நிமித்தக்காரன் குறும்படம்
Oviam Entertainments பெருமையும் வழங்கும் குறும்படம் ‘நிமித்தக்காரன்’.
கதை-வசனம் : ஸ்ரீதர் நாராயணன்.
ஒளிப்பதிவு : பாலாஜி மனோகர்
தயாரிப்பு : கணேஷ் சந்திரா
எடிட்டிங், பின்னனி இசை கோர்ப்பு, இயக்கும் : DJ
நடிப்பு : மோகன் ராமன், கணேஷ் சந்திரா, ரஜிதா மரூர்
சமிப கலமாக குறும் படங்கள் மக்களின் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது.தொலை காட்சிகள் கூடகுறும் பட போட்டிகள். விமர்சனங்க்கள், என்று பல் விதமான சுவாரஸ்யங்களை,தர தயாராக உள்ளனர். கற்பனை வளம் மிக்க படைப்பாளிகள் ஆக்கபூர்வமான,கலை நயம் மிக்க படங்களை எடுப்பதில் ஆர்வமாயுள்ளார்கள் இது மிகவும் ஆரோக்கியமான சுழ் நிலை.
நிமித்தகாரன் என்றால் எதிர்காலத்தை உரைப்பவன் .இது பழைய நாளில் உபயோகத்தில் இருந்தது.இந்த படம் சிறப்பக படமக்கப்பட்டுள்ளது. ஒரு பக்க கதையின் செல்லுலாய்டு வடிவம்.கிளைமாக்ஸ் படு பிரமாதம்.”செத்தவன் வாயில் வெத்தலை பாக்கை வச்ச” மாதிரி பாதி படம் இருந்தாலும், கிளைமாக்ஸ் அரை உறக்கத்தில் இருந்த நம்மை அறைந்து எழூப்பும்.கனவும்,நிகழும்–நடப்பும்,மாயா தோற்றமும் இரண்டர. கலக்க போவதன் ஆரம்பம். இந்த படத்தைப் பார்த்த போது சுஜாதா அவர்கள் குமுததில் எழுதிய முதல் சிறுகதை ஞாபகத்துக்கு வந்தது.தூங்க்கிக் கொண்டு இருந்த தமிழ், வாசகர்களை தட்டி எழுப்பிய சிறுகதை அது.
” இது கதையின் ஆரம்பம் அல்ல..” என்ற கதை அது
எழுதிய இயக்கிய.நடித்த, மற்றும் அனைத்து கலைஞர்களும் பாராட்டப்பட வேண்டியவர்கள்.
அ.நாகராசன்
நல்லாருக்கு