வாழ்த்துப்பா

அழகாய் அருமையாய்
ஆல் போல் தழைத்தாய்
இயல்பாய் இனிமையாய்
ஈந்தாய் அழகுத்தமிழை
உயர்வாய் உன்னதமாய்
ஊனில் நிறைந்தாய்
எனக்கும் ஏனைக்கும் ஐயமின்றி
-தமிழ்
எழுத்துக்களை அச்சேற்றி-வளரும்
எழுத்தாளர்களை ஊக்குவித்து
ஒப்புமையேதுமில்லாத தமிழை
ஓங்கி வளர்க்கும் தமிழோவியத்தை
அஹ்தே அனைவரின் சார்பில் வாழ்த்துகிறேன்.
பிறந்த நாள் காணும்
முத்தான தமிழோவியம்
பத்தாவது ஆண்டில் அடியெடுத்து
வைக்கும் நன்னாளில்
ஓவியத்தின் இரு கண்களாய்த்
திகழும் கணேஷ்-மீனா அவர்களுக்கும்
எழுத்தாளர்கள் வாசகச்சொந்தங்களுக்கும்
மனமார்ந்த நன்றி மலர்களைத் தூவுகின்றேன்.
பற்பல பிறந்த நாட்களைக் கொண்டாடவும்
புதிதாய் மென்மேலும்
மெருகேறவும் தமிழோவியத்திற்கு
வாழ்த்துகளையும் வேண்டுதல்களையும்
தெரிவிக்கின்றேன்.
 
வாழ்க நின் தளம்
வளர்க நின் புகழ்

தொடர்புடைய படைப்புகள் :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : January 1, 2012 @ 10:01 am