இந்திய அரசமைப்பு வழங்கும் அடிப்படை உரிமைகள் – 7

கீழ்க்கண்ட உரையாடலைப் படிக்கும் முன்பு இந்த சுட்டியில் இருப்பதை ஒரு முறை படித்துவிட்டு வாருங்கள் http://www.tamiloviam.com/site/?p=1704

பேராசிரியர் விஸ்வநாதன், தனது ரிட்டயர்ட் வாழ்க்கையினை முழுமையாக அனுபவித்துக் கொண்டிருந்தார். சர்வீசில் இருக்கும் போது இந்த ஹிண்டு பேப்பரை ஒரு முறை கூட முழுதாகப் படிக்க முடியாது. காலேஜுக்கு நேரமாகிவிட்டது என ஓட வேண்டும். என்னதான் டிவியில் கிரிகெட் மாட்ச் லைவ் ஆகப் பார்த்தாலும் ஸ்போர்ட்ஸ் காலத்தில் மாட்சைப் பற்றி எழுதியிருப்பதைப் படிப்பதில் உள்ள சுகமே தனி என நினைத்தவாறே ஸ்போர்ட்ஸ் பக்கத்திற்கு திருப்பினார்.

வாசல் கதவைத் திறந்து கொண்டு பெருமாள் வருவது தெரிந்தது. இந்தப் பெருமாள் வைகுண்ட பெருமாள் என நினைத்துக் கொள்ளாதீர்கள். விஸ்வநாதன் வேலை பார்த்த அதே அரசாங்க காலேஜில் கணிதப் பேராசிரியராக வேலை பார்த்தவர் இன்னமும் பார்த்துக் கொண்டிருப்பவர்

"வாங்க பெருமாள். குட் மார்னிங்.. என்ன இன்னிக்கு காலேஜ் இல்லையா. ரொம்ப சாவகாசமா வரீங்க. உட்காருங்க"

"இன்னிக்கு ஸ்போர்ட்ஸ் டே அப்படினு லீவு விட்டுடாங்க ப்ரொபசர். ஒரு முக்கியமான விஷயம் உங்க கிட்ட ஐடியா கேட்கலாம்னு வந்தேன்"

"சொல்லுங்க"

"முன்னாடியே உங்க கிட்ட சொன்னது தான்.. எனக்கு சம்பளம் பிக்ஸ் பண்ணதுல‌ ஏகப்பட்ட குழப்பம் பண்ணி வச்சிருக்காங்க. நானும் வேலாயுதமும் அசிஸ்டன்ட் ப்ரொபசர்  தான் ஆனா அவருக்கு சம்பள விகிதம் அதிகமாகவும் எனக்கு சம்பள விகிதம் குறைவாகவும் நிர்ணயம் செய்திருக்காங்க. ப்ரிசன்சிபலைக் கேட்டா என்னன்னவோ சொல்லி குழப்பறார். வேலாயுதம் டாக்டரேட் வாங்கிருக்காரு. அவர் லெக்சரர் போஸ்ட்டிலே என்னை விட அதிக வருஷம் சர்வீஸ் அப்படி இப்படினு;புரிந்த மாதிரியும் இருக்கு புரியாத மாதிரியும் இருக்கு. என்னோட தூரத்து சொந்தக்காரர் சென்னையிலே வக்கீலா இருக்கார். அவர் கிட்ட கேட்டேன் . இது சரியா அப்படினு. அவர் சரியில்லை. கேஸ் போட்டு சரி செய்துடலாம்னு சொல்றார். அப்படி செய்யறதுக்கு முன்னால் உங்ககிட்ட ஒரு ஐடியா கேட்டுக்கலாம்னு வந்தேன்".

"இது ரொம்ப சிம்பிள்.. காஃபி சாப்பிடறீங்களா… " வீட்டின் உள்பக்கம் பார்த்து "பெருமாள் சார் வந்திருக்கார் பாரு. காஃபி கொண்டுவாம்மா" என சொல்லிட்டு

"பெருமாள் சார்.. ஒரே வேலை பார்ப்பவருக்கு ஒரே சம்பளம் என பொதுவில் சரியாக புரிந்து கொண்டு இருப்பீங்க‌. அது கரெக்ட் தான். நான் வரிசையாக சொல்றேன் கவனமாக கேளுங்கள். நீங்களும் வேலாயுதம் சாரும் அசிஸ்டண்ட் ப்ரொபசர். அதாவது ஒரே கேடர் அல்லது பதவினு வச்சுக்கலாம். இந்த அசிஸ்டண்ட் ப்ரொபசர் என்கிற பதவிக்கான சம்பள விகிதம் ஒன்று தான் இருக்க முடியும். இதைத் தான் சட்டத்தின் முன்பு அனைவரும் சமம். சட்டத்தின் படி வழங்கப்படும் பாதுகாப்பில் வேறுபாடு காட்டக் கூடாது என சொல்வது. இந்த பதவியில் இருப்பவர்களில் சாதாரணமா முதுநிலைக் கல்வி பயின்றவர், அல்லது எம்.ஃபில் படிச்சவர் ஏன் டாக்டரேட் செய்தவர்னு பல விதமா கல்வித் தகுதிகள் கொண்டவங்க இருப்பாங்க. ஆனா இந்த பதவிக்கான அடிப்படைத் தகுதி என்பதைத் தான் சட்டம் கணக்கில் எடுத்துக் கொள்ளும். இன்ன படிச்சிருக்கனும். இத்தனை வருஷம் குறைந்த பட்சம் இதற்கு முந்தின கேடர் அல்லது பதவியில் சர்வீஸ் செய்து இருக்கணும் என்பது தான் அடிப்படை தகுதி. இப்ப உங்களையும் வேலாயுதம் சாரையும் கம்பேர் செய்யும் போது இரண்டு பேரும் கொண்டிருக்கும் சர்வீஸ் அல்லது கல்வித் தகுதியை வச்சிப் பார்க்க கூடாது. விரிவா சொல்றேன் கவனிங்க‌

அசிஸ்டண்ட் ப்ரொபசர் பதவி எத்தனை காலியாயிருக்கு. உதாரணத்திற்கு 10 என வைத்துக் கொள்ளுங்கள் அசிஸ்டண்ட் ப்ரொபசர் பதவி லெக்சரர் பதவியிலிருந்து பதவி உயர்வு தந்து நிரப்பப்பட வேண்டும் என்பது விதி லெக்சரர் பதவியில் இருப்பவரில் சீனியாரிட்டிபடி முதல் 10 பேர் பெயர் . தகுதிப் பட்டியல் தயாராகிறது. இந்தப் பட்டியலில் இடம் பெற்ற 10 பேரும் சமம். இவர்களின் வயது, கல்வித் தகுதி இவையெல்லாம் பதவி உயர்வுக்கான நிபந்தனையில் இல்லையல்லவா. ஆகவே இவர்கள் சட்டத்தின் முன்பு சமம என சொல்லப்படுகிறது. இவர்களுக்கு தரப்படும் சம்பள விகிதம் (pay scale); சட்டப்படியான பாதுகாப்புனு சொல்லனும். நமது இந்திய அரசமைப்பின் அடிப்படை உரிமையில் ஷரத்து 14 இதைத் தான் சொல்லுது

The State shall not deny to any person equality before the law or the equal protection of the laws within the territory of India. 

அரசு எந்த ஒரு நபருக்கும் சட்டத்தின் முன் சம உரிமையையோ அல்லது சட்டத்தின் வழியான பாதுகாப்பில் சமத்துவத்தையோ மறுக்கலாகாது 

இதுக்கு ஒரு நல்ல வழக்கு உதாரணம் கூட இருக்கு. Savitha vs Union of India என்ற வழக்கில் நம்ம சுப்ரீம் கோர்ட் இந்த மாதிரியான குழப்பத்துக்கெல்லாம் முற்றுப் புள்ளி வைக்கிற மாதிரி விளக்கம் சொல்லிருக்காங்க

all relevant considerations are the same, persons holding identical posts and discharging similar duties should not be treated differently.

நீங்களும் வேலாயுதம் சாரும் ஒரே பதவியில் இருந்தீர்கள்

நீங்களும் வேலாயுதம் சாரும் ஒரே பதவி உயர்வுக்கு கருதப்பட்டீர்கள்

உங்கள் இருவருக்குமான பதவி உயர்வுக்கான தகுதி ஒன்றானது

உங்களுடைய பதவி உயர்வுக்குப் பின் நீங்கள் இருவரும் செய்யப் போவது ஒரே தன்மையுடைய வேலை

பதவி உயர்வுக்கு பின்பு உங்கள் இருவருடைய பதவியும் ஒன்று தான்”

"ரொம்ப தாங்ஸ் ப்ரொபசர். இதை வைத்தே ஒரு பெட்டிஷன் கல்லூரி கல்வி இயக்குநருக்கு அனுப்பி பார்க்கிறேன். அதுவும் சரி வரலைன்னா வழக்குக்குப் போகலாம். நான் கிளம்பரேன் ப்ரொப்சர்

”ஆல் தி பெஸ்ட் பெருமாள்; வழக்குக்கெல்லாம் போக தேவை இருக்காதுனு நினைக்கின்றேன். விரிவா இயக்குநருக்கு கடிதம் எழுதினீங்கனா அதுவே போதும். அதுக்கு உங்க சொந்தக்கார் வக்கீல் இருக்காருனு சொன்னீங்களே அவரை வச்சிக்கிட்டு எழுதுங்க. இயக்குநரை நேரில் சந்தித்து பேசுங்க. சரியாய்டும்”

தொடர்புடைய படைப்புகள் :

2 thoughts on “இந்திய அரசமைப்பு வழங்கும் அடிப்படை உரிமைகள் – 7

 • October 11, 2011 at 6:10 am
  Permalink

  அன்புடன் திரு.சந்திரமௌளீஸ்வரன் அவர்கட்கு!
  வணக்கம்!
  எனக்கு ஒரு விளக்கம் வேண்டும்.

  உங்கள் பெயர் பற்றியதே அது. முதல் உங்கள் மெயர் சந்திரமௌளீஸ்வரனா? அல்லது சந்திரமௌலீஸ்வரனா?
  இப்பெயரின் கருத்தென்ன?
  நான் சமீபத்தில் ஜேர்மன் சென்றபோது அங்குள்ள சிவன் கோவில், சந்திரமௌலீஸ்வரர் என எழுதியிருந்தது.
  அப்போ என் மருமகள் “சந்திர விளங்குகிறது; மொலீஸ்வரர் என்றால் என்ன? கருத்து எனக் கேட்டார்”- நான் அது
  சமஸ்கிருதச் சொல் கருத்துத் தெரியாதெனக் கூறினேன்.
  கூகிளிலும் பதில் கிடைக்கவில்லை.
  தயவு செய்து தெரியப்படுத்தவும்.
  என் மின்னஞ்சல் johan.arunasalam@gmail.com
  நன்றி

  Reply
 • September 12, 2011 at 7:19 am
  Permalink

  அன்பின் மௌளி – அருமை – அழகாக நன்றாகப் புரிகிறது. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்வதன் பொருள் நன்கு விளக்க்ப் பட்டிருக்கிறது. நல்வாழ்த்துகள் மௌளி – நட்புடன் சீனா

  Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : September 9, 2011 @ 11:04 pm