ஃபேன்சி பதிவு எண் பலகைக்கு தடா

 

மத்திய மோட்டார் வாகன விதி 50 மற்றும் 51ன் படி அனைத்து வாகனங்களிலும் பதிவு எண் பலகை பொருத்தப்பட்டு இருக்க வேண்டும். மேற்கண்ட விதிகளின் படி பதிவு எண் பலகை பொருத்தப்படாமல் அவரவர் விருப்பத்திற்கு ஏற்றவாறு பதிவு எண்கள் எழுதப்பட்டு இயக்கப்படுகின்றன என மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.

இதனை தடுக்கும் நோக்கத்தோடு அனைத்து வாகன உரிமையாளர்களுக்கு இதன் மூலம் மேற்கண்ட விதிகளுக்குட்பட்டு 30 நாட்களுக்குள் பதிவு எண் பலகை பொருத்தப்பட வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதில் தவறும் பட்சத்தில் விதிகளை மீறி இயக்கப்படும் மோட்டார் வாகனங்களின் பதிவுச் சான்றிதழ் மோட்டர் வாகச்சட்டம் பிரிவு 53ன் படி தற்காலிகமாக ரத்து செய்யப்படும் எனவும் இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது. மேலும் இத்துறையில் உள்ள செயலாக்க பிரிவினரின் தீவிர தணிக்கைக்கு உத்திரவிடப்பட்டுள்ளது.

முறையான பதிவு எண் பலகை பொருத்தப்படாத அனைத்து வாகன உரிமையாளர்கள் 2011 ஆகஸ்டு மாத இறுதிக்குள் முறையான பதிவு எண் பலகையை பொருத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இதில் தவறும் பட்சத்தில் அவ்வாகனங்களின் பதிவு சான்று தற்காலிகமாக இரத்து செய்யப்படும் எனத்தெரிவிக்கப்படுகிறது.

தொடர்புடைய படைப்புகள் :

  • தொடர்புடைய படைப்புகள் எதுவும் இல்லை !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : August 7, 2011 @ 11:10 am