உறவில் திருமணம் ….ஒரு ஷொட்டு!!!

.

ஒரு காலத்தில் உறவில் திருமணம் என்பது நம்மிடையே அதிகம் காணப்பட்டு வந்தது. பின் விஞ்ஞானரீதியாக உறவுத் திருமணம் மூலம் பிறக்கும் குழந்தைகளிடம் சில குறைபாடுகளும், பிரச்சனைகளும் ஏற்பட வாய்ப்பு அதிகம் என்ற கருத்து வைக்கப் பட்டதால் அத்தகைய திருமணம் படிப் படியாக குறைய ஆரம்பித்தது. இது ஒரு விதத்தில் ஒப்புக் கொள்ளப் பட்டாலும், இதனால் சில நல்ல விஷயங்களையும்  இழந்து விட்டோமோ என்று தோன்றுகிறது.
 
இன்றைய உறவுகள் சங்கிலித் தொடர் போல் இல்லாமல் சிறு சிறு தீவாகக் காணப்படுகிறது. உறவில் திருமணம் குறைந்தது கூட இந்நிலைக்கு ஒரு காரணமாக இருக்கலாம். சொத்துக்காக மட்டும் இன்றி பலமான உறவு பாலத்திற்கும் உறவில் திருமணம் பெரிதும் துணை புரிந்ததை மறுபதற்கில்லை. புகுந்த வீடும், பிறந்த வீடும் ஒன்றுக்குள் ஒன்றாகி இருந்ததால், திருமணம், பண்டிகை, மற்ற முக்கிய  தினங்களில் எல்லோரும் பொறுப்புகளை பகிர்ந்துக் கொள்வதுடன், மிகுந்த ஈடுபாட்டுடனும் ஆசையுடனும் கலந்துக் கொண்டு உறவின் பெருமையை மேம் படுத்தினர். தம்பதிகள் இடையே சிறு சிறு கருத்து வேறுபாடோ, பிரச்சனைகளோ வந்தாலும் பாதிப்பு எல்லோருக்குமே என்பதால், அதிகம் வளரவிடாமல் விரைவிலேயே தீர்வும் காணப் பட்டது. உறவின் மதிப்பும் பலமும் உணரப் பட்டது.
 
இன்று குடும்பத்தின்  வெளியே திருமணம், அதையும் தாண்டி ஜாதி மதம் பாராமல் செய்யப் படுவது ஒரு வகையில் ஆரோக்கியமாக இருந்தாலும் உறவுகள் மேம் பட அது கட்டாயம் துணைப் புரிவதில்லை. மேலும் திருமணம் போதும் மற்ற விசேஷ நாட்களிலும் அந்தந்த உறவிற்கான , மாமா, அத்தை பாட்டன், பாட்டி, பெரியப்பா, சித்தப்பா இவர்களுக்கான முக்கியத்துவம் பிரதானமாகக் கருதப் படுவதில்லை. நெருங்கிய சொந்தங்களிடமும்  ஒரு ஈடுபாடில்லாமல் கலந்துக் கொள்வதுடன் ஒரு தயக்கத்துடன் கூடிய அந்நியத் தன்மை தான் காணப் படுகிறது. இன்னும் சொல்லப் போனால் சிலக் குடும்பங்களில் யார் யார் தங்கள் உறவு என்றுத் தெரியாமலே இருக்கின்றனர். 
 
முன் போல் எல்லோ உறவுகளோடும் அன்னோன்னியமாக இருக்க முடிவதில்லையே என்று நினைக்கத் தோன்றுகிறது. இதற்காகவேனும் உறவில் திருமணம் இருந்தால் நன்றாக இருக்கும் என்று மனம் ஏங்கத் தான் செய்கிறது .
 

தொடர்புடைய படைப்புகள் :

One thought on “உறவில் திருமணம் ….ஒரு ஷொட்டு!!!

 • May 26, 2012 at 7:18 pm
  Permalink

  தற்காலத்தில் பெண்களிடத்தில் வேலைக்கு செல்ல வேண்டும் என்ற எண்ணம் வலுவாக இருக்கின்றதது அதை வரவேற்கின்றேன் மேலும் வேலையை கற்றுக்கொள்ளும் இடத்தில் பெண்கள் ஆண்களிடம் மனதை பறிகொடுத்து விட்டு தன்னுடைய உறவினா்களை மறந்து விட்டு வாழ நினத்தால் வாழலாம் வழியாஇல்லை பூமியில் என்ற எண்ணம் வளா்ந்த பின் தன்னுடைய இல்வாழ்க்கை பயணத்தை தொடா்கின்றனா். இடையில் கருத்து வேறுபாடு காரணமாக இல்வாழ்க்கை பயணம் தொடர முடியாமல் முடிவில் தாய் தந்தையரிடம் சரணடைந்துவிடுகின்றனா் இல்லையெல் தற்கொலைக்கு துணிந்துவிடுகின்றனா் இதற்கு காரணம்
  1.அரசின் சட்டதிட்டங்கள்
  2.தாய் தந்தையர்கள் குழந்தைகள் மீது கவனம் இல்லாமை
  3.வரதட்சனை கொடுமை
  4.ஐாதி,மதம்,இனம் என்ற உணா்வு இல்லாமல் ஆணும் பெண்னும் பழகுவது
  5.தனி மனிதனின் வருமானம்
  பெண்களே நிமிர்ந்து நில்லுங்கள்! சிந்தித்து செல்படுங்கள்! தாய் தந்தையர்களின் உணா்வுக்கு மதிப்பளியுங்கள்! பெண்களே பொற்காலம் உங்கள் கையில்

  Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : October 20, 2011 @ 10:24 am