வாழ்த்துக்கள்
பதினோறாவது ஆண்டில் அடி எடுத்து வைக்கும் எங்கள் தமிழோவியத்திற்கு எனது பத்தாயிரம் வாழ்த்துக்கள்!!. தமிழோவியம் ஒரு mixed bag!! எல்லாத் தரப்பு ரசனை உள்ளவர்களுகளையும் ஈர்க்கும் ஒரு முழுமையான படைப்பு. நடப்பு செய்தி, அரசியல், விளையாட்டு, சிறு கதை, கட்டுரை, சினிமா என்று எந்த துறையையும் விட்டு விடாமல் எளிய நடையில் அமைந்திருப்பது கூடுதல் சிறப்பு. புதிதாக எழுதுபவர்களுக்கு வாய்ப்பளித்து அவர்களை ஊக்கு வைப்பதில் தயங்கியதும் இல்லை ,தவறியதும் இல்லை. நாட்டு நடப்போ அரசியலோ யாரையும் புண்படுத்தாமல் அதே சமயம் சொல்ல வேண்டியக் கருத்துக்களை ஆணித்தரமாக பதிவு செய்வதிலும் தனித்து நிற்கிறது.
எல்லாத் தரப்பு மக்கள் ரசனையும் மனதில் கொண்டு படைப்புக்களை வெளி இடும் தமிழோவியத்தின் பத்து வயதை மகிழ்ச்சியோடு கொண்டாடுவோம் மேலும் பல புதிய பொலிவுடன் விரிவடைய ஆசிரியருக்கும் இதற்கு துணைபுரியும் மற்ற நண்பர்களுக்கும் இதயம் கனிந்த நல் வாழ்த்துகள்.