வரவு எட்டணா செலவு பத்தணா !

 

வேட்பாளர் செலவை அரசே ஏற்கும் என்ற முடிவுக்கு வந்த தேர்தல் கமிஷனுக்கு ஒரு கேள்வி? 
 
அரசு ஏற்கும் செலவிற்கு மக்களின் வரி பணம் தானே மூலதனம்.  மக்களுக்காக சேவை செய்ய  மக்களின் வரி பணத்தையே எடுத்து செலவு செய்து எதற்காக ஒரு பிரதிநிதியை  தேர்ந்தெடுக்க வேண்டும்?  ஏற்கனவே தேர்தல் செலவே மக்கள் வரி பணத்தில்தான் செலவிடபடுகிறது.  மேலும் வேட்பாளரின் செலவையும் அரசே ஏற்கும் என்பது எந்த விதத்தில் நியாயம்?
 
தற்போது, திருச்சி தொகுதியின் வெற்றி பெற்ற வேட்பாளர் மரணமடைந்ததால் இடை தேர்தல் நடைபெற்றது. ஆனால், சந்திரசேகர் ராவ் போன்ற வெற்றி பெற்ற வேட்பாளர்,  தனது கோரிக்கையை வலியுறுத்தி  தனது MP பதவியை ராஜினாமா செய்து மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.  நாட்டு நலனுக்குக்காக    தனது MP பதவியை ராஜினாமா செய்தவர், மீண்டும் போட்டியிட்டால்,  அந்த தேர்தல் செலவை அரசே ஏற்குமா?  நாடு நலனில் அக்கறை உள்ளவர்வர்கள், மக்கள் வரி பணத்தை இப்படி வீனடிப்பர்களா?  ஏற்கனவே  நமது பட்ஜெட்டில் துண்டு விழுகிறது! இப்படியே எல்லா செலவையும் அரசே ஏற்கும் பட்சத்தில், துண்டல்ல… எட்டு முழம் சேலையே விழும். 
 
வரவுக்கே வழி இல்லாதபோது, செலவை உயர்த்தி கொண்டே போனால், மக்களின் கதி என்னாவது?
 
எனவே, சரியான காரணம் இல்லாமல் ஒரு மக்கள் பிரதிநிதி தனது பதவியை ராஜினாமா செய்தால், அந்த தொகுதியின் இடை தேர்தலுக்கு ஆகும் செலவை அந்த வேட்பாளரோ அல்லது அவர் சார்ந்த கட்சியோ  ஏற்க வேண்டும் என்று சட்டம் வந்தால் தான், செலவை குறைக்க முடியும். செய்யுமா தேர்தல் கமிஷன்வரவு எட்டணா செலவு பத்தணா !

தொடர்புடைய படைப்புகள் :

  • தொடர்புடைய படைப்புகள் எதுவும் இல்லை !

One thought on “வரவு எட்டணா செலவு பத்தணா !

  • November 11, 2011 at 9:44 am
    Permalink

    Mangudi minare supera eluda aarambichete valthukkal.

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : November 9, 2011 @ 11:16 pm