பிடிச்சிருக்கு பிடிச்சிருக்கு

இந்த பகுதியில், அமெரிக்க வாழ் தமிழர்கள் தங்களுக்கு அமெரிக்காவில் பிடித்தவைகளை இங்கே பகிர்ந்துகொள்வார்கள். முடிந்தவரை வேறு எந்த நாட்டோடும் ஒப்பிடாமல் அமெரிக்காவின் சிறப்புகளை மட்டுமே எடுத்துக்காட்டும் ஒரு முயற்சி இது.

வாசகர்கள் இந்த பகுதியில் எழுத விரும்பினால், உங்கள் படைப்பை feedback @tamiloviam.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.

இந்த வாரம் : சத்ய ராஜ்குமார்

– ஆர்

 


 

1. சட்டம்-ஒழுங்கு, போலீஸ்-பொதுமக்கள் உறவு பிடிச்சிருக்கு.

http://inru.wordpress.com/2007/08/31/lawandorder/ 

http://inru.wordpress.com/2008/11/26/stranger/

2. இன்னமும் சிதைந்து போய் விடாமல் காப்பாற்றப்பட்டிருக்கும் இயற்கை பிடிச்சிருக்கு. 

http://inru.wordpress.com/2008/07/16/trekking/

http://inru.wordpress.com/2007/09/05/forest/

3. வேலை ஆனால் சரி, மற்றபடி நம்முடைய எந்த (இணைய) சுதந்திரத்திலும் குறுக்கிடாத, சுயமரியாதையை உசுப்பேற்றாத நிறுவனங்கள் பிடிச்சிருக்கு.

4. வெறும் மனனம் என்றில்லாமல், எந்த பாடமானாலும் நிறைய கேள்விகள் கேட்க வைத்து, அன்றாட வாழ்க்கை பயன்பாடுகளை எடுத்துரைத்து அடிப்படை தத்துவங்களை தெள்ளத் தெளிவாய்ப் புரிய வைக்கும் பள்ளிக் கல்வி முறை பிடிச்சிருக்கு. 

5. பொது இடங்களில் தரையில் தண்ணீர் சிந்தினால், பால்கனியில் தொங்கிக் கொண்டு யாராவது பெயிண்ட் அடித்துக் கொண்டிருந்தால் பளிச்சென்று வைத்திருக்கும் எச்சரிக்கை பலகை பிடிச்சிருக்கு.   பிஸியான பகுதியில் வேலை நடந்து கொண்டிருந்தால் சாலைப் பணியாளர்களின் உயிருக்கு பாதுகாப்பாக எச்சரிக்கை விளக்கு சுழல நின்றிருக்கும் போலிஸ். சின்னச் சின்ன விஷயம் தொடங்கி பெரிய பெரிய நிகழ்வுகள் வரை எல்லாவற்றிலும் பாதுகாப்பு விழிப்புணர்வுடன் இயங்குவது பிடிச்சிருக்கு. 

6. இந்த புக்கு போதுமா, இன்னும் கொஞ்சம் வேணுமா என்று அள்ளி அள்ளிக் கொடுக்கும் பொது நூலகங்கள் பிடிச்சிருக்கு. புத்தகங்கள் மட்டுமில்லை, நூலகங்கள் டிவிடி, இணைய சேவை கூட இலவசமாய் தருகின்றன. 

http://inru.wordpress.com/2007/09/03/linebyline/

7. பத்து மாத அட்வான்ஸ் கேட்டு அழிச்சாட்டியம் பண்ணாத அபார்ட்மெண்ட் நிறுவனங்கள் பிடிச்சிருக்கு. 

8. திருப்பிக் கட்டும் திறனிருந்தால் வீடு வேணுமா, கார் வேணுமா இந்தா வாங்கிக்கோன்னு அள்ளி அள்ளி கடன் கொடுக்கும் வங்கிகள் பிடிச்சிருக்கு. (இப்போ இதுக்கு வந்தாச்சு ஆப்பு!)

9. பேரம் பேசத் தேவையில்லாத ஷாப்பிங் பிடிச்சிருக்கு. எந்தக் கடையிலும் சேல்ஸ் மேன்/வுமன் தொல்லையில்லாமல் சுதந்திரமாய் பொருட்களைப் பார்த்து, நிதானமாய் அலசி ஆராய்ந்து வங்கிச் செல்லலாம். வீட்டுக்குப் போன பிறகு ஒய்ப், 'உங்களுக்கு அறிவே இல்லையா? இது இன்ன கடையில் இதை விட சீப்பா கிடைக்கும்.' என்று அர்ச்சித்தால், மறுபடி கடைக்குப் போய் பொருளைத் திருப்பிக் கொடுத்து விட்டு பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம். (இதுதாண்டா ஷாப்பிங்!). 

10. ஓரிரு வருஷங்களுக்கு ஒரு தடவை சொந்த ஊருக்குக் கிளம்பும்போது மனசுக்குள் கிளர்ந்தெழும் மகிழ்ச்சி இருக்கு பாருங்கள். அதற்காகவே அமெரிக்காவை ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு. பேஷ் பேஷ்.

தொடர்புடைய படைப்புகள் :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : March 2, 2011 @ 11:42 am