பின் பாக்கெட்டில் பர்ஸா ?

 

காலி செய்யுங்கள்! இல்லாவிட்டால் ‘பின்’விளைவுகள் விபரீதமாகிவிடுமாம்.

உங்கள் பர்ஸ் உங்கள் வரவுசெலவை மட்டுமல்ல, வாழ்க்கையையே பாதிக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

பலமணிநேரம் பெருத்த பாக்கெட்மேல் உட்கார்வதால் வலி பின்புறத்துக்கு மட்டுமின்றி, கால்வரை வலியைக் கடத்துமாம். சியாடிக் நரம்புகள் மேல் பாக்கெட் அமைந்திருப்பதால் சியாடிகா என்ற வியாதியும், பிரிஃபார்மிஸ் தசைகள் வலிது பிரிஃபார்மிஸ் சிண்ட்ரோமும், ஏன், கீழ் முதுகு வலியும் கூட உண்டாகலாமாம்.

பின்புறத்தில் பர்ஸின் அமைப்பு ஒரு ஆப்பு போல இருப்பதால், அந்த ஆப்பின் விசை முதுகுத்தண்டு, இடுப்பெலும்பு மற்றும் உடம்பை அசைத்து, சமநிலையை சீர்குலைக்கும். சூட்கேஸின் மீது 10 மணிநேரம் உட்காருவீர்களா? அதேபோலத்தான் பர்ஸும் செயல்படுகிறதாம். கார் ஓட்டும்போது ஏற்படும் அதிவுகளோடு இந்த ஆப்பு எஃபெக்டும் சேர்ந்தால் அவ்வளவுதான். தீராத முதுகுவலிதான்.

முன் பாக்கெட்டுக்கோ சைட் பாக்கெட்டுக்கோ பர்ஸை மாற்றுங்கள். முடியவில்லையா, குறைந்தபட்சம் உட்காரும்போதாவது பர்ஸை இடம் மாற்றுங்கள்.

மாதம் ஒருமுறையாவது பர்ஸில் இருக்கும் கண்ட கழிசடைகளையும் (12B டிக்கெட் – ஏறும் நிலை மேல் துளையிடு, சத்திரத்து ராத்திரிகள் டிக்கெட், பஸ்ஸில் சந்தித்த மதபோதகர் நோட்டீஸ் – இதெல்லாம் என்ன வரலாறா?) க்ளீன் செய்யுங்கள்.

இல்லையா, மனைவியை கூட்டிக்கொண்டு ஷாப்பிங் மால் செல்லுங்கள், பர்ஸ் இளைப்பதற்கு அவர்கள் பொறுப்பேற்றுக்கொள்வார்கள்!

 

(ஆங்கில கட்டுரையின் தமிழாக்கம்)

தொடர்புடைய படைப்புகள் :

  • தொடர்புடைய படைப்புகள் எதுவும் இல்லை !

2 thoughts on “பின் பாக்கெட்டில் பர்ஸா ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : May 2, 2011 @ 7:34 am