என் மகள்
அண்டங்கள் தாண்டி
ஆகாயத்தில் உலாவும்
மீன்களில் ஏதோ
இன்று என்கைகளில்
கலை மான் என்பேனா!
சத்திய மான என் சக்தி இது
சிஷ்டியில் விளைந்த
மூல சொத்து அது
பாலில் ஊறி
வளர்ந்த மலர்
பாரில் சாதிக்க
வந்த சிலை
கண்ணசைவில் காவியம்
முட்டி தட்டி தடுமாறும்
உதட்டசைவில் ஒவியங்கள்
நலிந்து மெலிந்து சிதையும்
நவசைவில் நாதங்கள்
பிறண்டு வரண்டு வாடும்
பூமிக்கு புது வரவாக
பூவுக்கு புது இனமாக
நாளைக்கு ஒரு தாயாக
இன்றைக்கு என் மகளாக