

அவர் எதிரில் முகம் இறுகி நின்று கொண்டிருந்த மஞ்சுநாத் சட்டென," இன்ஸ்பெக்டர்! நான் ராதிகாவைக்கொலை செய்யல… இதோ நின்னிட்டு இருக்கானே சாரங்கன், இவனுக்குத்தான் மனைவி மேல சந்தேகம் அதான் தீர்த்துக்கட்டி இருக்குறான்…ஆனா ஃப்ளாட்டுல அந்த பத்ரிக்கிழவர் ஏதோ என்கூட ராதிகா எப்பவோ வெளீல சுத்தினதா சொன்னதை காரணமா வச்சி என்னை இங்க அழைச்சி இப்படி விசாரிக்கறது சரி இல்ல ஆமா?" என்று கத்தினான்.

"இருக்காது என் தம்பிக்கு ஒரு எறும்புக்கு தீங்கு நினைக்கக்கூட மனசு வராது அவன் இந்தக்கொலையை செய்தான்னு சொல்றது அபாண்டம். உண்மையில்  நான் தான் ராதிகாவைப்பத்தி என்புருஷன் ஊர்ல சொன்னதும் இங்கவந்தவ அவளைப்பார்த்ததும் துப்பாக்கில சுட்டுட்டேன்" என்றாள் சுமித்ரா.

"அக்கா! என்ன உளற்றீங்க? உங்களுக்கு துப்பாக்கிய கையில பிடிக்கத்தெரியுமா? எனக்காக பழியைப்போட்டுக்காதீங்க" சாரங்கன் வேதனையுடன் கத்தினான்.

"என்னப்பா செய்வது? உன்னைக்காப்பாத்த எனக்கு வேற வழி  தெரியல.." அழுதாள் சுமிதரா.

சாரங்கன் இன்ஸ்பெக்டரை தீர்க்கமாய் பார்த்தான் பிறகு," இனியும் நான் உண்மையை மறைக்கவிரும்பல..மஞ்சுநாத் சொன்னது சரிதான் ..நேத்து எதிர்கட்டிடத்தில் ரொம்ப நேரம் அமர்ந்தவன் விடிவதற்கு கொஞ்சநேரம் முன்பாய் வீடுவந்தேன். என் மனைவியின்  முகத்தைப்பார்த்தேன்…என்னை ஏமாற்றி வருகிறாள் அவள் என்பதை நினைத்தபோது நெஞ்சு கொதித்தது. நான் சாதுதான் .மென்மையான சுபாவக்காரன் தான் ஆனா நேத்து அவை எல்லாம் காணாமல போய் மிருகமாயிட்டேன்,,ஆத்திரத்தில் அவளை சுட்டுத்தள்ளிட்டு வெளில வந்திட்டேன்… நாந்தான் குற்றவாளி இன்ஸ்பெக்டர் என்னைக்கைது செய்யுங்க.."

"பாத்தீங்களா நான் சொல்லல இன்ஸ்பெக்டர்? தூக்கி அவனை ஜெயில்லபோடுங்க  அயோக்கிய ராஸ்கல் சாரங்கன்" மஞ்சுநாத் கிண்டலாய் சிரித்தான்.

 

பசவராஜ் சட்டென," ஹலோ கொஞ்சம் வாயை மூடுங்க…போலீஸை முட்டாளா நினச்சி நீங்க எல்லாரும் பேசிட்டே போறீங்களே? எங்களுக்குத்தெரியும் உண்மையான குற்றவாளி யாருன்னு…அவங்களே இப்ப இங்க வரபோறாங்க பாருங்க?" என்றார்.

அனைவரும் குழப்பமாய் அவரைப்பார்க்கும்போது  அடுத்த சில நிமிஷங்களில்  அங்கே வந்த நபரைப்பார்த்ததும் சாரங்கன் அதிர்ச்சியில் கூவிவிட்டான்.  "மாலதீ?"

அவனை ஆழமாய்பார்த்த மாலதி," ஆமா சாரங்..நாந்தான்  உங்க மனைவியைக்கொலை செய்தேன் ..சைலன்ஸர் பொருத்திய துப்பாக்கில சுட்டேன் அதைத்தான்  உடனே இங்க வந்து இன்ஸ்பெக்டர்கிட்ட  சொல்லி  சரணடைந்தேன்..உங்க எல்லாரையும் இங்க வரவழைத்து விவரம் சொல்ல விரும்பினேன்.

"சாரங்!  நானும் எட்டுமாதங்களாய்  என் இல்லத்துக்கட்டிடவேலையை மேற்பார்வை பார்க்க வரும்போதெல்லாம் ராதிகா பெரும்பாலும் மஞ்சுநாத்துடன்  சுத்தறதை காண நேர்ந்தது.மேஜிககலை தெரிந்த எனக்கு அவர்கள் அறியாமல் தொடர்ந்து பேசினதை எல்லாம் கேட்கமுடிஞ்சுது. கடைசியில் மஞ்சுநாத்தையும் துறந்து ராதிகா பம்பாய்க்குபோகபோவதை நேத்து ராத்திரி பால்கனிக்கு மழைக்குழாய்மூலமா ஏறிவந்து, மறைவா நின்னுட்டு இருந்த எனக்கு அவள் போனில் பேசியபோது தெரியவந்தது. புறப்பட இருந்த அவளைத்த்டுத்தேன். அட்வைஸ் செய்துபார்த்தேன் . அவள் கேட்கவில்லை. சாரங்கன் மாதிரி அன்பும் பொறுமையும் நிறைந்த மனுஷனைப்புரிஞ்சிக்கத்தெரியாமல் போனவளை கொலை செய்வதைத்தவிர எனக்கு  வேறுமுடிவு தெரியவில்லை. " மாலதி முடித்துவிட்டு கண்பனித்தாள்.

அவள் கையில் விலங்கு மாட்டப்பட்டபோது சாரங்கனின் கண்கள் அவள் கண்களை பரிவோடு சந்தித்தன. 

அவைகள், 'இந்த ஜனம்த்திலேயே உனக்காக காத்திருப்பேன் மாலதி 'என்று சொல்லாமல் சொல்லின. 

 

— முற்றும் —

தொடர்புடைய படைப்புகள் :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : February 16, 2011 @ 9:40 pm