இந்திய அரசமைப்பு வழங்கும் அடிப்படை உரிமைகள் – 3

 

இப்போது ஷரத்து 13

(1) All laws in force in the territory of India immediately before the commencement of this Constitution, in so far as they are inconsistent with the provisions of this Part, shall, to the extent of such inconsistency, be void.

(2) The State shall not make any law which takes away or abridges the rights conferred by this Part and any law made in contravention of this clause shall, to the extent of the contravention, be void.

(3) In this article, unless the context otherwise requires,

(a) “Law” includes any Ordinance, order, bye-law, rule, regulation, notification, custom or usage having in the territory of India the force of law;

(b) “laws in force” includes laws passed or made by a Legislature or other competent authority in the territory of India before the commencement of this Constitution and not previously repealed, notwithstanding that any such law or any part thereof may not be then in operation either at all or in particular areas.

1[(4) Nothing in this article shall apply to any amendment of this Constitution made under article 368.] 

இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் (இ.அ.ச) பகுதி 3 ன் படி உறுதி செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள், பிற துறை சார்ந்த சட்டங்கள் காரணமாக நிராகரிக்கப்படலாகாது என்பதனை உறுதி செய்யும் ஷரத்து இது இதன் படி இ.அ.ச அமுலுக்கு வருவதற்கு முன் நடைமுறையில் இருக்கும் /இருந்த சட்டங்கள் யாவிலும் இ.அ.ச வின் பகுதி மூன்றில் உறுதி செய்யப்பட்ட 

அடிப்படை உரிமைகளை நிராகரிக்கும் வண்ணமாக இருக்கும் ஷரத்துகள் /பிரிவுகள் செல்லாதவை ( அதாவது அடிப்படை உரிமைகளை நிராகரிக்கும் பிரிவுகள் மட்டும்) அரசு இனி இயற்றும் எந்த வகை சட்டத்திலும் இ.அ.ச வில் உறுதி செய்யப்பட்ட அடிப்படை உரிமைகளை நிராகரிக்கும் வண்ணம் செயல்படலாகுது. அப்படி இயற்றப்பட்ட சட்டம் செல்லாது 

(சட்டம் என்ற வார்த்தை சட்ட வடிவம், ஆணை, அறிவிப்புகள், விதிகள், துணை விதிகள், வழக்க நெறிகள் என்ற எல்லா வடிவத்தையும் குறிக்கும்) (நடைமுறையில் இருக்கும் சட்டம் என்ற வார்த்தை இ.அ.ச அமுலுக்கு வரும் முன் சட்டமியற்றும் அதிகாரம் கொண்ட அமைப்புகள் (சட்ட மன்றம்/ மேலவை/ நாடாளுமன்றம்) இயற்றிய சட்டங்கள், தகுதி வாயந்த அதிகாரத்தால் இயற்றப்பட்ட சட்டம், இ.அ.ச த்தின் வழி நின்று மாற்றி அமைக்கப்படாத சட்டங்கள் இவற்றை க் குறிக்கும்) இந்த ஷரத்து 13 இந்திய அரசியல் சட்டத்தின் ஷரத்து 368 ன் வழி இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் திருத்தப்படுதலுக்கு பொருந்தாது 

சிறு தகவல்:

இந்திய அரசியல் சட்டம் அமுலுக்கு வந்தது ஜனவரி 26 1950. ஆனால் இந்தியா 1947 ஆகஸ்ட் 15 சுதந்திரம் பெற்றது சுதந்திரம் பெற்று சுமார் 31 மாதங்கள் கழித்தே தனக்குரிய குடியரசு 

அரசாட்சிக்கான வழி முறையாக இந்திய  அரசியல் அமைப்புச் சட்டத்தினை வகுத்து நடைமுறைக்கு கொண்டு வந்தோம். இந்த 31 மாத காலம்  நாம் Government of India Act என்ற பிரிட்டிஷாரின் சட்டத்தினையே அரசியல் அமைப்புச் சட்டமாக கொண்டிருந்தோம் இந்த Government of India Act 1833 ல் உதயம் கண்டது. அப்போது இது Charter Act என்றும் சொல்லப்பட்டது பின்னர் 1858 ல் இந்தியாவில் பிரிட்டிஷ சர்கார் நேரடியாக ஆட்சி செலுத்த தொடங்கிய உடன் (அதுவரை கிழக்கிந்திய கம்பெனி தான் இந்தியாவில் ஆட்சி செலுத்தியது . இந்த ஆட்சி மாற்றம் 1857 ல் நடை பெற்ற சிப்பாய் கலகம் என்று அறியப்பட்ட முதல் இந்திய சுதந்திரப் போர் என்றும் சரித்திர ஆசிரியர்கள் குறிப்பிடும் சரித்திர நிகழ்வின் காரணமாக ஏற்பட்ட முக்கிய அரசியல் மாறுதல்) இந்த சட்டம் சில மாற்றங்களை அடைந்தது. பின்னர் எல்லா சட்டங்களையும் போல இந்த Government of India Act பல வடிவங்கள் எடுத்தது 

கடைசியாக Government of India Act 1935 என்ற வடிவத்தை அடைந்தது. 

 

சுதந்திரம் அடைந்து குடியரசாக மலர்வதற்கு உண்டான இந்த கால அவகாசத்தில் தான் நமது இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் உருவானது. இந்திய அரசியல் நிர்ணய சபையில் (Constituent Assembly of India). மிகச் சரியாக சொன்னால் சுதந்திரதிற்கு முன்பே இந்த நடவடிக்கை தொடங்கியது. Constituent Assembly of India முதன் முதலில் டிசம்பர் 9 , 1946 கூடியது. ஜனவரி 26 1949 ல் Constituent Assembly of India இந்திய அரசியல் சட்டத்தினை ஏற்றது. ஜனவரி 26 1950 இந்திய அரசியல் சட்டம் நடைமுறைக்கு வந்தது  Constituent Assembly of India வில் நமது இந்திய அரசியல் சட்டம் வடிவம் பெற இரண்டு வருடம் 11 மாதங்கள் 17 நாட்கள் விவாதங்கள் நடந்தன. பதினொரு முறை கூடியது சபை. 

299 உறுப்பினர்கள் இங்கு நீங்கள் காணும் படம் அரசியல் நிர்ணய சபையின் முதல் நாள் கூட்டம்.

 

First Session: 9-23 December, 1946 

Second Session: 20-25 January, 1947 

Third Session: 28 April – 2 May, 1947 

Fourth Session: 14-31 July, 1947 

Fifth Session: 14-30 August, 1947 

Sixth Session: 27 January, 1948 

Seventh Session:4 November,1948 – 8 January, 1949 

Eighth Session: 16 May – 16 June, 1949 

Ninth Session: 30 July – 18 September, 1949 

Tenth Session: 6-17 October, 1949 

Eleventh Session: 14-26 November, 1949

 

பின்னர் ஜனவரி 24, 1950 மீண்டும் ஒரு முறை கூடி எல்லா உறுப்பினர்களும் கையெழுத்திட்டனர் இங்கு நீங்கள் காணும் படம் நேரு கையெழுத்து இடும் காட்சி.

இந்த Constituent Assembly of India வின் தலைவராக ராஜேந்திர பிரசாத் இருந்தார். அவரே முதல் குடியாரசு தலைவராகவும் ஆனார் Constituent Assembly of India வில்  பல துணைக் குழுக்கள் அமைக்கப்பட்டன இந்திய அரசியல் சட்டத்தினை வரைவு செய்யும் குழுவின் (Drafting Committee) தலைவர் அம்பேத்கார் அவர்கள் நாம் இப்போது இந்த தொடருக்காக் எடுத்துக் கொண்ட பொருளான அடிப்படை உரிமைகள் Constituent Assembly of India வில் விவாதிக்கப்படுகையில் அம்பேத்காரின் பதில்கள் , விவாதங்கள் சட்ட உலகத்தின் ஏன் மனித குலத்திற்கே ஒரு கலங்கரை விளக்கம் என சொல்லலாம் அடிப்படை உரிமைகள் பற்றி எனது இந்த தொடரில் ஆங்காங்கே Constituent Assembly of India வில்  அம்பேத்காரின் பதில்கள் , விவாதங்களை இயன்ற அளவு மேற்கோள் காட்டுகிறேன்.

தொடர்புடைய படைப்புகள் :

One thought on “இந்திய அரசமைப்பு வழங்கும் அடிப்படை உரிமைகள் – 3

  • July 29, 2011 at 2:19 am
    Permalink

    அன்பின் மௌளி – அருமையான தகவல்கள் – விளக்கங்கள் – ஆவணங்கள் – உழைப்பிற்கும் பகிர்வினிற்கும் நன்றி – நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : July 28, 2011 @ 10:33 am