பிரசாரம் செய்ய தலைவர்களுக்கு கிரிக்கெட் யோசனைகள்.

தேர்தல் பிரசாரம் செய்ய தலைவர்களுக்கு சில புதிய யோசனைகள்.

கருணாநிதி: 

உலகப்கோப்பையை நீங்கள் அனைவரும் ரசித்துக்கொண்டிருக்கும் இந்த வேளையிலே.. நான் கேட்கிறேன்

ஆறாவது முறையாக சச்சின் டெண்டுல்கர் உலக கோப்பை போட்டியில் விளையாடும் போது நான் ஆறாவது முறையாக முதல்வன் ஆகக்கூடாதா ? சச்சின் வர வேண்டும் என்று நினைக்கும் மக்கள் நான் வர வேண்டும் என்று ஏன் நினைப்பதில்லை ? இதை நீங்கள் நன்றாக யோசிக்க வேண்டும். சச்சின் உயர்ந்த சாதியிலே பிறந்தவர், இந்த கருணாநிதி தாழ்ந்த சாதியிலே பிறந்தவன். அதனால்தான் சச்சின் வேண்டும் என்று நினைப்போர் இந்த கருணாநிதி வரவேண்டும் என்று நினைப்பதில்லை. இது திராவிட இயக்கத்திற்கு எதிரான ஒரு போக்கு. இது ஆரிய – திராவிட பேதத்தை தவிர வேறொன்றுமில்லை.

டெண்டுல்கருக்கு 38 வயதாகியும் ஓய்வு பெறுவதைப்பற்றி பேசாத போது, நான் 86 வயதில் ஏன் பேச வேண்டும் ? திராவிட மக்கள் இதையும் நன்கு சிந்திக்க வேண்டும். நான் இப்படி பேசுவதால் கிரிக்கெட்டுக்கு எதிரானவன் என்று நீங்கள் நினைக்க கூடாது. அடுத்த ஐ.பி.எல் போட்டியில் எனது பேரனின் மகன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பாக விளையாடுவான் என்பதை பெருமையுடன் சொல்லிக்கொள்கிறேன்.

ஆகையால் வாக்காளப் பெருமக்களே உங்கள் வாக்கை உதயசூரியன் சின்னத்திற்கே போடும்படி கேட்டுக்கொள்கிறேன். உங்கள் வீட்டு பிள்ளைகள் விளையாட கிரிக்கெட் மட்டை, பந்து, கால் கவசம், ஸ்டம்புகள் இலவசமாக கொடுக்கப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

 

விஜயகாந்த் :

உலக கோப்பை அரையிறுதி விளையாட்டுல தமிழன் அஸ்வினை சேர்க்காம விட்டாங்க. ஏன்.. உங்களுக்கு தெரியுமா ?

ஏன்னா அவன் தமிழன். அதனால தோனி சதி செஞ்சு சேர்க்கலை. இந்த தோனி கடந்த 4 வருஷமாதான் கேப்டன் ஆனா நானு, பல வருஷமா கேப்டன்.

என்னடா விஜயகாந்த் இப்படி பேசறானேனு நீங்க நினைக்ககூடாது, அஸ்வினை இறுதி போட்டியில சேர்க்காட்டி, நான் அவரை தே.மு.தி.க வுல இளைஞர் அணி தலைவரா சேர்க்க முடிவு செஞ்சுட்டேன். நாங்க ஆட்சிக்கு வந்தா தமிழ்நாட்டு ரஞ்சி ட்ராபி டீமுல அவருக்கு கண்டிப்பா ஒரு இடம் உண்டு.

ஒரு தமிழனுக்கு நடந்த இந்த கொடுமையை ஆட்சியில இருக்காரே அந்த பெரியவர் என்னைக்காவது சட்டசபையில பேசியிருக்காரா ? இல்ல ஒரு தந்திதான் அடிச்சுயிருக்காரா ?

உங்க ஓட்டை முரசு சின்னத்துல போடுங்க.

 

வீரமணி :

என்னமோ திமுக ஊழல் செஞ்சுட்டாங்க செஞ்சுட்டாங்க சொல்லறாங்களே.. என்னயா ஊழல் நடந்தது. கிரிக்கெட்ல லலித் மோடி செய்யாத ஊழலா ? சரத் பவார் செய்யாத ஊழலா ? அதுக்காக மக்கள் நீங்க கிரிக்கெட் பார்க்காமலா இருக்கீங்க ? ஊழலை வட நாட்டுகாரன் செஞ்சா தப்பில்லை ஒரு தமிழன் செஞ்சா தப்பா ?

வடக்கு வாழுது, தெற்கு தேயுதுனு சொன்னது சரியா இருக்கு.

தலைவர் கலைஞர் பொறுமையின் சிகரம், தராசுல இருக்குற ரெண்டு தட்டு மாதிரி தமிழ்நாட்டை ரெண்டு பசங்களுக்கு சரியா பிரிச்சு கொடுத்திருக்காரு. இதை விட ஒரு தலைவர் என்னயா செய்ய முடியும்?

 

ஜெயலலிதா :

நான் கொடநாடு போவதை கேலி செய்யும் எதிர் கட்சியினருக்கு ஒன்று கேட்கிறேன்.

கிரிக்கெட் வீரர்கள் வெளிநாடு போவதில்லையா ? ஆட்டம் முடிந்தபின் ஊர் சுற்றி பார்ப்பதில்லையா ? அவர்கள் செய்தால் நியாயம், நான் செய்தா தவறா ?

அண்ணா நாமம் வாழ்க, எம்.ஜி.ஆர் நாமம் வாழ்க. உங்கள் பொன்னான வாக்குகளை ரெட்டை இலை சின்னத்துக்கே போடுங்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்தால், ஏழைகள் அனைவருக்கும் கொட நாடு செல்ல இலவச டிக்கெட் கொடுக்கப்படும். அத்துடன், குடும்பத்திற்கு தலா 500 ரூபாய் வழிச்செலவிற்காக கொடுக்கப்படும்.

உங்கள் ஓட்டு ரெட்டை இலைக்கே.

தொடர்புடைய படைப்புகள் :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : April 2, 2011 @ 6:56 am