இந்திய அரசமைப்பு வழங்கும் அடிப்படை உரிமைகள் – 4

ஷரத்து 14 முதல் 16 வரையிலான மூன்று ஷரத்துகளும் சம உரிமை பற்றியவை, முதலில் ஷரத்து 14 ஐப் பார்ப்போம் 

The State shall not deny to any person equality before the law or the equal protection of the laws within the territory of India. 

அரசு எந்த ஒரு நபருக்கும் சட்டத்தின் முன் சம உரிமையையோ அல்லது சட்டத்தின் வழியான பாதுகாப்பில் சமத்துவத்தையோ மறுக்கலாகாது 

இந்த ஷரத்தில் மிக முக்கியமான   மூன்று Doctrines equality before the law -சட்டத்தின் முன் அனைவரும் சமம் equal protection- சட்டத்தின் படியான பாதுகாப்பு அனைவருக்கும் பொது 

Any person – பிரஜை மட்டுமல்ல பிரஜை அல்லாதவர்க்கும் இதில் equality before the law என்பது இங்கிலாந்து நாட்டின் Common Law வையும் equal protection of the laws என்பது அமெரிக்க அரசமைப்புச் சட்டத்தினையும் தழுவி ஆக்கப் பெற்றதாக அண்ணல் அம்பேத்கர் Constituent Assembly விவாதங்களில் விளக்கினார் இதில் ஒரு முக்கிய கோட்பாடு மறை பொருள். Equality before Law means the absence of any special privilege in favour of any individual, and the equal subjection of all the classes to the ordinary law. 

அதாவது சட்டம் எல்லோருக்கும் சமம் என்றால் இரண்டு நபரை ஒப்பு நோக்கையில் ஒப்பு நோக்கும் சந்தர்ப்பத்தைக் கவனிக்க வேண்டும் ஓர் உதாரணம் பாருங்கள் ஒரு சாதாரண குடிமகன், ஓர் அரசு ஊழியர், அரசு ஊழியரில் உயர் பதவி வகிப்பவர் ( மாவட்ட கலெக்டர் என வைத்துக் கொள்ளுங்கள்) இந்திய குடியரசு தலைவர் இந்த நால்வரையும் இரண்டு சந்தர்பங்களில் இந்த உதாரணத்திற்கு ஒப்பிடலாம் இவர்களுக்கு போலிஸ் பாதுகாப்பை முதல் சந்தர்ப்பமாக எடுத்து ஒப்பு நோக்கலாம். 

 • சாதாரண குடிமகன் – பெரும்பாலும் போலிஸ் பாதுகாப்பு பெற மாட்டார்- இல்லை அதற்கான வேண்டுகோளினால் சில காலம் பெறலாம்.
 • ஓர் அரசு ஊழியர்- அவர் வகிக்கும் பதவியைப் பொறுத்து ஓரளவு பெறுகிறார்.
 • மாவட்ட ஆட்சியர்- இவர் குறிப்பிடத் தகுந்த வகையில் நிரந்தரமான பாதுகாப்பு பெறுகிறார். 
 • குடியரசு தலைவர்- நாட்டிலேயே மிக உயர்ந்த பாதுகப்பினை நிரந்தரமாகப் பெறுகிறார்.

இவர்களின் பதவி மற்றும் அதற்கான பொறுப்புகள் (Liabilities) காரணமாக நால்வரும் வேறு வேறு நிலையில் பாகுபடுத்தப்பட்டுள்ளனர். பாதுகாப்பு சட்ட நடைமுறையில் வேறுபாடு இவர்கள் தங்கள் தேவைக்காக நிலம் வாங்கி பதிவு செய்வதான ஒரு சந்தர்பத்தை இரண்டாவதாக எடுத்து ஒப்பு நோக்கலாம் இவர்கள் நால்வரும் ஒரே வகையான சட்ட நடைமுறையின் படியே நிலப் பதிவினை செய்ய வேண்டிவரும் இங்கே இந்த சந்தர்ப்பத்தில் நால்வரும் சமம் Equal Protection of and Equality before Law means the right to equal treatment in similar circumstances, both in the privileges conferred and in the liabilities imposed by the law. In other words, there should be no discrimination between one person and another if as regards the subject matter of the legislation, their position is same என்று இதற்கான ஒரு முத்தாய்ப்பான விளக்கத்தினை 1951 லேயே உச்சநீதி மன்றம் Chiranjit Lal Vs. Union of India என்ற வழக்கின் தீர்ப்பில் சொல்லியுள்ளது சமூகத்தில் பல்வேறு சூழலில் பல்வேறு காரணமாய் சம நிலையில் இல்லாத மக்களிடம் எல்லா சட்டமும் ஒரே வகையான நிறைவேற்றுதலை நிலை நிறுத்த இயலாது. 

இந்நிலையில் Doctrine of Classification என்ற அடிப்படையில் பாகுபடுத்தி பகுக்கப்பட்ட நிலையில் சம நிலையில் இருக்கின்றனரா என ஆராய உச்ச நீதி மன்றம் வழி காட்டுதல்களை ஏற்படுத்தியுள்ளது 

இப்படி பாகுபடுத்த Reasonable Classification அதாவது நியாயமான பாகுபாடு எப்படி அமைய வேண்டும் என்பதனை வி. சி சுக்லா வழக்கில் உச்சநீதி மன்றம் வழிகாட்டுதலாக வழங்கியுள்ளது 

இரண்டு நபர்களை ஒரு சட்டத்தின் நடைமுறைக்காக ஒப்பு நோக்க வேண்டியிருக்கும் சூழலில் அந்த சட்டம் எந்த நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டதோ அந்த நோக்கம் அந்த இருவருக்கும் எல்லா நிலையிலும் சமமாகப் பொருந்தி வருகிறதா என்பதனை ஆராய்ந்து பாகுபடுத்த வேண்டும்.

தொடர்புடைய படைப்புகள் :

One thought on “இந்திய அரசமைப்பு வழங்கும் அடிப்படை உரிமைகள் – 4

 • August 6, 2011 at 2:51 am
  Permalink

  அன்பின் மௌளி – மேலோட்டமாகப் புரிகிறது – சட்டம் எழுதப்பட்ட முறை புரிகிறது. சட்டமும் படித்திருந்தால் துல்லியமாகப் புரியும். பகிர்வினிற்கு நன்றி – நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா

  Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : August 4, 2011 @ 9:17 pm