இந்திய அரசமைப்பு வழங்கும் அடிப்படை உரிமைகள் – 5

 

இப்போது ஷரத்து 15 ஐ பார்ப்போம் 

 

1. அரசு மதம் ஜாதி,இனம், பாலினம் பிறந்த இடம் இவற்றின் அடிப்படையில் எந்த ஒரு இந்தியப் பிரஜையினையும் வேறுபடுத்தலாகாது.

2. அரசு மதம் ஜாதி,இனம், பாலினம் பிறந்த இடம் இவற்றின் அடிப்படையில் எந்த ஒரு இந்தியப் பிரஜையினையும்.

a. கடைகள், பொது உணவகங்கள், பொது அரங்குகள் இவற்றினை உபயோகத்திற்காக அணுக தடையோ அல்லது நிர்பந்தங்களோ விதிக்கலாகாது 

b. அரசு மதம் ஜாதி,இனம், பாலினம் பிறந்த இடம் இவற்றின் அடிப்படையில் எந்த ஒரு பிரஜையினையும் பொதுக் கிணறுகள், குளங்கள், குளிக்கும் இடங்கள் சாலைகள் மற்றும் அரசினால் 

அதன் நிதி வழி முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ பராமரிக்கப்படுகின்ற பொது மக்களின் பயனுக்கான இடங்களில் உபயோக அனுமதியினை மறுக்கலாகாது 

3. இந்த ஷரத்து அரசு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கென உண்டாக்கும் எந்த ஒரு சிறப்பு வழிமுறையினையும் தடை செய்யாது 

4.சமூக மற்றும் கல்வி நிலையில் பின் தங்கியுள்ள பிரிவினருக்கோ அல்லது Scheduled Castes and the Scheduled Tribes இவர்களின் முன்னேற்றத்திற்கென அரசு உருவாக்கும் எந்த ஒரு சிறப்பு வழிமுறையினையும்  இந்த ஷரத்தோ அல்லது ஷரத்து 29 ன் உட்பிரிவு 2 ம் தடை செய்யாது 

5. சமூக மற்றும் கல்வி நிலையில் பின் தங்கியுள்ள பிரிவினருக்கோ அல்லது Scheduled Castes and the Scheduled Tribes இவர்களின் முன்னேற்றத்திற்கென அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறுகின்ற/ 

பெறாத தனியார் கல்வி நிலையங்களில் (ஷரத்து 30(1) ல் குறிப்பிடப்பட்ட சிறுபான்மையோருக்கான பிரத்யேக கல்வி நிறுவனங்களி நீங்கலாக) கல்வி கற்பதற்கான அனுமதியில் அரசு சட்டமாக ஏற்படுத்தும் எந்த ஒரு சிறப்பு வழிமுறையினையும் இந்த ஷரத்தோ அன்றி ஷரத்து 19 (1) (g) ம் தடை செய்யாது இந்த ஷரத்தின் உட்பிரிவு 4 இட ஒதுக்கீடுகளுக்கு வழி ஏற்படுத்த வேண்டி 1951 ம் ஆண்டு இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முதல் திருத்தத்தின் படி சேர்க்கப்பட்டது அரசமைபுச் சட்டத்தின் அதன் முதல் அமுல் வடிவத்தில் இந்த ஷரத்து இல்லை. 

அந்நிலையில் அப்போதைய சென்னை மாகாண அரசு மருத்துவக் கல்லூரியிலும் பொறியியல் கல்லூரியிலும் மாணவர் சேர்கையில் ஜாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டது. இதனை  இது அன்று நடைமுறையில் இருந்த அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்று சென்னை உயர் நீதி மன்றத்தில் சம்பகம் என்ற மாணவி வழக்கு தொடர்ந்தார். நடைமுறையில் இருந்த அரசியல் அமைப்புச் சட்டத்தின் வழி நின்று ஆராய்ந்து அந்த அரசாணை சட்ட விரோதம் என உயர்நீதி மன்றம் தீர்ப்பளித்தது ( CHAMPAKAM VS STATE OF MADRAS AIR 1951 MAD 149) இந்திய விடுதலைக்கு முன்னிருந்தே 1854 ல் இருந்தே ஆம் ஆங்கில் அரசு காலத்தில் வழக்கிலிருந்த வகுப்புவாரி பிரதிநிதித்துவ முறையில் ஒரு சிறு திருத்தமே 1951ல் அப்போதைய சென்னை மாஹாண சர்க்கார் பிரப்பித்த அரசாணை. (இந்த சட்ட வரலாறு மிக சுவையானது) எனவே சென்னை மாஹாண அரசு உயர்நீதி மன்ற தீர்ப்பினை எதிர்த்து முறையீடு செய்தது . முறையீட்டினைத் தள்ளுபடி செய்தது உச்ச நீதி மன்றம். காரணம் பல காலம் நடைமுறையிலிருந்தாலும் எப்போது நாம் நமக்கென ஓர் அரசமைப்புச் சட்டம் வகுத்து அதனை ஏற்றோமோ அதன் வழி நிற்பதே சட்ட மாட்சி என்றது (CHAMPAKAM VS STATE OF MADRAS AIR 1951 SC 229) (அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தபின்பு அதன் வழி நிற்காத சட்டங்கள் ஆணைகள் செல்லாதனவாகும் என்ற ஷரத்தினை இங்கே நினைவு கூறவும்) சமூக நிலையில் பின் தங்கியோரின் நலனுக்காக இந்திய அரசமைப்புச் சட்டம் திருத்தப்பட்டு ஷரத்து 15 ல் உட்பிரிவு 4 சேர்க்கப்பட்டது உட்பிரிவு 5 2005 ம் ஆண்டு அரசமைப்புச் சட்டம் 93 வது திருத்தத்தின்படி சேர்க்கப்பட்டு 20-1-2006 முதல் நடைமுறைக்கு வந்தது.

தொடர்புடைய படைப்புகள் :

  • தொடர்புடைய படைப்புகள் எதுவும் இல்லை !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : August 18, 2011 @ 9:18 pm