மாறவே மாட்டாரா கருணாநிதி ?

கடந்த 9 முறையாக சென்னையில் போட்டியிட்டு வென்ற நம் தமிழக முதல்வர் கருணாநிதி இம்முறை திருவாரூரில் போட்டியிட போகிறார். அதை குறித்த செய்தி கீழே

திமுக தலைவர் கருணாநிதி இம்முறை திருவாரூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.

திமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட அவரிடம் திருவாரூரில் போட்டியிட என்ன காரணம்? என்றதற்கு, "நான் முதன் முதலில் குளித்தலையில் போட்டியிடுவதற்குப் பதிலாக திருவாரூரில் என் சொந்த ஊரில் தான் போட்டியிட்டிருக்க வேண்டும். ஏனென்றால் அது என்னுடைய சொந்த ஊர். அப்படிப் 

போட்டியிட முடியாமல் அந்த தொகுதி அப்போது தனித் தொகுதியாக ஆக்கப்பட்டுவிட்டது, அதாவது அப்போதிருந்த அரசியல்வாதிகளால் – நான் அங்கே நின்றுவிடக் கூடாது என்பதற்காக – அது தனித் தொகுதியாக ஆக்கப்பட்டுவிட்டது.

இப்போது அது தனித் தொகுதியிலிருந்து விடுபட்டு – பொதுத் தொகுதியாக – நான் அங்கே நிற்கலாம் என்ற அளவிற்கு அது எனக்கு 'கனி'த் தொகுதியாக ஆகிவிட்டது," என்றார்.

– விகடன்

 

1957 ம் ஆண்டு தான் அவர் முதன்முதலாக தேர்தலில் போட்டியிட்டார். அந்த தடவை குளித்தலையில் போட்டியிட்டு வெற்றி வெற்றார். ஆனால் அப்பொழுது திருவாரூர் என்ற தொகுதியே கிடையாது. 1962 ம் ஆண்டு தான் திருவாரூர் தொகுதி உருவாக்கப்பட்டது. இல்லாத தொகுதியை எப்படி அவர் நின்று விட கூடாது என்பதற்காக தனி தொகுதி ஆக்கினார்கள் என்பது தான் எனக்கு புரியவில்லை. 

அந்த நேரத்தில் திருவாரூர் எந்த தொகுதியுடன் இணைந்து இருந்தது என்பதை யாராவது கூறினால் அது அப்போது தனி தொகுதியாக இருந்ததா இல்லையா என்பது தெரியும். நன்னிலம், திருத்துறைப்பூண்டி இரண்டும் தனி தொகுதியாக இருந்தது மற்றப்படி நாகை, தஞ்சாவூர், திருவையாறு, மாயவரம் போன்ற தொகுதிகள் எல்லாம் பொது தொகுதிகள் தான். அடுத்த முறை தஞ்சையில் இருந்து வெற்றி பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது தான்.

இம்முறை சென்னை வேண்டாம் என முடிவு எடுத்து இருந்தால் நேரடியாக திருவாரூரில் போட்டியிட ஆசை போட்டியிடுகிறேன் என்று சொல்லாமல், ஏன் அவர் நின்று விட கூடாது என்பதற்காக தான் தனி தொகுதி ஆக்கப்பட்டது என்று தன் வரட்டுத்தனத்தை காட்ட வேண்டும்? மாறவே மாட்டாரா?

தொடர்புடைய படைப்புகள் :

4 thoughts on “மாறவே மாட்டாரா கருணாநிதி ?

 • March 26, 2011 at 3:04 pm
  Permalink

  The State and Central Government is Cheating their own citizens. Shame on them. These politicians are the curse of our Country and (Indian) people. Very soon we can expect a revolution in this country for the Right for Basic needs.

  Reply
 • March 24, 2011 at 1:57 pm
  Permalink

  ada ethallam oru pollappu nalu nal valthalum nallavanu valanum porantha politicalla iruntha kamarajar illa kakkan mathiri valthu kattanum illa politicsa vittu odi poyaranum koiyala.nanum dmk than enna panna?

  Reply
 • March 19, 2011 at 9:56 am
  Permalink

  பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்து ஆட்சியைப் பிடித்த செந்தமிழ் “வித்தவர்”, இவரு வாயில இருந்து வர்ரதை எல்லாம் நிஜம் என்று நினைத்து அதற்க்கு காரணம் தேடினால் ஏமாற்றம்தான் மிஞ்சும்.

  Reply
 • March 19, 2011 at 1:33 am
  Permalink

  உண்மை காரணம்- சென்னையில் நின்றால் தோல்வி அடைவார்.
  திருவாரூர் மக்கள் ஸ்பெக்ட்ரம் மற்றும் குடும்ப ஆதிக்கம் பற்றி தெரியாதவர்கள் அல்லது பணம் மற்றும் இலவசங்களுக்கு சோரம் போவார்கள் என்பது அவர்கள் எதிர்பார்ப்பு.

  Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : March 18, 2011 @ 10:08 am