எந்திரன் ரிடன்ஸ்
நிலுவையில் இருக்கும் வழக்குகளுக்கு
விரைவாகத் தீர்ப்புச் சொல்ல ரோபோக்களை
அங்கீகரிக்க வேண்டி வந்த பொது நலன்
வழக்கை அடுத்த மாதத்திற்கு ஒத்திவைத்தார் நீதிபதி!
பணம் கொடுத்தால் ஓட்டுப் போட மனித
ரோபோக்கள் சம்மதம் தெரிவித்துள்ளதால்
கீ கொடுத்தால் கள்ள ஓட்டுப் போடும்
ரோபோக்களின் விற்பனை படு மந்தமாகவுள்ளது
சாதிச் சான்றிதழ் உறுதிப் படுத்தப்படாததால்
ரோபோக்களை வேலையிலிருந்து நீக்கி
உத்தரவிட்டு சமத்துவம் காத்தார்
சாதியொழிப்புத்துறை அமைச்சர்
நிறுத்தங்களில் பேருந்தை நிறுத்தாமல் சென்றதால்
'ரோபோக்களை பேருந்து ஓட்டுனர்களாக
போடக்கூடாது' என்று நடந்த மாநாட்டுக்கு
யாரும் வரமுடியவில்லை
மின் உற்பத்தியை அதிகரிக்க வாங்கிய
ரோபோக்களுக்கும் தினமும் மின் வெட்டை
அரசு அமல்படுத்தியதால்
மின்நிலையமே அதிர்ச்சியிலுள்ளது
விபத்தில் பாதிப்படைந்த ரோபோக்களுக்கு
சிகிச்சையளிக்க வந்தவர்கள்
கிட்னி திருட முடியாமல் பட்டினியாக
செயலிழந்து நிற்கிறார்கள்