என் ஜீன்ஸ், என் விருப்பம், என் டெணிம்

 

1997 இல் இத்தாலியின் ஒரு சாதாரண குடும்பத்தின் காலை மகிழ்ச்சியாகவே விடிந்தது. அன்று அவர்கள் வீட்டு பெண் முதன் முதலாக கார் ஓட்ட கற்றுக்கொள்ளப்போகிறாள். முதல் முதல் டிரைவிங் கிளாசுக்கு போகும் 17 வயது குழந்தைகளுக்கே ஆன சந்தோஷம். காலை 6 மணிக்கே குளித்து மிகவும் பிடித்த புளூஜீன்சை அணிந்துகொண்டாயிற்று. அம்மா அப்பா எல்லாரும் பல முறை சொன்ன கவனமாய் ஓட்டு கேட்டு கேட்டு அலுத்துப்போனாலும், தான் சுதந்திரம் பெறப்போவது ஒரு சந்தோஷத்தை கொடுத்தது அவளுக்கு. ஓட்டுநர் உரிமம் இங்கெல்லாம் சுதந்திரத்தோடு சேரும் ஒரு தகுதி.சிறகு விரித்து பறக்கும் பறவை போல, அது உரிமை இல்லை, ஒரு தகுதி ஆனாலும் பதின்ம வயதினரைக் கேட்டால் தெரியும் அந்த நாள் எத்தனை மகிழ்ச்சியானதென்று.

டிரைவிங் பள்ளியில் இருந்து வந்த ஓட்டுநர் 45 வயதுக்காரர். சந்தோஷமா ஓடி காரில் ஏறிப் போனவள் பிறகு வீடு திரும்பவில்லை. சாலையில், ஒதுக்குப்புறமான ஓரிடத்தில் மயங்கிக் கிடந்தவளை ஹாஸ்பிடலில் சேர்க்க பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பது  உறுதியானது. 

நீதிகேட்டு வழக்காடி, டிரைவருக்கு 21 வருடம் கடுங்காவல் தண்டனை. நிம்மதியாக கவின்சிலிங் மூலம் பழைய வாழ்க்கையை பெற துணிந்தவளுக்கு, 6 மாதத்திற்கு பேரிடியாய் வந்தது அந்த செய்தி. மீண்டும் வழக்கு ஆரம்பமாக, இந்த முறை சுப்ரீம் கோர்ட் வரை போனது வழக்கு. சம்பவம் நடந்த அன்று அவள் மிகவும் டைட்டான ஜீன்ஸ் அணிந்திருந்ததால். அதனால் அவளே கழற்றி இருந்தால் ஒழிய பாலியல் பலாத்காரம் சாத்தியல் இல்லை, அவளே கழற்றியதால், இது வன்புணர்வு இல்லை, அவள் ஒப்புதலோடு நடந்த புணர்வு என்று சொல்லி நீதிமன்றம் தீர்ப்பு வழக்கியது.

இதை எதிர்த்து நிறைய பெண்கள் மறுநாள் ஜீன்ஸ் அணிந்து இத்தாலி பாராளுமண்ற படிக்கட்டுகளில் போராடி தீர்ப்பை மாற்றி அமைத்தார்கள். அது நடந்த ஏப்ரல் 28 வருடா வருடம் டெணிம் தினமாகவும், பெண்களின் உரிமையை குறிப்பாதாகவும், என் அனுமதி இன்றி என்னுடன் யாரும் உறவு கொள்ள முடியாது என்பதை பெண்கள் குறிப்பதாகவும், பெண்களின் உணர்வுக்கு மரியாதை தர ஆண்கள் விரும்புவதைக் குறிக்கவும் டெணிம் அணியப்படுகிறது.

நீங்களும் ஏப்ரல் 28 டெணிம் அணிந்துகொள்ளுங்கள்.

தொடர்புடைய படைப்புகள் :

  • தொடர்புடைய படைப்புகள் எதுவும் இல்லை !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : April 1, 2011 @ 9:46 pm