ஜோதிபாசு மறைவு

 

மேற்கு வங்கத்தின் முன்னாள் முதல்வரும், மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான ஜோதிபாசு இன்று காலமானர். அவருக்கு வயது 95.

நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இவர் கோல்கத்தா மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந்நிலையில் இன்று மதியம் 12 மணி அளவில் சிகிச்சை பயன் இல்லாமல் இவர் உயிர் பிரிந்தது.

1967 மற்றும் 1969 களில் மேற்கு வங்க துணை முதல்வராக பணியாற்றினார். 1977 முதல் 2000 ம் ஆண்டு வரை 23 ஆண்டுகள் முதல்வராக இருந்து மேற்குவங்க மக்களுக்காக பணியாற்றியவர்.  கோல்கட்டாவில் பிரசிடன்சி கல்லூரியிலும், லண்டனில் உயர் படிப்பும் (சட்டம்) படித்தவர்.  சிறந்த நிர்வாகி மற்றும் தொழிலாளர்கள் மீது அக்கறையாக இருந்தவர்.

நாடு முழுவதும் உள்ள கம்யூ., தலைவர்கள் பலர் அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்துகின்றனர். அரசு சார்பில் மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி பாசுவின் உடலுக்கு அஞ்சலி செலுத்துகிறார்.  செவ்வாய்கிழமை இறுதிச்சடங்கு நடக்கிறது.

தொடர்புடைய படைப்புகள் :

  • தொடர்புடைய படைப்புகள் எதுவும் இல்லை !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : January 17, 2010 @ 8:26 am