ஜெவுக்கு தெரிந்த ‘தெரியாது’
ஓவர் நைட்டில் ஒரேடியாக எல்லா விலைகளையும் உயர்த்திவிட்டார் அம்மா!
பால் விலை, பேருந்து கட்டணம் என மிகப் பெரிய விலையேற்றம் அறிவித்திருக்கிறார். பல ஆண்டுகாலமாக விலையேற்றமே செய்யாததால் அனைத்து துறைகளும் பெரும் நஷ்டத்தில் இயங்குவதால் இந்த விலையேற்றம் தவிர்க்க முடியாதது என்று காரணம் சொல்லப்படுகிறது.
அதெல்லாம் சரி தான்! ஆனால் இன்றைக்கு விலையேற்றத்தை அறிவித்து விட்டு நாளைக் காலையிலிருந்து அது அமலுக்கு வரும் என்று சொல்வது சரியானதல்ல!
பல இடங்களில் மக்கள் கொந்தளித்து போராட்டமெல்லாம் நடத்தியிருக்கிறார்கள். குறைந்தபட்சம் அடுத்த வாரத்திலிருந்து இந்த விலை உயர்வு என்றாவது அறிவித்திருக்க வேண்டும்.
அடுத்ததாக மின் கட்டண உயர்வும் இருக்கிறது என்று பேச்சு அடிபடுகிறது.
இப்போதைக்கு உள்ள நிலையில் மின் கட்டணத்தை உயர்த்தினால் மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி அலை பெருகும். இன்னும் இரண்டு வருடங்களுக்கு தேர்தல் எல்லாம் இல்லாத நிலையில் மக்களின் அதிருப்தி ஒரு விதத்தில் பெரிய பிரச்னை இல்லை என்றாலும், உடனடியாக அவசரப்பட்டு மின் கட்டண உயர்வை ஜெ. அறிவிப்பாரா என்பது சந்தேகமே!
டிராஃபிக் ராமசாமி, பஸ் கட்டண உயர்வு மக்கள் விரோதமானது என்று வழக்கு தொடர்ந்திருக்கிறார். கட்டண உயர்வு குறித்து நாளேடுகளில் அரசு முழுபக்க விளம்பரம் தர வேண்டும் என்று கோர்ட் உத்தரவு அளித்திருக்கிறது. இதில் தனியாக விளம்பரம் எதற்கு என்று புரியவில்லை. அதான் கட்டண உயர்வு குறித்து மறுநாளே அனைத்து நாளேடுகளிலும் முழுபக்க தலைப்புச் செய்திகல் வந்திருந்தனவே! முழு பக்க விளம்பரங்கள் கொடுப்பதால் நஷ்டம் என்று மீண்டும் கட்டணத்தை உயர்த்தாத வரை சரி!
ஏற்கனவே சமச்சீர் கல்வி, மக்கள் நலப் பணியாளர்கள் நீக்கம் ஆகியவற்றில் அரசைக் கண்டித்து நீதிமன்ற உத்தரவுகள் வந்திருக்கும் நிலையில் பேருந்து கட்டண உயர்வு விஷயத்தில் என்ன தீர்ப்பு வரும் என்று அனைவரும் ஆவலோடு எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள்!
ooOoo

அவர் பெங்களூர் வந்து செல்லும் ஒவ்வொரு முறையும் கர்நாடக அரசுக்கும், தமிழக அரசுக்கும் லட்சக்கணக்கில் செலவு! இந்த மாதிரியான சமயங்களில் விடியோ கான்ஃபரன்ஸிங் மாதிரியான லேட்டஸ் டெக்னாலஜிகளை உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.
இப்போதைக்கு உள்ள நிலையில் நாட்டில் யார் பெரியவர் என்ற எண்ணம் வளர்ந்து வருவது போல தெரிகிறது. ஒவ்வொரு சம்பவத்திலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் பெரிதா அல்லது நீதித் துறை பெரிதா என்று இரு தரப்புமே தாங்கள் தான் பெரியவர்கள் என்று நிருபித்துக் கொள்ளத் துடிப்பது போல தெரிகிறது.
இரண்டுமே நாணயத்தின் இரு பக்கங்கள் என்பது தான் உண்மை! சொல்லப்போனால் நீதித்துறை இருப்பதால் தான் அரசியல்வாதிகளின் பல ஊழல்கள் வெளிச்சத்திற்கு வந்து கொண்டிருக்கின்றன.
ooOoo
திஹார் ஜெயிலிலேயே இனிமேல் 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கை விசாரிக்கலாம் என்று உத்தரவு வந்திருக்கிறது. ஆக இவ்வளவு நாட்களாக வழக்கு விசாரணையின் போதாவது வெளியுலகைப் பார்த்தவர்களுக்கு இனிமேல் அதற்கும் ஆப்பு!
அந்தக் காலத்தில் தியாகராஜ பாகவதர் நடித்த ‘ஹரிதாஸ்’ மூன்று தீபாவளிகளைக் கடந்து வெற்றிகரமாக 1,000 நாட்களுக்கும் மேல் ஓடிக் கொண்டிருந்ததாம். போகிற போக்கைப் பார்த்தால் ஹரிதாஸின் 1,000 நாள் ரெக்கார்டை திஹார்வாசம் முறியடித்து விடும் போலிருக்கிறது.
ooOoo
சென்னையின் மத்தியில் ‘ஆற்காடு ரோடு’ என்று ஒன்று இருக்கிறது. நகரின் மிக முக்கியமான சாலை இது. போரூரிலிருந்து சென்னை ஜெமினி மேம்பாலம் வரையிலுள்ள இந்த ரோட்டில் மிக சமீப காலங்களில் அரசியல்வாதிகள் யாருமே பயணிக்கவில்லை போலிருக்கிறது. சின்ன மழை பெய்தாலே ஆற்காடு ரோடு, ஆற்காடு குட்டையாக மாறி விடுகிறது. தேங்கி நிற்கும் தண்ணீரில் ஆங்காங்கே மரணப் பள்ளங்கள். இதைத்தவிர இந்த ரோட்டில் சிக்னல்கள் எல்லாம் பெயருக்கு தான் இருக்கின்றன. பெரும்பாலான இடங்களில் யாருமே சிக்னலை மதிப்பதேயில்லை.
ஒரு வேளை ’ஆற்காட்டார்’ பெயரில் இருப்பதால் அரசு கவனிக்காமல் இருக்கிறதா ? அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்.
ooOoo
hi Ramesh, ongaludaya katturai on jaya sooperoo’ sooper. aana jaya onnum thirundhara vazhiya theriyala. Kalaingare evvlovo thevalai. ellam vidhi. Inniki news jaya kodanadukku poyi 4 vaaram restam. oru velai anga irundhu Bangaloorukku short cut route Mysore vazhiya irukkunnunutu ianga poralonnu therila. mothathula jaya rajyam total waste.
yes U correct..
J waste….