விளம்பரங்களா … விஷமங்களா

ஒருவர் :  வர வர தொலைகாட்சியில் நிகழ்சிகளையே பார்க்க முடியலே… விளம்பரங்களா போட்டு கொல்றாங்க…
மற்றவர்:  ஏங்க… விளம்பரங்கள்தான் எனக்கு சாப்பாடே  போடுது!
ஒருவர் :  நீங்க விளம்பர எஜென்சில் வேலை செய்றீங்களா?
மற்றவர் :  அட .. நீங்க வேற…. சீரியல் நடுவில வர விளம்பரம் போதுதான் என் மனைவி சாப்பாடு போடுவா… அதான்.                                   
 
தெரிந்த ஜோக் தான் ஆனால்… தெரியாத பல உண்மைகள் உள்ளன.  வெள்ளிதிரையில் இருந்து, சின்ன திரைக்கு, அங்கிருந்து குட்டிதிரைக்கு (அதாங்க… விளம்பரங்கள்).. படையெடுத்த திரையுலக நட்சத்ரங்கள் , கிரிக்கெட் வீரர்கள் எத்தனை பேர். நேற்றைய சத்யராஜ் மற்றும் பிரபு முதல் இன்றைய சந்தானம் வரை எவ்வளவு பேர்., கவாஸ்கர் முதல் ரெய்னா வரை, வெள்ளிதிரையில் மற்றும் விளையாட்டில் சம்பாதித்தது போதாது என்று இந்த குட்டிதிரையிலும் இவர்கள் கல்லா கட்டுவது ஊரறிந்த உண்மை.  இவர்கள் கல்லா கட்டுவது ஒருபுறம் இருக்கட்டும்… இதன் மூலம் கல்லா கட்டும் மற்றவர்களை பார்போம்..
 
அந்த பொருட்களின் உரிமையாளர்கள்,  பத்து  வினாடிகளில் சொல்ல வந்த விஷயங்களை அனைத்தையும் மூளையை கசக்கி கொட்டி, பார்வையாளர்களை தன பக்கம் இழுக்கும் விளம்பரத்தை உருவாக்குபவர்கள்.. அதை படமாக்குபவர்கள்…காட்சிக்கு தகுந்த செட்டுகளை  உருவாக்குபவர்கள்…  நட்சத்ரங்களோடு   கூட பணி புரியும் துணை நடிகர்கள்… வெட்டிங் & ஓட்டிங் மற்றும் அந்த விளம்பரத்துக்கு முழு வடிவம் கொடுபவர்கள்..  விளம்பர ஏஜென்சிகள்… கடைசியில் தொலைகாட்சி சேனல்கள் வரை… இந்த விளம்பரத்தின் மூலம் சம்பாதிபவர்கள் அதிகம்..
 
விளம்பரங்களின் முக்கிய குறிக்கோள்…  பொருட்களை பற்றி மக்களுக்கு எடுத்துரைபதுதான்..  ஆனால்.. அதையா இந்த விளம்பரங்கள் நமக்கு கூறுகின்றன…  உதாரணத்துக்கு … ஒரு ஷாம்பூ விளம்பரம்… அந்த ஷாம்பூயை  உபயோகித்தால், முடிகள் பளபளக்கும்.. உறுதியாகும்… என்று காட்டுவார்கள்..  ஆனால், அந்த விளம்பரத்தின் அடியில், கண்ணுக்கே தெரியாத வகையில் சிறிய எழுத்தில், இந்த விளம்பரம் கிராபிக்ஸில் எடுக்கப்பட்டது என்று வரும்.  இதை எவ்வளவு பேர் பார்த்திருக்க முடியும்…   நடிகர்கள்… நடிகைகள்… விளையாட்டு வீரர்களை வைத்து எடுக்கும் போது.. அந்த நட்சரங்களைதான் நாம் பார்ப்போமே தவிர.. இந்த சின்ன சமசாரங்கலையா பார்க்க போகிறோம்?..  சமீபத்தில், ஒரு குளிர்பானத்தை பற்றி ஒரு சர்ச்சை எழுந்தது…  அப்போது… அந்த குளிர்பான விளம்பரத்தில் நடித்த நடிகர் நடிகை மற்றும் கிரிக்கெட் வீரர்கள் மீது குற்றஞ்சாட்டினர்.  ஆனால்,  அவர்களோ… நடிப்பது மட்டுமே எங்களது வேலை.  மற்றபடி.. அந்த பொருட்களை பற்றி எங்களிடம் குறை கூற கூடாது என்று நழுவினர்.  பிறகு,  எங்களது பொருள் தரமானது என்று வேறு ஒரு விளம்பரம் வந்தது என்பது தனி விஷயம்.  
 
சரி… விஷயத்திற்கு வருவோம்…  நாம் காசு கொடுத்து வாங்கிய தொலைகாட்சியில், நாம் செலவழிக்கும் மின்சாரத்தில்.. நாம் காசு  கொடுத்து வாங்கிய அந்த பொருட்களின் மூலம் எவ்வளவு பேர் சம்பாதிக்கிறார்கள்.. ஆனால்..  நம்மை ஏமாளியாகுவதுதான் கொஞ்சம் அதிகம்.   எனவே விளம்பரங்களின் மூலம் விஷயங்களை சொல்லுங்கள்… விஷமங்களை  சொல்லாதிர்கள் என்பது தான் எங்களின் வாதம்..

தொடர்புடைய படைப்புகள் :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : November 14, 2011 @ 10:40 pm