நோயும் வேண்டாம்! மருந்தும் வேண்டாம் !
ஒரு தனியார் தொலைகாட்சியில் ஒரு நிகழ்சியின் ட்ரைலர் பார்க்க நேர்ந்தது. அதாவது மூடபடாத ஆழ் துளை கிணறுகளில் விழும் குழந்தைகளை காப்பாற்ற ஒரு கருவி கண்டுபிடித்திருப்பதாக காட்டினார்கள். நல்ல விஷயம் தான். ஆனால், ஆழ் துளை கிணறுகள் தோண்டும் போது மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிகை நடவடிக்கை பற்றி சிறிதும் கவலைபடாமல், குண்டக்க மண்டக்க செய்து விட்டு, அசம்பவிதம் நடைபெற்ற பிறகு, அதை சரி செய்ய போராடுவது, எந்த விதத்தில் நியாயம்?
உதாரணதிற்கு ஒரு சில சமுதாய விழிப்புணர்வு விளம்பரங்களை பார்போம்: –
> புகையினால் புற்று நோய் உண்டாகும்!
> மது வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு!
> மரம் வளர்போம்! சுற்று சூழலை பாதுகாப்போம்!
> தண்ணீர், மின்சாரம், எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துங்கள்!
மேற்கூறிய விஷயங்களை பற்றி சற்று விரிவாக பார்போம்: –

அசோகர் மரம் நட்டார், குளம் வெட்டினார் என்று புத்தகத்தில் படித்ததொடு மட்டுமல்லாமல் நமது முன்னொர்கள் அதன் பலனையும் அடைந்தார்கள். ஆனால் நாமோ, படித்து தான் தெரிந்து கொண்டோம். விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாக, மரங்களை வெட்டி போட்டு விட்டு சாலைகளாக உருமாறி விட்டன. இப்போது, ஒசோனில் ஓட்டை விழுந்து விட்டது, சுற்று சூழல் மாசுபட்டுவிட்டது என்றல்லாம் புலம்பி, மீண்டும் வீட்டிற்கு ஒரு மரம் வளர்ப்போம், என்று கூறி இப்போது எந்த விழாவிலும் மர கன்று குடுப்பது ஃபாஷனாகி விட்டது. மரங்களை வெட்டி விட்டு, புலம்பி இருக்கவும் வேண்டாம்.. இழந்ததை மீட்க மருந்தாக மீண்டும் மரத்தை நட சொல்லிருக்கவும் வேண்டாம்.
வசதியாக வாழ பழகிய மக்கள், அந்த வசதியில் ஒரு சிறு குறை இருந்தாலும், கோபப்படுவது நியாயம்தானே! உற்பத்தி எவ்வளவு என்பதை கணக்கிட்டு, அதற்கு ஏற்ப மக்களுக்கு விநியொகித்து இருந்தால், மின் வெட்டு, சிக்கன நடவடிக்கை, விலை ஏற்றம் என்று மக்களை அல்லல் பட வைப்பதில் என்ன நியாயம்? மக்களுக்காக ..அரசாங்கமா? அல்லது அரசாங்கதிற்காக..மக்களா? (இது ஒரு தனி கட்டுரையாக வரும்) என்பதை சிந்திக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். மழை வருவதற்கு முன்னரே, அதை சேமிக்கும் வழிகளை யோசித்திருந்தால், பின்னர் மழை பெய்து, ஊரே வெள்ளக் காடாய் ஆன பிறகு, வேட்டியை மடித்து கொண்டு போய் சீரமைப்ப்பு பணிகளை பார்கக வேண்டிய கட்டாயமில்லை.
முத்தாய்பாக, கம்ப்யூட்டரை செயல் இழக்க செய்ய, வைரஸ்ஸை புகுத்தி அதை செயல் இழக்க செய்யவதோடு நில்லாமல், அதை குணமாக்க, (பணம் சம்பாதிப்பதற்காக), அந்த வைரஸ்ஸை உருவாக்கியவர்களே, அதற்குண்டான மருந்தையும் தருவது போல் தான் இது உள்ளது.
எங்களுக்கு நோயும் வேண்டாம்! மருந்தும் வேண்டாம்!
//இந்த இரண்டு பொருட்களுக்களை விற்பதற்கு எந்த விளம்பரமும் கிடையாது என்பது தான். //
ஊடகங்கள் இவற்றை விளம்பரப்படுத்துவதில்லை என்று கட்டுப்பாடு விதித்துக் கொண்டுள்ளன. அதனால் தான் பிரபல சாராய கம்பெனிகள் மினரல் வாட்டர் அல்லது சோடா விற்பது போல எல்லாம் விளம்பரங்கள் கொடுக்கிறார்கள். அந்த பிராண்டில் மினரல் வாட்டரோ, சோடாவோ கண்டிப்பாக கிடையாது என்பது 700-ஆவது மில்லியன் குழந்தைக்கு கூடத் தெரியும். அதுவும் விளம்பரத்தில், சுறுசுறுப்படையுங்கள், புத்துணர்ச்சி பெறுங்கள் என்றெல்லாம் வாக்கியம். அடேய், மினரல் வாட்டர் குடிச்சா என்னாங்கடா புத்துணர்ச்சி வரும்?! கவனமாக மினரல் வாட்டர் என்பதை விளம்பரத்தில் பயன்படுத்தியே இருக்க மாட்டார்கள். அதில் உள்ள புகைப்படத்தில் மிகவும் சிறியதாக மட்டுமே இருக்கும்.
எப்படியெல்லாம் யோசிக்கிறாய்ங்க?!
இதே போல அஜால்,குஜால் மருத்துவர்கள் (என்று சொல்லிக் கொள்கிறவர்களின்) விளம்பரங்களையும் நிறுத்த வேண்டும். அப்படி நிறுத்தி விட்டால் பல பத்திரிகைகளும், தொலைக்காட்சிகளும் இழுத்து மூடப்படும் என்பது வேறு விஷயம்!