யோசியுங்கள் !! காதலர்களே !!!
இன்று நடை பெரும் பத்து திருமணங்களில் 7 காதல் திருமணமாகத் தான் இருக்கிறது . ஆனால்இதற்கு குடும்பத்தில் உள்ள எதிர்ப்பும் குறைந்த மாதிரித் தெரியவில்லை. இரு குடும்பங்களின் எதிர்ப்பை மீறி மணம் புரிபவர்களின் நிலை சில சமயம் மிகவும் கேள்விக் குறியாகிவிடுகிறது. இதை தவிர்க்க இவர்கள் முக்கியமான சில விஷயுங்களை கவனத்தில் கொள்வது நல்லது.

இதில் இன்னுமொன்று கவனிக்க வேண்டியது; அடுத்தக் கட்டமான குழந்தை பிறப்பை பற்றி. முழுமையான புரிதலுக்கு பின் தான்குழந்தை என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். பேரு காலம் திருமண வாழ்வின் முக்கியக் கட்டம் . அந்தத் தருணத்தில் பெரியவர்களின் அரவணைப்பும் அன்பும் ஆதரவும் பெண்களுக்கு மிகவும் தேவை. என்னத்தான் கணவர் அன்பாக இருந்தாலும் இந்த விஷயத்தில் பெண்களின் எதிர்பார்ப்பு வேறு; பெற்றவர்களின் அருகாமையை மனம் விரும்பும்; அது மிகவும் இயற்கையும் கூட. அது இல்லாத பட்சத்தில் ஒருவரை ஒருவர் குறைக் கூறிக் கொள்வதுடன் சுமுகமான சூழலையும் இழக்க நேரிடும். கரும்பாக இனிக்க வேண்டிய வாழ்கை வருத்தமும் கசப்பும் ஆக மாறி விடக் கூடும். சிலக் காரணங்களால் மண முறிவு ஏற்படும் போது குழந்தைகளின் நிலைக் கண்டு மனம் பதைக்கிறது. ஒன்றும் அறியாத அந்தக் குழந்தைகள் அலைகழிக்கப் படுவதும், அவர்களுக்கு ஏற்படும் மன உளைச்சலும், அழுத்தமும் எதிர் காலத்தையே கேள்விக் குறி ஆக்கிவிடுகிறது .
அதனாலேயே குறைந்த பட்சம் ஒரு தரப்பு ஒப்புதலுடனவது மணம் செய்தால் திருமண வாழ்வு அதிகம் நீடிக்க முடியும். காதல் மணம் புரிந்து கொள்பவர்கள் இதைக் கவனத்தில் கொண்டு செயல் பட்டால் வாழ்க்கைப் பயணிக்கும் பாதை கரடு முரடாக இருந்தாலும் தைரியமாக செல்ல முடியும்.