இந்திய அரசமைப்பு வழங்கும் அடிப்படை உரிமைகள் – 6

 

ஷரத்து 15 ஐப் படித்த பின் சிலருக்கு ஐயம் தோன்றலாம் "maintained wholly or partly out of State funds or  ஏற்கனவே ஷரத்து 12 ல் அரசு என்ற பதம் தரும் பொருள் விளக்கப்பட்டதால் இந்த 15 வது ஷரத்தில் மீண்டும் இந்த சொற்றொடர் தேவை இல்லை எனக் கருதலாம் ஆனால் ஒரு தனியார் இடம் சில காரணங்களினால் அரசின் சில வகைப் பராமரிப்பில் இயங்க வேண்டிய சூழலைக் கருத்தில் கொண்டு அந்த இடங்களிலும் அடிப்படை உரிமை நிலை நாட்டப்பட வேண்டிய அவசியம் கருதி இந்த சொற்றொடர் இருக்கிறது.

கீழ்க்கண்ட சம்பவங்களைப் பாருங்கள் 

1. ஒரு தனியார் இடம். அரசால் சுற்றுலா இடமாக அங்கீகரிக்கப்பட்டு சுற்றூலா மேம்பாட்டுக்காக அந்த இடத்தில் சுற்றுலாத் துறை சில பராமரிப்பு வேலைகளை மேற்கொண்டுள்ளது. அந்த ஸ்தலத்தில் நுழைவது, அங்குள்ள நீச்சல் குளத்தில் குளிப்பது 

2. ஒரு தனியார் இடம். மேற்கண்ட மாதிரி சுற்றுலாவுக்கு நிகராக கேளிக்கை, உலா நடவடிக்கைகள் எல்லாம் இருக்கிறது. ஆனால் அரசுக்கு தொடர்பில்லை அந்த ஸ்தலத்தில் நுழைவது, அங்குள்ள நீச்சல் குளத்தில் குளிப்பது (மேற்கண்ட இரண்டு நிலைகளிலும் சுற்றுலா ஸ்தலங்கள் சென்னை கீழைக் கடற்கரை சாலையில் இருப்பதனை நினைவில் கொள்ளலாம்) 

3. ஒரு திரையரங்கம். தனியாருக்குச் சொந்தமானது. அரசு விதிக்கும் கேளிக்கை தொடர்பான வரி, மற்றும் திரையரங்கப் பாதுகாப்புக்கென அரசு விதிக்கும் விதிகளுக்கு உட்பட்டு இயங்குகிறது. பொது மக்களுக்கென நுழைவுச் சீட்டின் வழி நுழைவை வகை செய்துள்ளது. அந்த நுழைவு சீட்டு அரசின் வரித்திட்டங்களுக்கு உட்பட்டது 

4. ஒரு திரையரங்கம். தனியாருக்குச் சொந்தம். திரையரங்கப் பாதுகாப்புக்கென அரசு விதிக்கும் விதிகளுக்கு உட்பட்டு இயங்குகிறது. ஆனால் பொது மக்களுக்கானது இல்லை. உரிமையாளரின் தனி உபயோகத்திற்கானது மேற்கண்ட உதாரணங்களில் 1 & 3 ல் இ.அ.ச வின் ஷரத்து 15 ன் படி அடிப்படை உரிமை மீறலாகாது 2 & 4 ல் அடிப்படை உரிமை என்ற நிலை உருவாவதில்லை ;ஒரு தனியார் இடம் சில காரணங்களால் அரசின் நிதி கொண்டு பராமரிக்கப்படும் நிலைக்கு சில உதாரணங்களிவை

ஷரத்து 16 ஐப் பார்போமா இந்த ஷரத்து அரசு பணியில் நியமனம் குறித்தது 

16. (1) there shall be equality of opportunity for all Citizens in matters relating to employment or appointment to any office under the State. 

அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அலுவலகங்களில் வேலை நியமனத்தில், குடிமக்களுக்கு சம உரிமை இருக்க வேண்டும் 

(2) No citizen shall, on grounds only of religion, race, Caste, sex, descent, place of birth, residence or any of them, be ineligible for, or discriminated against in respect of, any employment or office under the State. 

அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அலுவலகங்களில் வேலை நியமனத்தில் எந்த ஒரு குடிமகனையும் மதம், ஜாதி, இனம், பாலினம், வம்சாவளி பிறந்த இடம்,வசிப்பிடம் இவற்றினைக் காரணம் காட்டி வேறுபடுத்தவோ தகுதியின்மை பாராட்டுதலோ கூடாது 

(3) Nothing in this article shall prevent Parliament From making any law prescribing, in regard to a class or Classes of employment or appointment to an office  [under the Government of, or any local or other authority within, a State or Union territory, any requirement as to residence within that State or Union territory] prior to such employment or appointment 

குறிப்பிட்ட வகையான வேலை நியமனத்துக்கு வசிப்பிட்த்தினை வேலை நியமனத் தகுதியில் ஒன்றென நாடாளுமன்றம் சட்ட வரையறை செய்திட இந்த ஷரத்தின் வழி தடுக்க இயலாது (குறிப்பு: இந்த ஷரத்து அரசமைப்புச் சட்ட்த்தின் ஏழாவது சட்ட்த்திருத்த்த்தில் சில மாற்றங்களைப் பெற்றது) 

(4) Nothing in this article shall prevent the State from making any provision for the reservation of appointments or posts in favour of any backward class of citizens which, in the opinion of the State, is not adequately represented in the services under the State. 

பிற்படுத்தப்பட்ட குடிமக்களின் பிரதிநிதித்துதுவம் அரசு பணியில் போதுமானதாக இல்லை எனஅரசு கருதும் நிலையில் அவர்களுக்கென வேலைநியமனத்தில் எவ்வகை சிறப்பு ஏற்பாடுகளைச் செய்ய இந்த ஷரத்தின் வழி தடுக்க இயலாது 

(4A) nothing in this article shall prevent the State from making any provision for reservation [in matters of promotion, with consequential seniority, to any class] or classes of posts in the services under the State in favour of the Scheduled Castes and the Scheduled Tribes which, in the opinion of the State, are not adequately represented in the services under the State.] 

Scheduled Castes and the Scheduled Tribes குடிமக்களின் பிரதிநிதித்துதுவம் அரசு பணியில் போதுமானதாக இல்லை எனஅரசு கருதும் நிலையில் அவர்களுக்கென வேலைநியமனத்தில் பதவி உயர்வு தொடர்புடைய பொருண்மையில் அரசு ஓதுக்கீடு செய்ய இந்த ஷரத்தின் வழி தடைசெய்யலாகாது (குறிப்பு: இந்த ஷரத்தின் பிரிவு 4A அரசமைப்புச் சட்ட்த்தின் எழுபத்திஏழாவது திருத்த்த்தின் வழி சேர்க்கப்பட்ட்து. பின்னர் 85 வது திருத்த்த்தின் வழி மாற்றமும் பெற்றது) 

(4B) Nothing in this article shall prevent the State from considering any unfilled vacancies of a year which are reserved for being filled up in that year in accordance with any provision for reservation made under clause (4)or clause (4A) as a separate class of vacancies to be filled-up in any succeeding year or years and such class of vacancies shall not be considered together with the vacancies of the year in which they are being filled up for determining the ceiling of fifty per cent.  Reservation on total number of vacancies of that year.] 

இந்த ஷரத்தின் பிரிவு 4 A மற்றும் 4 B வழி ஒராண்டில் இட ஒதுக்கீடான இடங்கள் நிரப்ப்ப்படா நிலையில் அதனை தனி காலியிடமாக கருதி அதனை வரும் ஆண்டுகளில் நிரப்பிட அரசுக்கு தடை இல்லை அவ்வண்ணம் நிரப்பிடுகையில் ஒதுக்கீட்டில் ஆண்டுக்கு 50 சதமே உச்ச நிலை என்ற கணக்கீட்டுக்கு இவ்வையில் விடுபட்ட காலியிடங்களை சேர்க்கலாகாது (குறிப்பு: இந்த ஷரத்தின் பிரிவு 4B அரசமைப்புச் சட்டத்தின் என்பத்தியோராவது திருத்த்த்தின் வழி சேர்க்கப்பட்டது) 

(5) Nothing in this article shall affect the operation of any law which provides that the incumbent of an office in connection with the affairs of any religious or denominational institution or any member of the governing body thereof shall be a person professing a particular religion or belonging to a particular denomination. 

மதம் சார்ந்த அரசு அலுவலகப் பணியில் அந்த குறிப்பிட்ட மதம் சார்ந்தவரை நியமனம் செய்திட அரசு கொண்ட நடமுறைச் சட்டங்களை இந்த ஷரத்து பாதிக்காது.

தொடர்புடைய படைப்புகள் :

  • தொடர்புடைய படைப்புகள் எதுவும் இல்லை !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : August 28, 2011 @ 9:23 pm